Blog

/Blog

கண்ணதாசன் விருதுகள்

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு, ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர். ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது  கவியரசு கண்ணதாசன் நினைவாக திரு.கிருஷ்ணகுமார் என்பவரால் நிறுவப்பட்டு கோவை கண்ணதாசன் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விருது வழங்கும் விழா கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளாகிய 24.06.2012 ஞாயிறு காலை 10.00 மணிக்கு கோவை கிக்கானி மேல்நிலப்ப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடைபெறுகிறது. திரு. இல.கணேசன் ...

வாசனைத் திரவியமே

உன்சுவாசம் என்மூச்சில் இடம்மாறுமே உன் நேசம் என்வாழ்வின் நிறமாகுமே உன் பாஷை நான்கேட்கும் இசையாகுமே உன்வாசம் என்மீது உறவாடுமே வாசனைத் திரவியமே…வா வாலிப அதிசயமே…வா நான்போகும் வழியெங்கும் நிழலாகிறாய் நான்காணும் கனவெங்கும்  நீயாகிறாய் நான்மூடும் போர்வைக்குள் துணையா கிறாய் நான்பாடும் கவிதைக்குள் பொருளா கிறாய் மன்மத மதுரசமே….வா மஞ்சத்தின் ரகசியமே…வா மீட்டாத பொன்வீணை நான்மீட்டவா சூட்டோடு சூடாக சுதிகூட்டவா தீட்டாத வண்ணங்கள் நான்தீட்டவா காட்டாத சொர்க்கங்கள் நான்காட்டவா சித்திரை முழுநிலவே…வா முத்தத்தின் முழுசுகமே…வா கையோடு நானள்ளும் நேரங்களே மெய்யோடு புயல்வீசும் வேகங்களே கொய்யாத மலர்கொய்யும் மோகங்களே பெய்யாத மழைபெய்யும் மேகங்களே மதுபொங்கும் மலர்ச்சரமே….வா புதையலில் புதுரகமே…வா ...

நிலா வாசனை

வண்ண நிலவுக்கு வாசனை உண்டுன்னு பாடிடத் தோணுதே சின்னப்பொண்ணு -அது மின்னும் அழகினைப் பாக்குறப்போ நெஞ்சில் மின்னல் கிளம்புதே செல்லக்கண்ணு புத்தக அறிவைத் தொட்டுப்புட்டா -அது கண்ணில் தெரிகிற கோளு நித்தமும் வந்து போவதனால்-அது நம்ம வீட்டிலொரு ஆளு கண்ணன்திருடிய பாற்குடமா-கடல் தந்த அமுதத்தின் பாத்திரமா சின்னக் கொழந்தைக்கு வேடிக்க காட்டணும் மேல வரச்சொல்லு சீக்கிரமா-அத மேல வரச்சொல்லு சீக்கிரமா *சரணம்-1* ஆயிரம் ஆயிரம் காலங்களா-அது ஆகாயத்தில் நடக்குதம்மா தேஞ்சு வளரும் கணக்கிலதான் -அட சாஸ்திரம் எல்லாம் ...

சித்த பீடம்

பொன்னைத் தேடிப் பொருந்தும் ஒளிபோல் உன்னைத் தேடி உன்குரு வருவார் தன்னைத் தேடித் தனக்குள் சென்றபின் இன்னும் தேட எதுவும் இல்லையே   நீண்ட கிளைகளின் நிழலுக் கடியில் மூண்ட கனல்போல் முனிவர்கள் பிள்ளை தூண்டா விளக்காய்த் தண்ணொளி பரப்ப வேண்டா இருளும் விலகி ஓடுமே   ஓசையின் மௌனம் ஓங்கும் இடத்தினில் காசியின் மௌனம் காணும் தலத்தினில் பேசும் மௌனம் பொருள்கடந் தேகிட ஈசனின் மௌனம் எளிதில்கை கூடுமே   காற்றின் மந்திரம் ககனம் உலுக்க ...

பாரம்பரியத் திருமடங்களும் நவீன குருமார்களும்

இந்து சமயத்தின் இணையிலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை குருபீடங்கள்.முப்பதாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான இந்துக்கள் தங்களை ஒரு குருபீடத்துடன் இணைந்திருந்தனர். குலமரபு வழியாகவோ தீட்சை பெற்ற முறையிலோஅத்தகைய தொடர்புகள் அமைந்திருந்தன. அந்தணர்கள் சிருங்கேரி பீடத்துடனோ காமகோடி பீடத்துடனோ வழிவழியாக ஆட்பட்டிருந்தனர். சைவர்களுக்கு தருமையாதீனம்,திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம்,மதுரை ஆதீனம் போன்ற தொன்மையான மடாலயங்கள் குருபீடங்கள். குருபரம்பரைக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரும் வைணவர்களுக்கும் தொன்மையும் பெருமையும் மிக்க ஜீயர்களின் பீடங்கள் உள்ளன. மேற்கூறிய அமைப்புகள் இன்றளவும் போதிய ஆளுமையுடனும் திகழ்கின்றன எனிலும், ...

சிதம்பரம்….நிரந்தரம்…

வானம் முழுவதும் தங்கம் வேய்ந்த வைகறை நேரம் ஒன்றினிலே தேனின் ஒருதுளி தேடி நடந்தேன் தில்லை நகரின் வீதியிலே கானம் பிறந்திட அசையும் திருவடி காணக் காண இன்பமடா ஞானம் பெருகும் ஆனந்த தாண்டவன் நம்பிய பேருக்கு சொந்தமடா மூவரும் தேடி மலரடி சூடி திருமுறை பாடிக் கனிந்தஇடம் யாவரும் காண மணிவாசகத்தை இறைவன் ஒருபடி எடுத்த இடம் தேவரும் வணங்கும் பதஞ்சலியோடு திருமூலருமே அடைந்த இடம் தாவர சங்கமம் யாவினுக்கும் இந்தத் தில்லைதானே தலைமையகம் காலம் ...
More...More...More...More...