உயிரினில் நிறைபவன்
எத்தனை சாலைகள் இருந்தாலென்ன எல்லாம் ஒருவழிப் பாதை பித்தனும் சித்தனும் முக்தனும் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் கீதை கணபதி அவனே கர்த்தனும் அவனே ககனத்தின் மூலம் அவனே உருவம் இல்லாத் திருவும் அவனே உயிரினில் நிறைபவன் சிவனே ஏற்றிய சுமைகள் எத்தனை வினைகள் எல்லாம் சுமந்திட வேண்டும் மாற்றிட நினைத்து மண்ணுக்கு வந்தால் வழியினில் சுமைபெறத் தூண்டும் காற்றினை இழுத்து கடுஞ்சுமை குறைத்து கனம்விழ குருவருள் வேண்டும் தேற்றவும் ஆற்றவும் தெளிவுள்ள குருவின் துணைபெறத் திருவருள் வேண்டும் ...
சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி
சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி பிச்சிப்பூ மணம்வீசும் பேரழகி சந்நிதியில் பொன்னந்தி மாலையிலே நுழைந்தேன் உச்சித் திலகம்திகழ் பச்சை மரகதத்தாள் ஒளிவெள்ளப் புன்னகையில் கரைந்தேன் துச்சம்நம் துயரங்கள் தூளாகும் சலனங்கள் துணையாகும் திருவடியில் விழுந்தேன் பிச்சைதரும் பெண்ணரசி பெருங்கருணை விருந்தினிலே பேரமுதம் நான்பருகி எழுந்தேன் தூபத்தால் கலயரவர் தொழுதிருந்த கடவூரில் தூண்டாத தீபமவள் சிரிப்பு தாபத்தால் அமுதீசன் தழுவவரும் கைவிலக்கும் தளிர்நகையாள் திருமேனி சிலிர்ப்பு கோபத்தால் காலனையே கடிந்திட்ட இடதுபதம் கோமளையாள் கொண்டவொரு கொதிப்பு ஆபத்தே சேராமல் அரவணைக்கும் ...
சிவாஜி கணேசனின் முத்தங்கள் – இசையின் இன்னொரு தொகுப்பு
அதிகபட்ச அவமானத்தில்,. நிராசையின் நிமிஷங்களில், ஒரு மனம் தேடக்கூடியதெல்லாம் குறைந்தபட்ச ஆறுதலைத்தான். ஆனால் ஆறுதல் சொல்லும் அக்கறையினூடாக உண்மை நிலையை உணர்த்தும் நேர்மையும் இருந்துவிட்டால் அதைவிடவும் ஆதரவான நம்பகமான தோழமை வேறேது? “ராஜகிரீடம் உன் சிரசில் பொருந்தாததற்கு யார் என்ன செய்ய முடியும் நண்பா? இந்த வாயிற்காப்போன் உடையில் நீ எவ்வளவு மிடுக்கு தெரியுமா?” என்றெழுதும் இசையின் கவிதைகளில் ஒலிக்கிறது நேர்மையான, நம்பகமான குரல். இசையின் மூன்றாவது கவிதைத் தொகுப்பின் தலைப்பு “சிவாஜி கணேசனின் முத்தங்கள்”. முத்தக்காட்சிகளிலும் ...
வேளாங்கண்ணி தரிசனம்
உன்கையில் ஒருபிள்ளை இருக்கின்ற போதிலும் உலகத்தைப் பார்க்கின்ற மாதா தன்கையில் உள்ளதை தருகின்ற யாருக்கும் துணையாகும் மேரி மாதா கடலோரம் குடிகொண்ட மாதா கனவோடு கதைபேசும் மாதா கல்வாரி மலையிலே சொல்மாரி தந்தவன் கருவாக நீதானே கோயில் பொல்லாத உலகிலே நில்லாத நீதியும் நிலையாக நீதானே வாயில் மலரோடு மலரான மாதா மதம்தாண்டி மணம்வீசும் மாதா ஆனந்த வானிலே ஓர்மின்னல் வந்ததே அம்மாநீ கருவான நேரம் ஏனிந்த நாடகம் வான்செய்த சாகசம் அருள்கொஞ்ச உருவான ராகம் சுதியோடு ...
புரிதலின் பிராவாகம்
அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ “அது அது அப்படித்தான்” என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின் ஆரம்ப நிலை.புரிதலின் பரிவு,பக்குவத்தின் ஆனந்த நிலை. அப்படியோர் ஆனந்த நிலையின் பிரவாகமாய்ப் பெருகுகிறது கல்யாண்ஜியின் “மணல் உள்ள ஆறு” கவிதைத் தொகுப்பு. உச்சிப்படையில் உட்கார்ந்து விட்ட சிறுமியை,வீட்டுக்குக் கூட்டிப் போகிற வாழையிலை விற்கிற முதியவளும்,கலர்க்கோலப்பொடி அப்பளம் விற்கிற பெண்ணும் மட்டும் ஆச்சரியமில்லை. ...
முரணிலாக் கவிதை
முடிவிலாப் பாதையில் முகமிலா மனிதர்கள் இதழிலாப் புன்னகை சிந்திய பொழுது இரவிலா நிலவினை மழையிலா முகில்களும் நிறமிலா வெண்மையில் மூடிய பொழுது விடிவிலாச் சூரியன் வழியிலாப் பாதையில் தடையிலா சுவரினைத் தாண்டிய பொழுது கடலிலாச் சமுத்திரம் கரையிலா மணலினில் பதிலிலாக் கேள்வியாய் மோதிடும் அழுது யுகமிலாத் தேதியை நகமிலா விரல்களால் கரமிலாக் காலமும் கிழிக்கிற நொடியில் ஜெகமிலா பூமியின் நகர்விலா சுழற்சியை வடிவிலாக் கோள்களும் மறிக்கிற பொழுதில் சுகமிலாச் சுகங்களை நிலையிலா நிரந்தரம் வலியிலா வலியென உணர்த்திடும் நிலையில் அகமிலா அகந்தனில் விரிவுறா வெளியினில் குணமிலா இறைநிலை ...