பேசாதவை பேசினால் – சூடாமணி
கோலாலம்பூரில் கண்ணதாசன் அறவாரியம் நிகழ்த்திய கம்பன் விழாவில் , “பேசாதன பேசினால்”என்ற தலைப்பில்,கவிஞர் இளந்தேவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது.”சூடாமணி பேசினால்” என்பது எனக்களிக்கப்பட்ட கிளைத்தலைப்பு. அந்தத் தலைப்பில் நான் வாசித்த கவிதை இது: சூடாமணி பேசுகிறேன்;கொஞ்சம் சூடாகப் பேசுகிறேன்; மெச்சி நீங்கள் கொண்டாடும் மெல்லியலாள் சீதையெனை உச்சிமேல் வைத்துக் கொண்டாடியதை உணர்வீரா? மற்ற அணிகலன்களுக்கு மேலாக வீற்றிருக்கும் கொற்றத்தை எனக்களித்த கம்பனைநான் வணங்குகிறேன்; தீக்குளித்தாள் சீதையென்று தமிழ்க்கம்பன் பாடிவைத்த பாக்களிலே கண்டு பதைபதைக்கும் பெரியோரே; உண்மை தெரியுமா ...
ஓசை கொடுத்த நாயகி
ஆசை கெடுப்பவளாம்-அவள் ஆட்டிப் படைப்பவளாம் பேசிச் சிரிப்பவளாம்-நல்ல பேரைக் கொடுப்பவளாம் ஈசனின் பாகத்திலே-அவள் என்றும் இருப்பவளாம் ஓசை கொடுப்பவளாம்-நெஞ்சின் உள்ளில் சிரிப்பவளாம் பாலைக் குடித்த பிள்ளை-வந்து பாடித் தொழுகையிலே ஆலங் குடித்தவனே-தங்கத் தாளங் கொடுத்தானாம் நீல நிறத்தழகி-அங்கே நேரில் சிரித்தாளாம் தாளம் பிறந்திடவே-நல்ல ஓசை கொடுத்தாளாம் காலக் கணக்குகளும்-அவள் கைவசம் உள்ளதடா மூலக் கருவறையில்-அவள் மோகம் சுடருதடா வேலைக் கொடுத்தவளே-நல்ல வார்த்தை கொடுப்பவளாம் கோலக்கா கோயிலிலே-நல்ல காட்சி கொடுப்பவளாம் மின்னல் எழுந்ததுபோல்-நம் முன்னவள் தோன்றிடுவாள் ஜன்னல் திறந்ததுபோல்-பல ...
நாயகி ஆளுகிறாள்
திருக்கடவூர் எனக்குத் தாய்வழிப்பாட்டனாரின் ஊர் . எங்கே இருந்தாலும் கனவிலும் நனவிலும் அந்த ஊரோ வீடோ மின்னிக் கொண்டிருக்கும் வைத்தீசுவரன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடெடுத்துப் பார்த்த போது கடந்த பிறவியில் திருக்கடவூரில் நான் பிறந்ததாக வந்தது. இந்த முறை திருக்கடவூருக்குப் போய்க் கொண்டிருந்த போது அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது) எத்தனை திசைகள் போனால் என்ன இதுதான் என்வீடு வித்தகி ஆள்கிற கடவூர் என்தலம் என்றது பனையேடு நித்தமும் நித்தமும் நினைவினில் மின்னும் நாயகி ...
பாலைக்காற்று
கோலாலம்பூர் கம்பன் விழா மேடையில் இருந்த போது கிடைத்த செய்தி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மனைவியார் மரணமடைந்த செய்தி. விழாவில் முதல்நாள் பங்கேற்று அடுத்த சில மணிநேரங்களில் விமானம் ஏற இருந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை மேடையில் இருந்த வண்ணமே தொடர்பு கொண்டேன். அவருக்கு ஏற்கெனவே செய்தி தெரிந்திருந்தது. கவிஞர் சவுந்தரா கைலாசம் மறைந்த செய்தியையும் அவர் தெரிவித்தார். இருவருக்கும் கோலாலம்பூர் கம்பன் விழாத் திரள் அஞ்சலி செலுத்தியது. சென்னை வந்த பிறகு திருவான்மியூர் வான்மீகி ...
சாபல்யம் அவள்பதமே
அவள்தான் அவள்தான் அடைக்கலம் அருளே அவளின் படைக்கலம் கவலை முழுதும் எரித்திடும் கருணை அவளின் சூத்திரம் சாகச மனம்செய்யும் சேட்டைகளில் அவள் சாட்சி மாத்திரமே சாட்டை அடிகளும் வாட்டி வதைக்கையில் சாபல்யம் அவள்பதமே ஆகாயம் அவள் ஆடுகளம் அதில் அல்லென ஆடுகிறாள் ஆயிரம் ஆயிரம் விண்மீன் நடுவே நிலவென்று தோன்றுகிறாள் கோணல் மனங்களின் கோடுகளை அவள் கோலங்கள் செய்வாளோ கோடி வினைகளும் மூள்கையிலே ஒரு பார்வையில் எரிப்பாளோ கேணியில் அமுதம் ஊறிடச் செய்பவள் கடவூர் ஆளுகிறாள் ...
தனியாய்க் காணுவதோ
நேற்றொரு பாதையில் நடக்கவிட்டாள்-இன்று நான்செல வேறொரு திசையமைத்தாள் காற்றினில் இலைபோல் மிதக்கவிட்டாள்-இளங் காட்டுப்புறாவின் சிறகளித்தாள் ஆற்றின் வெள்ளங்கள் கடக்கவிட்டா ள்-அவள் அமிலக் கொதிப்புகள் குளிரவிட் டாள் ஊற்றெழும் வினைப்பயன் தூரவைத்தாள்-அந்த உத்தமி தன்னிழல் சேரவைத்தாள் சூரியன் போகிற வழிபார்த்தே -ஒரு சூரிய காந்தி திரும்புதல் போல் காரியம் பலப்பல பார்த்தபடி-அவள் காருண்ய முகத்தினைப் பார்க்கச் சொன்னாள் சூரியன் போவதோ ஒருவழிதான் -எங்கள் சூலினி எங்கணும் பரந்துபட்டாள் நேர்வரும் எதனிலும் நிற்பவளை-அட நானெங்கு தனியாய்க் காணுவதோ வீணையின் நாதத்தில் சிரிப்பவளை-அந்த வெய்யிற் சூட்டில் தெறிப்பவளை பூநிழல் வழியெங்கும் விரிப்பவளை-மனப் புண்களில் ...