சிரிக்கத்தெரிந்த சிவன்
சிரிக்காதவர்கள், அல்லது சிரிப்பார்கள் என்று நாம் நினைக்காதவர்கள் சிரித்தால் வியப்பாகத்தான் இருக்கும். 90ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பேரறிஞர் ம.ரா.போ.குருசாமி அவர்களிடம் திருவள்ளுவரின் நகைச்சுவை பற்றிக் கேட்டபோது, ‘இருக்கு! ஆனா போலீஸ்காரர் சிரிச்ச மாதிரி இருக்கு!’ என்றார். நகைச்சுவை என்பது சூழல்களால் தீர்மானிக்கப்படும் விஷயம்தான்.பல தலைமையாசிரியர்கள் சிரிப்பதில்லை என்பது, பொதுவான நம்பிக்கை. மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களையும் நிர்வாகம் செய்ய வேண்டியிருப்பதால் கூட இருக்கலாம். ஆனால் தலைமைப்பீடங்களில் இருப்பவர்கள் பலரும் நகைச்சுவையாகப் பேச முயல்வார்கள். அதில் துளிக்கூட நகைச்சுவை அம்சமே இருப்பதில்லை.ஆனால் உடனிருப்போர் சிரித்து உருளுவார்கள். அதற்கும் ...
கோலமயில் அபிராமியே
ஊர்கொடுத்த வரிகளை உதடுகளில் தாங்கியே உலகத்தைச் சுற்றி வந்தேன் உரங்கொடுத்த உணர்வினை வரங்கொடுத்த பலரையும் உள்ளத்தில் ஏற்றி நின்றேன் பேர்கொடுக்கும் பண்புகள் பிறர்தந்த பரிசோநீ பிறவியில் தந்த கொடையோ பழக்கத்தில் வந்தவர் நெருக்கத்தில் இணைந்திடும் பெற்றிமை உந்தனருளோ நார்தொடுக்கும் பூக்களாய் நான்கற்ற தமிழினை நல்கினேன் வேறொன்றில்லை நாவிலும் தாளிலும் நடமாடும் தமிழன்றி நானொன்றும் செய்ததில்லை யார்கொடுத்த புண்ணியம் என்பதை அறிகிலேன் யானென்று ஆடமாட்டேன் யாதிலும் நிறைகின்ற மாதவச் செல்வியே எழிலரசி அபிராமியே தீண்டாத வீணையில் தீராத ஸ்வரங்களாய் தொடர்கின்ற ...
2010 கண்ணதாசன் விருதுகள்
கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.50,000 ரொக்கப் பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருதுகள் கடந்த ஆண்டு, திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கும், பாடகர் அமரர் டி,ஆர்.மகாலிங்கம் அவர்களின் புதல்வியும் பாடகியுமான திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2010 ம் ஆண்டுக்கான விருதுகள் கவிஞர் கல்யாண்ஜி அவர்களுக்கும், அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் புதல்வர் டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இது அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பவள விழா ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது. கவியரசு ...
கவிஞர்கள் திருநாள் விருது -2010
கவிஞர் வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித் தமிழர் பேரவை நடத்தும் கவிஞர்கள் திருநாள் ஜூலை 13 காலை 10.00 மணியளவில் சென்னை டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் நிகழ்கிறது. 2010 ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது, முதுபெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் பரிந்துரையால் கந்தன் கருணை திரைப்படத்தில் வாய்ப்புப் பெற்று,”திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலையில் எதிரொலிக்கும்” என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் திரு. பூவை ...
அந்தியின் சிரிப்பு
அந்தியிருளால் கருகும் உலகு கண்டேன் அவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன் என்றார் பாவேந்தர். படரும் இருளில் உலகு கருகுகிறது என்ற கற்பனை பற்றி இரவுலாவிகள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை. கையில் ஒரு பழைய தாளை வைத்துக் கொண்டு, எரியும் மெழுகுவர்த்தியில் உரசினால்பரபர வென்று தீ பரவும்போதே தாள்கள் கரியாகி உதிரும். பெற்றோரோ மற்றோரோ எரித்த காதல் கடிதங்களை தண்ணீரில் கரைத்து விழுங்கி சரித்திரம் படைத்த காதலர்களை மரோசரித்ராவில் பார்த்திருக்கிறோம். காகிதம் கருகுகிற வேகத்தில் எங்கும் இருள் படர்ந்த ...
முன்னே பின்னே இருக்கும்
தமிழில் சில சொற்கள் மேம்போக்காகக் கையாளப்பட்டாலும் அடிப்படையில் அவற்றுக்கு வேறுபொருள் இருக்கும்.கன்னா பின்னா என்றொரு பிரயோகம் உண்டு. கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். பின்னா என்பது, அவனுக்குப் பின்னால் பிறந்தவனாகிய தருமனைக் குறிக்கும்.. ஒருவரை கர்ணமகராசா, தருமமகராசா என்றெல்லாம் புகழ்வதுதான் கன்னா பின்னா என்று புகழ்வது. (உடனே உங்களுக்கு ஏதேனும் கவியரங்குகள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை). கர்ணன் தன் அண்ணன் என்று தெரியாமலேயே தருமன் கடைசிவரை எதிர்க்கிறான். தருமன் தன் தம்பி என்று தெரிந்தும் கர்ணன் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கிறான் தருமன் ...