Blog

/Blog

மூதறிஞர் ம.ரா.போ.குருசாமி மறைந்தார்

மூத்த தமிழறிஞரும் காந்தீய நெறியாளருமான முனைவர் .ம.ரா.போ. குருசாமி (92) இன்று கோவையில் காலமானார். தமிழிலக்கிய உலகில் நுண்ணிய அறிஞராகவும் தேர்ந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்தவர் இவர். செவ்விலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் சமகால இலக்கியங்களில் வியப்பூட்டும் வாசிப்பும் கொண்டவர் அவர். ஜெயமோகனின் “இன்றைய காந்தி” நூலுக்கு விருது வாங்கித்தர தாமாகவே கங்கணம் கட்டிக் கொண்டு அதற்கான விண்ணப்பங்களை சிரத்தையுடன் நிரப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். பாரதியார் ஒரு பாலம், கம்பர் முப்பால்,கபிலம் உள்ளிட்ட மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். மு.வரதராசனாரை மு.வ. என்று முதன்முதலில் நூல்களில் போடச்செய்தவரும் இவரே. மு.வ, தெ.பொ.மீ. அ.ச.ஞா போன்றவர்களின் தலை மாணாக்கர்.இவர் இளைஞராயிருந்த காலத்தில் திரு.வி.க.வுடன் நெருங்கிப் பழகியவர். “இந்த இளைஞரின் பணிகளால் தமிழ்நாடு ஏற்றம் பெறும்” என்று அன்றே திரு.வி.க. எழுதியுள்ளார். ஆகஸ்ட் 12ல் என்னுடைய 50 நூல்களின் தொகுப்பு நூலாகிய “எழுத்துக் கருவூலம் ” அவரால் வெளியிடப்பட்டது.   சில நாட்களுக்கு முன் ...

அற்புதர்-2

அற்புதருக்கு நாய்க்குட்டிகளைப் பிடிக்கும். அல்ல அல்ல.. அற்புதருக்கு நாய்க்குட்டிகளையும் பிடிக்கும். ஆனால் அவர் அற்புதராயிருப்பதன் முக்கியக் காரணங்களில் ஒன்று, நாய்க்குட்டிகளுக்கும் அவரைப் பிடிக்கும் என்பதே பலநேரங்களில் அற்புதரின் வாகனக் கதவுகளை திறக்கும்போதெல்லாம் வெண்பந்துபோல் ஒரு நாய்க்குட்டி முதலில் வெளியே குதிக்கும். அவருடைய எல்லைக்குள் எல்லா நாய்களும் ஒரேவிதமான தன்மையில வளர்ந்தன. வரவேற்றுக் கொண்டேயிருக்கும் வால்களும் வாஞ்சையைக் கொட்டும் விழிகளுமாய் அவை அற்புதரின் பிரதேசத்தை வலம் வந்தன. பாதங்களைப் பணிபவர்களை ஆசீர்வதித்த அடுத்தநொடியே மெல்ல விலகும் அற்புதரின் கரங்களில் ...

அற்புதர்-1

எல்லோரின் மனவெளிகளிலும் விரிக்கப்பட்டிருந்த மானசீகக் கம்பளங்கள், அற்புதரின் பாதங்கள் பதியும் பொற்கணத்திற்காகக் காத்திருந்தன.பாதங்கள் பதியும் அந்தக் கணத்திலேயே அற்புதங்கள் நிகழுமென்ற எதிர்பார்ப்பும் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.வந்து சேர்ந்த அற்புதரின் பாதங்கள் பூமியின் ஸ்பரிசத்திற்குப் பழகியவை. உலகுக்குத் தர வேண்டிய வரங்கலையெல்லாம் தாவரங்களிலிருந்தும் செம்மண்ணிலிருந்துமே அவருடைய பாதங்கள் பெற்றுக் கொண்டிருந்தன. மனவெளியில் மண்ணின் இயல்புத்தன்மையும் ஈரத்தன்மையும் பரவியிருக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்களின் மானசீகக் கம்பளங்களை மடிக்கத் தொடங்கினார் அற்புதர். ஆங்காங்கே இருந்த அவநம்பிக்கைப் பள்ளங்கள் வெளிப்பட்டதில் பக்தர்கள் அதிர்ந்து நிற்க அந்தப் பள்ளங்களில் மண்ணள்ளிப் போட்டார் அற்புதர். மிகச்சாதாரணராய் இருப்பதைக் காட்டிலும் ஓர் அற்புதம் ...

மணிகர்ணிகை

எனக்கேது தடையென்று எல்லார்க்கும் சொல்வதுபோல் கணக்கேதும் இல்லாமல் கங்குகரை காணாமல் கைகால்கள் விரித்தபடி கங்கை வருகின்றாள்: நெய்து முடியாத நீள்துகிலாய் வருகின்றாள் நிசிகாட்டும் மையிருளின் நிறம்நீங்கி, செம்பழுப்பாய் அசிகாட்டில் இருந்தவளும் ஆர்ப்பரித்து வருகின்றாள்; புடவைக்குள் குழந்தைகளைப் பொத்துகிற தாய்போல படித்துறைகள் மூழ்கடித்து பாகீரதி வருகின்றாள்; பாம்புச் சீறலுடன் புரண்டெழுந்து காசியெங்கும் தாம்பு வடம்போலத் தான்நெளிந்து வருகின்றாள் வானமகள் வரும்வழியில் வழிபடவே தான்வாழ்ந்த மேனியையே சிலரெரிக்கும் மணிகர்ணிகைவழியே கால்சதங்கை அதிர்ந்தபடி கண்ணெடுத்தும் பாராமல் மேல்விழுந்த சாம்பலுடன் மாதரசி நடக்கின்றாள்: ...

கங்கையின் மடியில்…கருணையின் பிடியில்

சத்குரு விட்ட பட்டம்”Oh! Its a long time since i flew a kite” என்று சத்குரு சொன்னபோது ஒளிப்பதிவுக்கருவிகளின் கோணங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள். கங்கைக்கு மேலே பறந்து கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்துக்  கொண்டிருந்த சத்குருவின் வலக்கரம் பட்டத்தின் நூலை விடுவது போலவும் சுண்டியிழுப்பது போலவும் சில விநாடிகள் பாவனை செய்தன. மிகவும் இயல்பாக நிகழ்ந்த அந்த உரையாடலில் சத்குரு கங்கையாகப் பெருகிக் கொண்டிருந்தார். சிவனையும் காசியையும் சுற்றிப் பின்னப்பட்டிருந்த புராணத்தின் பட்டுக் கயிறுகளை அநாயசமாய் ...

மரபின் மைந்தனின் 50வது நூல்கள் வெளியீட்டு விழா

மரபின் மைந்தன் முத்தையாவின்  50ஆவது படைப்பு திருக்கடவூர்  & மரபின் மைந்தனின்  “எழுத்து கருவூலம் (50 நூல்களின் முத்திரை பகுதிகள் ) வெளியீட்டு விழா அழைப்பிதழ் இத்துடன்….. அனைவரும் வருக …… தங்களை அன்புடன் அழைக்கும் விழா குழுவினர் ...
More...More...More...More...