குகைப்பெருமான் -6
பிரசாதக்கடை வைத்திருக்கும் பெரியவர் தேவசேனாபதி அய்யாவை சமீபத்தில் பார்த்த போதுதான் இன்னொருவிஷயமும் தெரிந்தது.அவருடைய சம்பந்தி,அமரர் கவிஞர் தடாகம் இளமுருகு என்பதுதான் அது.அவரும் தென்சேரிமலை வேலாயுதசாமியையும் அடிவாரத்தில் உள்ள குகைப்பெருமானையும் பாடியிருக்கிறாராம்.முருகன் பக்திப்பாடல்களை விரும்பிக் கேட்கும் நேயர்களுக்கு கவிஞர் தடாகம் இளமுருகுவை நன்கு தெரிந்திருக்கும். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய புகழ்பெற்ற பாடலொன்று அவர் எழுதியதுதான்.”சுட்டதிருநீறெடுத்துதொட்ட கையில் வேலெடுத்து தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!கட்டழகானதொரு கந்தவடிவேலவனைக்காட்டுவது ஆறெழுத்து மந்திரம்”என்ற பாடல் அது. என்னுடைய நண்பர் வளர்கவி இராதாகிருஷ்ணனுக்கு இளமுருகு அசிரியர்.இந்தப் பாடலை ...
காருண்ய ரூபம் கணபதி
காரியம் தொடங்கிட கணபதி-இங்கு காலத்தின் அதிபதி கணபதி சூரிய உதயம் கணபதி-திரி சூலியின் மடியில் கணபதி ஓமெனும் வடிவம் கணபதி-நாம் ஓதிடும் மந்திரம் கணபதி பூமியில் எதுவும் கணபதி-நல்ல பூசனைப் பிரியன் கணபதி மூலைக்கு மூலை கணபதி-இங்கு மூலத்தின் மூலம் கணபதி நீலியின் காவல் கணபதி-நல்ல நிதர்சன தெய்வம் கணபதி எளிவந்த இறைவன் கணபதி-நம் எதிர்வரும் தெய்வம் கணபதி ஒளிகொண்டு வருவான் கணபதி-நம் உளந்தனில் அமர்வான் கணபதி தந்தம் ஒடித்தவன் கணபதி-இங்கு தன்னைத் தருபவன் கணபதி பந்தம் ...
குகைப்பெருமான் -5
கோவை வானொலியில் மார்கழி மாதங்களில் அதிகாலை நேரத்தில் திருப்பாவை-திருவெம்பாவை பாடல்களும்விளக்கவுரைகளும் இடம்பெறும்.அப்படியொரு முறைதிருவெம்பாவைக்கு சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின்விளக்கவுரைகள்இடம்பெற்றன. அந்தக்கால சுகிசிவம் “ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதி”என்ற வரிக்கு,”அவன் அருட்சோதி,சூரிய சந்திரர்களுக்கே ஒளிதருபவன் என்பதால் பெருஞ்சோதி,ஆகவே அருட்பெருஞ்சோதி” என்று அவர் தந்த விளக்கம் இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. மார்கழி மாதக் கிருத்திகைக்கூட்டத்திற்கு,முருகனைத் தவிர அனைவருமே மஃப்ளர்,சால்வைகள் அணிந்துவந்திருந்தோம்.பெரும்பாலான கிராமத்துப் பெரியவர்கள் போல் மணியகாரர்வெங்கிடாஜலக் கவுண்டர்,ஸ்வெட்டர் அணிந்து அதன்மீது வெள்ளைச்சட்டைஅணிந்திருந்தார்.அவருக்கு வானொலியில் ஒலிபரப்பாகும் திருப்பாவைதிருவெம்பாவை விளக்கங்கள் அதிசயமாயிருந்தன.கோயில் நோக்கி நடக்கஆரம்பித்தோம். “அதெப்படீங்க! சுகிசிவம் ...
குகைபெருமான் -4
செஞ்சேரிமலை குகைப்பெருமானுக்கு மற்ற முருகன் கோவில்கள் போலவே ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம்.காலையில் அபிஷேக ஆராதனைகள், இரண்டு மூன்று சொற்பொழிவுகள், மதியம் அன்னதானம் என்று அமர்க்களப்படும். அப்படியொரு ஆடிக்கிருத்திகையின் போது தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள், தமிழ்ப்புலவர் ஒருவர், நான் ஆகியோர் உரைநிகழ்த்தினோம். சிவப்பிரகாச சுவாமிகள் கோவை மாவட்டத்தில் தோன்றியவர். வள்ளலாரின் சன்மார்க்க நெறியில் ஈடுபட்டு, வடலூரில் தொடர்ந்து அன்னதானங்கள் நிகழ்த்தி வருகிறார். நம்காலத்தில் வாழ்கிற பெரிய அறிஞர்.இப்போது, சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்து காரணமாக வேன் பயணம், சக்கர நாற்காலி என்று ...
குகைப்பெருமான் – 3
முருகனுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவமும்,முருக வழிபாட்டின் இருவேறு எல்லைகளும் மிகவும் சுவாரசியமானவை. ஒருபுறம் பாமரர்கள் வாழ்வில் விளையாடும் நெருக்கத்தில் கண்கண்ட தெய்வமாய், கலியுக வரதனாய் இருக்கிறான். இன்னொரு புறம், வேதங்கள் அவனுடைய பெருமைகளைச் சொல்லமுடியாமல். “சுப்ரமண்யோஹம்” என்று மூன்று முறை சொல்லிவிட்டு பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு தள்ளி நிற்கின்றன. இன்றளவும், பள்ளி கல்லூரி மாணவிகள், சாஃப்ட்வேர் யுவதிகளின் கைப்பையில் லேமினேட் செய்யப்பட்ட படமாய் இருக்கிறான்.இன்னொரு புறம், எல்லா தெய்வங்களும் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் “தெய்வ-சிகா-மணி”ஆகவும் இருக்கிறான். தேவர்களின் ...
குகைப்பெருமான் – 2
அடுத்தடுத்து வந்த கிருத்திகைகளில், என்னையே செஞ்சேரிமலைக்கு செல்லப் பணித்தார் புலவர் ஜானகி அம்மையார். ஒவ்வொரு கிருத்திகைக்கும் ஒவ்வொரு தலைப்பில் பேசத் தொடங்கினேன். கந்தரலங்காரம், கந்தரனுபூதி என்று தொடங்கி பின்னர் பெரிய புராணத்தில் ஒவ்வொரு தலைப்பாக அங்கே அரங்கேறின. சேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டர் இருந்தால், அவர்தான் வரவேற்புரை நிகழ்த்துவார். அவர் கோவையிலுள்ள நன்னெறிக் கழகத்தில் உறுப்பினர். சமய இலக்கியங்கள் ஓரளவு தெரிந்தவர். வெளிப்படையான தலைப்பைத் தந்தால், வரவேற்புரையிலேயே பேசுபொருளின் முக்கிய சம்பவத்தைப் போட்டு உடைத்து விடுவார். கிராமப்புற மக்களுக்கு ...