சிதம்பரம்….நிரந்தரம்…
வானம் முழுவதும் தங்கம் வேய்ந்த வைகறை நேரம் ஒன்றினிலே தேனின் ஒருதுளி தேடி நடந்தேன் தில்லை நகரின் வீதியிலே கானம் பிறந்திட அசையும் திருவடி காணக் காண இன்பமடா ஞானம் பெருகும் ஆனந்த தாண்டவன் நம்பிய பேருக்கு சொந்தமடா மூவரும் தேடி மலரடி சூடி திருமுறை பாடிக் கனிந்தஇடம் யாவரும் காண மணிவாசகத்தை இறைவன் ஒருபடி எடுத்த இடம் தேவரும் வணங்கும் பதஞ்சலியோடு திருமூலருமே அடைந்த இடம் தாவர சங்கமம் யாவினுக்கும் இந்தத் தில்லைதானே தலைமையகம் காலம் ...
மதுரை வாராய் மகேசா
மதுரைநகர் வீதிகளில் மகேசா நீவா மறுபடியும் நெற்றிக்கண் திறக்க நீவா குதிரைவிற்க வந்தவனே கிளம்பி நீவா குடிமுழுகப் போகுதய்யா உடனே நீவா உதிரிகளை பீடத்தில் ஏற்றிவைக்க உளுத்தகட்டை துணிந்ததய்யா இறைவா நீவா புதிர்களுக்கு விடைகாணப் புனிதா நீவா பரமேசா விடையேறி விரைவாய் நீவா மாடத்தில் ஒளிர்கின்ற விளக்கின் மேலே மண்ணள்ளிப் போட்டால்தான் ஒளிரும் என்று மூடத்தின் முழுவெல்லை கண்டவர்கள் முதலறிக்கை தந்துவிட்டார் முதலே நீவா பீடத்தின் அரும்பெருமை புரிந்திடாமல் பிட்டத்தை இதுவரையில் வைத்துத் தேய்த்தோர் ஓடத்தைக் கவிழ்க்குமுன்னே ஓடி நீவா உத்தமனே உன்பெருமை காக்க நீவா ...
அபிராமி அந்தாதி – வாழ்வில் நிரம்பும் வசந்தம் – 1
1. பேசி முடியாப் பேரழகு பொன்புலரும் காலைகளிலோ,முன்னந்தி மாலைகளிலோ நெடுந்தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும் தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும். மற்றவற்றை விட்டு சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும். அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள் அவை.அவற்றில் ஒன்று, சீர்காழியின் கணீர்க்குரலில் வரும் இந்தப் பாடல்… “சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்” முன்பின் சிவகங்கை சென்றிராத சின்னஞ்சிறுவர்களை சுற்றிலும் அமரவைத்துக் கொண்டு அங்கே போய்வந்த கதையை ஒரு பாசக்கார மாமா சொல்வதுபோல் இருக்கும் அந்தப் பாடல். வரிகளுக்கிடையிலான நிறுத்தங்களும் நிதானமும் ...
மரபின் மைந்தனின் 48 & 49 வது நூல்கள் வெளியீட்டு விழா
‘அபிராமி அந்தாதி’ – “வாழ்வில் நிரம்பும் வசந்தம்” (அந்தாதி விளக்கவுரை) மற்றும் ‘கோலமயில் அபிராமியே’ (அம்பாள் பற்றிய கவிதைகள்) கலைமாமணி. மரபின் மைந்தன் முத்தையாவின் 48 & 49வது நூல்கள் வெளியீட்டு விழா. அழைப்பிதழ் இத்துடன்….. அனைவரும் வருக …… ***ரசனை இலக்கிய முற்றம்*** ...
நாளை வெல்லும் நம்காலம்
பாண்டவர்களுடன் சற்குரு…. (ஈஷா யோகா மையத்தில் சத்குரு அவர்கள் மகாபாரதம் என்னும் நிகழ்ச்சியை பிப்ரவரி 12 முதல் 18 வரை நிகழ்த்தினார்கள். நிறைய இழப்புகளுக்கு நடுவிலும் நம்பிக்கை இழக்காத பாண்டவர்கள் மனநிலை குறித்து எழுதித் தந்த பாடல் இது. இசையமைத்துப் பாடியவர்கள் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர்) நாளை வெல்லும் நம்காலம் அரண்மனை நிழலில் இருந்தாலென்ன மரங்களின் நடுவே துயின்றாலென்ன அன்னையின் மடியே ஆதாரம் அண்ணனின் சொல்லே நால்வேதம் ராஜ்ஜியம் நம்வசம் இருந்தால் என்ன? ஆரண்ய வாசம் நடந்தால் என்ன? காருண்யன் ...
சமயபுரத்தழகி
வாழ்க்கை வந்ததும் என்னவிதம்-அதில் வருபவை என்ன ரகம்? கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும்-பதில் கொடுப்பது சமயபுரம்! பார்க்கத் திகட்டாப் பேரழகில் -அன்னை பிரியம் வளர்க்குமிடம் தீர்க்க முடியா வினைகளெலாம்-அவள் தீயினில் எரியுமிடம் கன்னங் கரியவள் திருவிழிகள்- நமைக் காத்திடும் காலமெலாம் மின்னும் பார்வையில் மலர்ந்ததுதான்- அந்த விசும்பின் நீலமெலாம் இன்னும் எதுவரை போவதென்றே-மனம் எண்ணிடும் பொழுதுகளில் அன்னையின் திருக்கரம் வழிகாட்டும்-அங்கே ஆனந்தம் காத்திருக்கும் கோபத்தில் இருப்பதைப் போலிருக்கும்-அவள் கோலத்தைக் காண்கையிலே ஆபத்தும் சோர்வும் தொடுவதில்லை -அவள் ...