இப்படித்தான் ஆரம்பம் – 31
கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய களங்களில் கவியரங்கமும் ஒன்று. கவியரங்கம் என்னும் வடிவத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்களில் கவிஞரும் கலைஞரும் குறிப்பிடத்தக்கவர்கள். கவிஞர் காங்கிரஸ் இயக்கத்திற்குச் சென்ற பிறகு அங்கும் இந்த வடிவத்தை பிரபலப்படுத்தினார். கவியரங்குகளில் கவிஞரால் பாடப்பெற்று பல ஊர்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆயின. தொன்மையான சிறப்புகள் கொண்ட மதுரையைப் பாடுகிற போதெல்லாம் கவிஞருக்குள் உற்சாகம் பொங்கிப் பிரவாகமெடுத்தது. அது புதிய கற்பனைகளைக் கொண்டு சேர்த்தது. நக்கீரனை மதுரையில் சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்தது பற்றி திருவிளையாடல் புராணம் பேசுகிறது. ஏன் சிவபெருமான் எரித்தார் என்பதற்கு கவிஞர், பரஞ்சோதி முனிவரும் சொல்லாத காரணமொன்றைச் சொல்கிறார். ‘மங்கையர்தம் கூந்தலுக்கு வாசமுண்டோ மணமென்பது இயற்கையிலே வருவதுண்டோ ...
இப்படித்தான் ஆரம்பம்-30
விடுதலைப் போராட்டத்திற்குப் பிற்பட்ட காலத்தில் தேசிய உணர்வு தீபோல் பரவிய சூழல் சீன யுத்தத்தின் போதும் பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் ஏற்பட்டது. இந்த இரண்டு தருணங்களிலும், சந்நதம் கொண்டு சங்கெடுத்து முழங்கினார் கவிஞர். தன்னுடைய கவிதைகளின் மூன்றாம் தொகுதியை மங்கலமானதொரு வாழ்த்து கவிதையுடன் தொடங்குவார். பெற்றவர் வாழ்க!பெரியவர் வாழ்க! உற்றவர் வாழ்க !உறவினர் வாழ்க! கொற்றவன் கோட்டைக் கொடிமரம் வாழ்க! கொல்புலித் தானை கூட்டங்கள் வாழ்க ! தானைத்தலைவர் தனித்திறம் வாழ்க! தலைவர் அமைச்சர் சால்புற வாழ்க! என்று வாழ்த்து மலர்கள் வரிசையாய் பூத்துக் குலுங்கும் அந்தக் கவிதையில், எங்கள் பகைவர் எமையணுகாமல் தங்கள் பூமியில் தழைத்துயிர் வாழ்க என்று பாடியிருப்பார் ...
இப்படித்தான் ஆரம்பம்-29
தமிழிலக்கியத்தில் கையறு நிலைக் கவிதைகள் காலங்காலமாகவே உள்ளன. புரவலன் மறைந்த நாட்டில் நின்று கொண்டு புலவர்கள், முல்லையும் பூத்தியோ என்று கேள்வி எழுப்பினார்கள். தசரதன் மறைவு குறித்து கம்பன் எழுதிய கவிதை, எக்காலத்துக்கும் யாருக்கும் பொருத்தம் என்று கவிஞர் தன் கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார். “நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர் தந்தாய்!தனியறத்தின் தாயே! தயாநிதியே! எந்தாய் !இகல்வேந்தே ! இறந்தனையே! அந்தோ!மற்றினி வாய்மைக்கு யாருளரே!” இது காந்திக்கும் பொருந்தும்,காமராஜருக்கும் பொருந்தும் என்பார் கவிஞர். கையறு நிலைக்கவிதைகளின் நெடும்பரப்பில் பாரதியும் பங்கேற்றான்.ஓவியர் ரவிவர்மா மறைந்த போது, ...
வீரன் சிரிக்கிற கோலம்
கற்பகச் சோலையின் வண்ணத்துப்பூச்சிமேல் கல்லை எறிகிற வேடன்-இவன் சொப்புச் சமையலில் உப்புக் குறைவென சீறி விழுகிற மூடன் அற்பத் தனங்களின் பெட்டகம் ஒன்றினை ஆக்கிச் சுமக்கிற பாலன் -இவன் செப்பும்மொழியினில் செப்பம் கொடுத்தவன் செந்தூர் நகர்வடி வேலன் கானலின் ஓட்டத்தை கங்கையின் ஊட்டமாய் கண்டு உளறிய பேதை-இதில் வானப் பரப்பிடை வாழ்ந்திடும் மேகத்தை வாங்கியதாய் ஒரு போதை ஊனின் சுகங்களில் ஊறிய நெஞ்சமும் ஊரைப் பகைத்திட்ட வேளை-நல்ல ஞான விடியலை நெஞ்சில் கொடுத்தது நாயகன் கந்தனின் லீலை ஓலமிடும் நெஞ்சில் ஓமெனும் நாதத்தை ஓங்கிடச் செய்தவன் யாரோ-அந்த நீலமயில்மிசை சூரியனாய் வந்து நேரில் ...
இப்படித்தான் ஆரம்பம் -28
ஜனநாயக சோஷலிசத்தின் தளகர்த்தராக காமராஜரைக் கண்ட கவிஞரின் கண்கள், அந்தக் கோட்பாட்டின் முதல் எதிரியாக ராஜாஜியை வரித்துக் கொண்டது. எனவே ஜனநாயக சோஷலிசத்தை வற்புறுத்திப் பாடுகிற இடங்களிலெல்லாம், கவிஞர் ராஜஜியைத் தாக்கவும் தவறவில்லை. 1965ல் கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இரண்டு பெண்களை ஒப்பிட்டு ஜனநாயக சோஷலிசத்தை விளக்க கவிஞர் முற்படுகிறார். ஒருநாள் வீட்டில் கவிஞர் ஓய்வாகப் படுத்திருந்தாராம். இருப்பவர்கள், இல்லாதவர்கள் இடையிலான பள்ளத்தை மாற்றுவது பற்றிய பெருங்கனவில் கவிஞர் இருந்தாராம். அப்போது இருகைகள் தன் முகத்தைத் தழுவக் கண்டு கண்கள் திறந்தாராம். இனி கவிஞரே தொடர்கிறார் ‘கழுத்து முதலாகக் கால்வரைக்கும் ஒருசீராய்ப் பருத்திருக்கும் என்மனைவி பக்கத்தில் நின்றிருந்தாள் முதலாளித் தத்துவத்தை முழுவடிவில் பார்த்ததுபோல் ...
இப்படித்தான் ஆரம்பம் – 27
காமராஜர் மீது கண்ணதாசன் கொண்டிருந்த பக்தி அபாரமானது. காமராஜர் மீதிருந்த ஈர்ப்பும், திராவிட இயக்கம் மீதிருந்த வெறுப்பும் சேர்ந்து கொண்டது. கவிஞரின் பாட்டுடைத் தலைவனாய் விளங்கினார் காமராஜர். “முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன் அரசியலைக் காதலுக்கு அர்ப்பணிப்போர் மத்தியிலே காதலையே அரசியலில் கரைத்துவிட்ட கங்கையவன்” என்ற வரிகளும், “ஆண்டி கையில்ஓடிருக்கும் அதுவும் உனக்கிலையே” என்ற வரியும் காமராஜ் நேசர்களால் காதலுடன் உச்சரிக்கப்படுபவை. காமராஜரின் தலைமைப் பண்பு பற்றிய கவிஞரின் பிரமிப்பு, லால்பகதூர் ...