Blog

/Blog

வேதங்கள் நான்குமே வாசல்

கம்பிகள் நடுவே பாம்பாய் -அவள் கால்தொட நெளிகிற கூட்டம் செம்பொன் சிங்கா தனத்தே-எங்கள் சுந்தரி ஆள்கிற கோட்டம் நம்பி வருபவர்க்கு அன்னை-எங்கள் நாயகி மதுரை மீனாள் கும்பிடும் கைகளில் அவளே -துள்ளிக் கொஞ்சிடும் குழந்தையென்றானாள் மாடங்கள் சமைத்தனர் அழகாய்-எங்கள் மாதங்கி ராஜ்ஜியம் நடத்த கூடல் நகரின் தெருக்கள்-அவள் காலடி ஓசையில் சிலிர்க்க ஆடல் நிகழ்த்திய சொக்கன் -அவள் ஆருயிர்க் காதலில் களிக்க கூடலில் அவர்கண்ட இன்பம்-அந்தக் கோயிலில் கொட்டிக் கிடக்க தோளினில் கிளியினை அமர்த்தும்-அவள் தோழமை நமக்கொரு நலமாம் தாளினை உதறிய அசைவே-எட்டுத் ...

அலைவீச்சு

(26.09.2010) மதுரையில் ஈஷாவின் மகாசத்சங்கம். அருகே அழைத்த சத்குரு வாஞ்சையுடன் நலம் வினவி மிகுந்த கனிவுடன் தோள்களில் தட்டிய நொடியில் உள்ளே எதுவோ உடைய, அந்தத் தாக்கத்தில் எழுந்த கவிதை இது:                 தோளில் அவர்கரம் படிந்தது – ஒரு                  தூரம் உடனே தொலைந்தது                 வாள்போல் பார்வை நுழைந்தது-என்                  வினையின் வேரொன்று அறுந்தது                பாதை இருளின் வெளிச்சமாய்-ஒரு                  பாறை கனமுள்ள அனிச்சமாய்               ஓதிட முடியா உருக்கமாய்-இங்கே                  ஒருவரும் தராத நெருக்கமாய்             பொற்கணம் அருளிய குருவிடம்-என்                 பொல்லா வினைகளை ...

எதிர்த்துகிட்டு நீந்துதடி ஏடு

சொல்லாத வார்த்தைரொம்ப சூடு -அதை எல்லோரும் சுமப்பதில்லை பாரு நில்லாத ஆற்றுத்தண்ணீர் போலே-இங்கே நீளுதடி நீளுதடி வாழ்வு ஆசையின்னும் கோபமுன்னும் ஆட்டம்-இது அத்தனையும் வெத்துப்பனி மூட்டம் பேசுறதை ஒருநிமிஷம் எண்ணு-எல்லாம் மீசையோட ஒட்டிக்கிட்ட மண்ணு ஆமையோடு போலத்தானே மனசு-இதில் அடங்கியுள்ள ஆசரொம்பப் பெரிசு தீமையின்னும் நல்லதுன்னும் இல்ல-ஒரு திரைவிழுந்த பின்ன என்ன சொல்ல எண்ணம்போல வாழ்க்கையிங்கே ஏது-அட எதிர்த்துகிட்டு நீந்துதடி ஏடு வண்ணம்பூசி மறைக்கவழி தேடு-ஆமா வெளிறிப்போன வாழ்க்கைரொம்பப் பாடு வெட்கம்விட்டு உண்மைசொன்ன போதும்-ஒரு துக்கம்வந்து நெஞ்சுக்குள்ளே ...

கடல் தடங்கள்

சிப்பிகள் கிடக்கிற கரையோரம் -நான் சிரத்தையில்லாமல் நடக்கின்றேன் உப்புக் கடலலை கூச்சலிட்டும்- நான் ஒன்றும் சொல்லாமல் கடக்கின்றேன் கலங்கரை விளக்குகள் கப்பலெல்லாம்-என் கண்களில் பட்டிடப் போவதில்லை பலமுறை வருடிய ஓடங்களை-நான் பார்த்தினி ஏதும் ஆவதில்லை மூச்சை யடக்கிநான் முத்தெடுத்தேன் -அது மாலையென் றானபின் கையிலில்லை வீச்சினை உணர்ந்து உப்பெடுத்தேன் -அது விரல்களில் கரித்தது தங்கவில்லை ஓடிப் பொறுக்கிய கிளிஞ்சல்களும்-நகம் ஒட்டிய கடற்கரை மணல்துகளும் வாடி யிருக்கிற நேரத்திலே-சில வார்த்தைகள் என்னுடன் பேசிடட்டும் காலக் கடல்ரொம்பப் பெரியதுதான் -அது ...

கோடையெனும் பெருவெளியில்…

தூரிகைக் கொடியில் துளிர்க்கும் தளிர்களாய் பேரறியாத நிறங்களினுலகில் என்ன நிறமாய் இப்போதிருக்கிறேன்? ஒற்றைப் புள்ளியில் உராய்ந்த சூரியன் மற்றொரு புள்ளியாய் சுருங்கிய பொழுதில் என்னுள் எழுந்த நிலவை என்செய? வாங்கி வைத்திருந்த வானைச் சுருட்டி தலைக்கு வைத்துத் தூங்கும் முயலின் ஈரச் சிலுப்பல் என்னுளோர் வெள்ளமாய்… கோடை நிலத்தின் கோரைப்புல்வெளி மூடியும் மறையாக் கற்பக விருட்சம் எனக்கான கனிகளைக் கனிவித்திருக்கையில் தனக்கேயான தாளாப்பசியுடன் தள்ளி நின்று தவித்திருக்கின்றேன் ஆழியை வீணையாய் ஆக்கி மீட்டிடும் வாணியின் உள்ளங்கையில் வியர்வையாய் ...

போறாளே பொன்னுத்தாயி…

பல வருடங்களுக்கு முன்,நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்திற்காக திருச்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினேன்.அறைக்குள் நுழைந்தபோது காதுகளில் வாக்மென் ஒலித்துக் கொண்டிருந்தது.தொலைக்காட்சியை இயக்கியபோது,டயானாவின் இறுதி ஊர்வலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வாக்மென்னை அணைப்பதற்கு பதில் தொலைக்காட்சி ஒலியைக் குறைத்துவிட்டுவாக்மெனில் ஒலித்த பாடலைக் கேட்டுக் கொண்டே காட்சியைப் பார்த்தேன்.ஒலித்த பாடல்,”போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு..தண்ணீருஞ் சோறுந் தந்த மண்ண விட்டு!பால்பீய்ச்சும் மாட்ட விட்டு,பஞ்சாரத்துக் கோழிய விட்டு-போறாளே பொட்டப் புள்ளஊர விட்டு” டயானாவுக்காகவே பாடப்பட்டது போலிருந்தது.அந்தப் பாடலுக்காக ஸ்வர்ணலதாவுக்கும் தேசிய ...
More...More...More...More...