குகைப் பெருமான் – 1
இருபதாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் செஞ்சேரிமலை போயிருந்தேன். காரை நிறுத்தச் சொல்லி விட்டு “தேவசேனாபதி அய்யா பழக்கடை” என்று விசாரித்து நின்ற போது, நடுத்தர வயதுக்காரர் ஒருவர்,”நீங்க…”என்றபடியே கடையிலிருந்து வந்தார்.”முத்தையா” என்று சொன்ன மாத்திரத்தில் “அய்யா!வாங்க வங்க! அப்பா உங்களைப் பத்தி பேசாத நாளே இல்லீங்க’ என்றார். முதன்முதலாக இதே கடை வாசலில் நான் வந்து நின்ற நாள் என் நினைவுக்கு வந்தது. “நகர வீதியில் திரிதரு மாந்தர்” என்ற சொற்றொடர், தமிழிலக்கிய ஆர்வலர்களுக்குப் பரிச்சயமாகியிருக்கும். கல்லூரியில் ...
நவில்தொறும் குறள்நயமதில் பயில்தொறும் புதுமைகள்..
31.07.2010 அன்று, சேலம் அருகிலுள்ள ஆத்தூரில் நவில்தொறும் குறள்நயம் என்னுந் தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ந்தது.அதில்,”பயில்தொறும் புதுமைகள்”என்னுந் தலைப்பில் உரைநிகழ்த்தினேன். சில காலங்களாகவே திருக்குறளில் தோன்றிய புதிய சிந்தனைகள் சிலவற்றை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டேன். அந்தப் பகிர்வின் பதிவுகள் இவை: “பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்” மரபு ரீதியாய் இதற்கு சொல்லப்படும் பொருள், என்ன தெரியுமா? “பொருட்படுத்தும் அளவு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் கூட, பொருள் சேர்ந்துவிட்டால் பொருட்படுத்தத் தக்கவர்கள் ஆகி விடுவார்கள். எனவே ...
சுருட்டபள்ளி சிவன்
உண்ட மயக்கம் மாலவனின் பாற்கடலில் மிக்க வருமலைகள் ஓலமிட்டால் கண்ணுறங்க ஒண்ணாதே-கோலமிக்க தேவியவள் பூமடியில் தேவதேவன் கண்ணுறங்க மேவிவரும் மௌன மயக்கு. நால்வர் தமிழ்கொடுத்த ஞானக் கிறக்கமோ மாங்கனி தந்த மயக்கமோ-ஆலத்தை உண்ட மயக்கமோ உத்தமியாள் பேரழகைக் கண்ட மயக்கமோ கூறு நாயன்மார் வீடுகளை நாடி நடந்தவரின் தூய உபசரிப்பில் தான்திளைத்தும்-நேயரை ஆட்டிப் படைத்தும் அருள்கொடுத்தசோர்வினிலே நீட்டிப் படுத்தாயோ நீ. பெண்டு தனைக்கேட்டு பிள்ளைக் கறிகேட்டு திண்ணனவன் கண்களையுந் தான்கேட்டு-மண்மிசையே சுந்தரர்க்காய் வீதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு நொந்துபடுத் தாயோ நவில். தாழ்சடைகள் அம்மை திருமடியி லேபுரள ஆழ்துயிலில் உள்ளதோர் ஆபத்து-ஆழிசேர் கங்கை ...
நிலவும் நானும்…
நீட்டிய விரலுக்கும் நிலவுக்கும் நடுவே நீண்டது ஆயிரம் தூரம்-என் நினைவில் ஆயிரம் பாரம் ஒளி காட்டிய பரிவும் கூட்டிய குளிரும் காலம் முழுதும் வாழும்-அந்த போதையில் இதயம் ஆழும் எங்கே எப்படி நான்போனாலும் நிலவின் பார்வையில் இருப்பேன் -அதன் நிழலாய் பூமியில் நடப்பேன் பொங்கும் வெய்யில் பொழுதிலும் நிலவின் பொன்முகம் எண்ணிக் கிடப்பேன் -அது பூக்கும் அந்தியில் உயிர்ப்பேன் நட்சத்திரங்களின் நளினக் குலுக்கல்கள் நெஞ்சில் பதிவதும் இல்லை-அதை நேர்படப் பார்ப்பதும் இல்லை ஒரு முட்புதர் பாதையில் முல்லைக்காடு ...
எழிலே என் அபிராமியே
கல்லையும் கனிவிக்கும் கடைவிழி பதிந்ததால் கவிபாடிச் சபையேறினேன் கள்ளென்ற போதையும் முள்ளென்ற வாதையும் காணாமல் ஆளாகினேன் நில்லென்று சொல்கையில் நின்றதால் குழிவிழல் நிகழாமல் கடந்தேகினேன் நிகழ்பவை யாதென்று நினைத்திடும் முன்னரே நன்மைகள் நிதங்காண்கிறேன் அல்லென்ற நிறத்தினாள் அம்பிகை கரத்தினால் அள்ளினாள் உயிர்வாழ்கிறேன் அன்னையள் யாருக்கும் முன்னையள் அருளினால் அச்சத்தின் பிடிநீங்கினேன் சொல்லொன்று விதைத்ததால் சூட்சுமம் கொடுத்ததால் சுழன்றாலும் நிமிர்கிறேனே சுடர்வீசும் விளக்கோடு கதைபேசும் ஜோதியே சுபவாமி அபிராமியே எத்தனை வலைகளோ எத்தனை தடைகளோ எப்படித் தாண்டினேனோ எத்தர்கள் பிடிவிட்டு சித்தர்கள் அடிதொட்டு எவ்விதம் ஓங்கினேனோ எத்தனை சபைகளோ எத்தனை களங்களோ எப்படி ஏறினேனோ ...
மேஸ்குலின் கிங்
இருபது வருடங்களுக்கு முன்னால் கோவையில் ஓர் இலக்கியக் கூட்டம். உளறுவதே உரைப்பொழிவு என்று திட்டவட்டமாக நம்பிய ஒரு பெண்மணி மேடையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார். அவையினருக்கு, அது உளறல் என உரைக்கத் தொடங்குவதற்கு முன்னரே முன்வரிசையிலிருந்து பெரியவர் ஒருவர் எழுந்து “பிடி பிடி”என்று பிடிக்கத் தொடங்கிவிட்டார். உள்ளூர்க்காரர்களில் பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தது.பேசிய பெண்மணி வெளியூர்க்காரர்.வெலவெலத்துப் போய்விட்டார். அந்தப் பெரியவரின் பெயர் அம்மையப்பா.அவருக்குத் தரப்பட்டிருந்த பட்டம், “ஆண்மையரசு”. ஆண்மையரசு என்றால் ஏதோ சித்த வைத்திய சமாச்சாரம் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. ...