Blog

/Blog

நவராத்திரி கவிதைகள் …….6

வாராய் வாராய்              மஹாசக்தி…! பூக்கள் இன்றைக்கு மலருகையில்-உன் பொற்பதம் சேர்ந்திடத் தவித்திருக்கும் தேக்கிய தேன்துளி யாவினிலும்-அந்த தெய்வக் கனவு தெறித்திருக்கும் பாக்கியம் செய்தோம் பராசக்தி-உன் பொன்நவ ராத்திரி தொடங்கியது ஏக்கம் அச்சம் சோர்வெல்லாம்-அட எப்படி உடனே அடங்கியது தாங்கிய சூலத்தின் முனைகளிலே-நீ துணையென்னும் உறுதி மின்னுதம்மா வாங்கிய வினைகளின் சுமைகளெல்லாம்-உனை வழிபட வழிபடக் கரையுதம்மா தூங்கிய பொழுதிலும் சலங்கையொலி-ஒரு தூரத்தில் தூரத்தில் கேட்குதம்மா மூங்கிலின் துளைவழி கசியுமிசை-உன் மூச்சுக் காற்றெனப் பரவுதம்மா ஆசனம் கொடுப்போம் மலர்தொடுப்போம்-ஓர் ...

எங்கே வைகோவின் துண்டு??

இந்தக் கேள்வி திருவில்லிப்புதூரில் கூடியிருந்த எல்லோருக்கும் ஒருநாள் எழுந்தது. அப்போது வைகோ சிவகாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். திருவில்லிப்புதூர் திருமால் திருக்கோவில் குடமுழுக்கு (சம்ப்ரோக்ஷணம்) விழாவுக்காக,வருகை தந்திருந்தார் வைகோ. அவருடைய தோள்களைத் தழுவிக் கொண்டு முழங்கால் தொட நீளும் கறுப்புத் துண்டைக் காணவில்லை . அனைவரும் அவரை வரவேற்று உள்ளே அழைத்துப் போயினர். பிறகு நண்பர்கள் கேட்டபோது வைகோ விளக்கமளித்திருக்கிறார். “ஆலயங்களுக்குள் நுழையும்போது ஆன்மீகவாதிகள் தோளில் இருக்கும் அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டுதான் உள்ளே செல்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை ...

நவராத்திரி கவிதைகள் ……………..5

 அபிராமியும்…. அபிராமி பட்டரும்….. அர்ச்சகர் மரபில் வந்தவன்தான் -அன்னை ஆட்கொள்ளப் போவதை அறியவில்லை பிச்சியின் பக்தியில் பித்தேறி -வந்த போதை சிறிதும் தெளியவில்லை உச்சி வரையில் ஜோதியொன்று-விசை உந்திச் சென்றதில் சுருண்டுவிட்டான் நிர்ச்சல நிஷ்டையில் ஆழ்ந்தபடி-அவன் நியமங்கள் எல்லாம் கடந்துவிட்டான் செருகிய கண்கள் திறந்துவிட்டால்-அதில் செக்கச் செவேலெனத் தீயிருக்கும் பெருகிய பக்திப் பரவசத்தில் -ஒரு புன்னகை நிலையாய் பூத்திருக்கும் அருகில் இருந்தவர் உணரவில்லை-அவர் அகமோ உயிரோ மலரவில்லை ஒருவகை போதையின் விளைவென்றே-அவர் உளறலை இவனும் அறியவில்லை சுந்தரி ...

நவராத்திரி கவிதைகள்…..4

பீடமேறினாள் படிப்படியாய் பதம்பதிய பீடமேறினாள்-வினை பொடிப்பொடியாய் நொறுங்கும்படி பார்வைவீசினாள் இடிமழையை முன்னனுப்பி வரவுசாற்றினாள்-பலர் வடித்தளிக்கும் கவிதைகளில் வண்ணம்தீட்டினாள் வீடுதோறும் ஏற்றிவைக்கும் விளக்கில் வருகிறாள்-விழி மூடிநாமும் திறக்கும்முன்னே கிழக்கில் வருகிறாள் ஏடுதோறும் பத்தர் சித்தர் எழுத்தில் வருகிறாள்-மனம் வாடும்போது புன்னகையால் வெளிச்சமிடுகிறாள் இல்லையவள் என்பவர்க்கு எதிரில் தோன்றுவாள்-அட எல்லையில்லா பக்திவைத்தால் ஒளிந்து கொள்ளுவாள் மெல்லமெல்ல இதழ்திறந்து மலர்ந்துகொள்ளுவாள்-அவள் முல்லைஅல்லி மல்லிகையில் மணந்து பொங்குவாள் வைத்தகொலு பொம்மைகள்தான் கோள்கள் ஒன்பதும்-அவள் தைத்துத்தந்த பட்டுச்சேலை அந்த வானகம் வைத்தியச்சி வினைகள்வெட்ட இந்த ...

கடைசியில் மனிதன் என்னாகிறான்??

கவிஞர் வைரமுத்து நேற்று மாலை கோவைக்கு வந்தார்.அவருக்கு மிகவும் பிடித்தமான ஊர்களில் கோவையும் ஒன்று. இன்று காலை ஹோட்டல் விஜய் பார்க் இன் என்னும் புதிய மூன்று நட்சத்திர விடுதியைத் திறந்து வைக்கிறார். அதன் உரிமையாளர் திரு. கோவை இரமேஷ், கவிஞருக்கு ஏகலைவனாய் இருந்து அர்ச்சுனனாய் மாறியவர். அது தனிக்கதை. அடிப்படை நிலையிலிருந்து பாடிப்படியாய் முன்னேறியவர் ரமேஷ். குண்டு வெடிப்பு கோவையில் நிகழ்ந்தபோது தனிமனிதராய் பலரைக் காப்பாற்றியவர். அலைந்து திரிந்து ஒரே இரவில் 100 யூனிட் இரத்தம் சேகரித்தவர். கோவையில் சர்க்கஸ் வந்தால் அனாதை இல்லக் குழந்தைகளை அழைத்துச் செல்பவர். தொண்டுள்ளம் மிக்கவர். ...

நவராத்திரி கவிதைகள்………..3

 பொன்னூஞ்சல்     வீசி யாடுது பொன்னூஞ்சல்-அதில் விசிறிப் பறக்குது செம்பட்டு பேசி முடியாப் பேரழகி-அவள் பாதம் திரும்புது விண்தொட்டு ஓசை கொடுத்த நாயகிதான்- அங்கே ஓங்கி அதிர்ந்து ஆடுகிறாள் கூசிச் சிணுங்கும் வெண்ணிலவை-தன் கார்குழல் கொண்டே மூடுகிறாள் பிஞ்சுத் தாரகை கண்திறக்கும்-அவள் பாதத்தின் கொலுசொலி கேட்டபடி கொஞ்சும் மின்னல் கண்திகைக்கும்-அவள் கொடியிடை அசைவதைப் பார்த்தபடி தஞ்சம் தருகிற தாள்களையே-எட்டுத் திசைகளும் சூடும்  தொழுதபடி “அஞ்சேல்” என்றவள் குரல்கேட்க-என் அகம்மிக உருகும் அழுதபடி அல்லைப் பழிக்கும் அடர்நிறத்தாள்-என் ...
More...More...More...More...