நாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் நக்கீரரும்தான்
சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும் ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது. பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே ஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில் நாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது . பழகும்போது பரிவும் பண்பும் மிக்க மென்மையான மனிதரான நாஞ்சில் அறம்சாராதவற்றைச்சாடும்போது வேகம் கொள்ளும் விதம் வியப்பளிக்கிறது. செவ்விசை,செவ்விலக்கியங்களின் தீராக் காதலர் நாஞ்சில்.நல்ல ...
விஷ்ணுபுரம் விருதின் விஸ்வரூபம்
சிறுகதைகள்,நாவல் ஆகிய இரட்டைக் குதிரைகளிலும் வெற்றிச் சவாரி செய்யக்கூடியவர்கள் மிகச்சிலர். அந்த மிகச்சிலரில் குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளர் திரு.ஆ.மாதவன். ஆழ்ந்த உறக்கத்தில்,இரண்டு கனவுகளின் இடைவெளியில் மனதில் மின்னலிடக்கூடிய வரிகள் அவருடையவை. பேறு காலத்தில் ஒரு பூனையுடன் நெருங்கிப் பழகுகிற பெண்ணொருத்திக்கு,தனக்குப் பிறக்கப் போவதே ஒரு பூனைதான் என்று தோன்றிவிடுகிறது. குழந்தை பிறந்ததும்,தாதி,”மஹாலட்சுமிபோல் ஒரு பெண்குழந்தை” என்பது இவள்செவிகளில் “மஹா லட்சணமாய் ஒரு பூனைக்குழந்தை” என்பதாக விழுந்து விடும்.இவள் ஒரு கதையின் நாயகி இறந்த தன் தாயாருக்காக அயல்நாட்டிலிருந்து ...
எடை கூடிய கவிதைகள்-யாழியின் என் கைரேகை படிந்த கல்
படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த மும்முரத்தில் தான் காணத் தவறிய பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய கடவுள் செய்த ஏற்பாடு,கவிதை. கவிதையின் கண்கள் வழியாக கவிஞனுக்கு நிகழும் தரிசனங்கள் அசாத்தியமானவை.அத்தகைய பதிவுகளுக்கேற்ப ஒவ்வோர் எழுத்து வகையும் ஒவ்வொரு வசதியைக் கொண்டிருந்தன.குறியீடுகளாலும் படிமங்களாலும் சங்க இலக்கியம் காட்டிய காட்சிகள் ஒருவகை. கடவுள் என்னும் பெருந்தூணில் சாய்ந்து, தன்னுள் ஆழ்ந்து-ஆய்ந்து, சமய இலக்கியங்கள் கண்டவையும் காட்டுவித்தவையும் ஒருவகை. இந்த சங்கிலிக் கண்ணியில் நவீன கவிதை வாழ்க்கையின் பகிரங்க வெளிகளினூடாக ஊடுகதிர்போல் பரவி உணரப்படாத ...
ராஜ ராஜ சோழன்……தந்தையாக!!
தஞ்சை பெருவுடையார் கோயிலில் 14.11.2010.அன்று நடைபெற்ற 1025ஆவது ஆண்டு சதய விழா கவியரங்கில், “கவிஞர்கள் பார்வையில் இராசராசன் ‘என்னும் பொதுத்தலைப்பில்-தந்தையாக என்னுந் தலைப்பில் பாடிய கவிதை. தலைமை :இசைக்கவி ரமணன். சிந்தையெலாம் சிவபக்தி செழித்திருக்க செயலெல்லாம் மக்கள்நலம் சிறந்திருக்க விந்தையெலாம் வியக்கின்ற விந்தையாக வாழ்ந்திருந்த புவியரசன் ராஜராஜன் தந்தையென்று வாழ்ந்திருந்த தகவு பற்றி தடந்தோளில் வளர்த்திருந்த மகவு பற்றி சந்தமிகு செந்தமிழில் சொல்ல வந்தேன் சரித்திரத்தின் தகவுகளை சேர்த்து வந்தேன் தன்னைப்போல் வையகத்தைக் காப்பதற்கு திருமகனாம் ராஜேந்திரன் ...
உண்ணாமுலை உமையாள்
சின்னஞ் சிறியவளை-ஒளிச் சுடராய்த் தெரிபவளை பென்னம் பெரியவனின்-இடப் பாகம் அமர்பவளை மின்னல் கொடியழகை-உண்ணா முலையாம் வடிவழகை உன்னும் பொழுதிலெலாம்-அவள் உள்ளே மலருகிறாள் கன்னங் கரியவளை-அருட் கனலாய் ஒளிர்பவளை இன்னும் புதியவளை-கண்கள் இமையா திருப்பவளை பொன்னில் பூணெழுதும்-முலை பொலியும் பேரருளை என்னென்று காணவந்தேன்-அவள் என்னில் நிறைந்து நின்றாள் மூலக் கனலினுள்ளே-புது மோகம் வளர்ப்பவளாம் காலக் கணக்குகளை-ஒரு கணத்தில் எரிப்பவளாம் சோலைப் புதுமலராம்-அவள் ஜோதித் திருவடிவாம் மேலென்ன சொல்லுவதோ-உண்ணா முலையாள் மகிமையெல்லாம் அண்ணா மலைத்தலமே -எங்கள் அன்னையின் இருப்பிடமாம் பண்ணார் ...
போனவர்கள் வந்தால்……? கவியரங்கக் கவிதை
19.07.2009 ல் ஈரோடு சி.கே.கே.அறக்கட்டளை ஏற்பாட்டில கவியரங்கம். “போனவர்கள் வந்தால்?” என்பது பொதுத்தலைப்பு. எனக்கான தலைப்பு :நேருபிரான். கவியரங்கத்தலைமை : “நாவுக்கரசர்” நெல்லை கண்ணன் அவர்கள். மண்ணைவிட்டுப் போய்விட்ட தலைவர் தம்மை மகத்துவத்தால் புகழ்படைத்த அறிஞர் தம்மை விண்ணைவிட்டு மறுபடியும் வரச்சொல்கின்ற வித்தையினை நிகழ்த்தத்தான் இங்கே வந்தோம்; பண்ணைவிட்டுப் பாட்டிசைக்கும் கலைஞன் போல தும்பைவிட்டு வால்பிடிக்கும் உழவன்போல கண்ணைவிற்றுச் சித்திரங்கள் வாங்குகின்ற காரியத்தில் நமக்கிணையாய் யாரும் உண்டா? அற்புதங்கள் நிகழ்த்தத்தான் அவனி வந்தார் அரசியலில் புதுவெளிச்சம் அள்ளித் ...