இப்படித்தான் ஆரம்பம் – 26
“அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே” என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது, “நான் மாறவில்லை! என் தலைவர்கள் மாறுகிறார்கள்!” என்று சொன்னார். அவருடைய மற்ற அரசியல் அறிவிப்புகளைப்போலவே தமிழகம் இதையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டதுதான் வருத்தமான விஷயம். தாங்கள் வகுத்த கொள்கைகளிலிருந்து தலைவர்களே முரண்படுகையில் அந்தத் தலைவர்களுடன் கவிஞர் முரண்பட்டார் என்பதுதான் அந்த வாக்குமூலத்தின் பொருள். கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட அரசியல் மதிப்பீடுகளும், மாற்றிக்கொண்ட நிலைப்பாடுகளும் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்போல் தோன்றக் கூடும். உணர்ச்சி வேகம் உந்தித் தள்ளி ஒவ்வொரு முடிவையும் அவர் எடுத்தார் என்று கருதுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் தீர யோசித்தால் அறஞ்சார்ந்த ...
இப்படித்தான் ஆரம்பம்-25
ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது. உடல்நலனை ஆய்வு செய்ய மனிதனின் இரத்தமும் கருவிகளும் பயன்படுகின்றன. இந்த எச்சங்களாலும் ஒருவனைத் தக்கான், தகவிலன் என்று வரையறை செய்ய இயலும். அதேபோல மனிதனின் செயல்களே அவனைஅளப்பதற்கான கருவிகள். உணர்ச்சியின் கைப்பொம்மையாய் உலவுவதும், அறிவின் துணைகொண்டு ஆளுவதுமான இரண்டு வழிமுறைகளில் மனிதன் எதைத் தேர்வு செய்கிறான் என்பதை அவன் ஆய்வு செய்ய மறக்கும்போதுதான் அவனைப் பற்றி அடுத்தவர்கள் அதிகம் பேசுகிறார்கள். கவிஞர் கண்ணதாசன், தன்னை ஆய்வு ...
இப்படித்தான் ஆரம்பம் – 24
கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுயவிமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை,தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான். ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை.சுய விமரிசனமாய் வளர்ந்து, சுய தரிசனமாய்க் கனிந்தன என்பதுதான் இதுவரை வெளிவந்துள்ள அவரது கவிதைகளின் ஏழுதொகுதிகளும் நமக்குக் காட்டுகிற உண்மை. (இதுவரை வந்துள்ள தொகுதிகள் என்று நான் சொல்லக்காரணம், கவிஞரின் மீதமுள்ள கவிதைகளைத் தொகுத்தால் இன்னும் இரண்டு தொகுதிகள் கொண்டுவரலாம் என்று சில ஆண்டுகளுக்குமுன் கவிஞரின் உதவியாளர் ...
இப்படித்தான் ஆரம்பம்-23
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள ஈஷா யோக மையத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. அங்கே அமைந்திருக்கும தியானலிங்கம், பிராணப் பிரதிஷ்டையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.யோக மரபில் , மனித உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதாகச் சொல்வார்கள். அந்த ஏழு சக்கரங்கள் தியானலிங்கத்திலும் அமைந்துள்ளன. எழு சக்கரங்களும் முழுவீச்சில் தூண்டப்படுவதே பிராணப்பிரதிஷ்டை.. சக்தி முழுவீச்சில் தூண்டப்படுகையில் சிவம் எனும் அம்சம் அங்கே நிகழ்கிறது. இதுதான் பிராணப் பிரதிஷ்டையின் தாத்பர்யம்.. ஒரு மனிதனுக்குள் இந்த சக்திநிலை தூண்டப்படும் போது அவன் சிவனாகவே கருதப்படுகிறான்.திருமூலர்,இதைத்தான், “குருவே ...
பிச்சியின் தாய்மை வேகம்
தூளி அசைத்திடும் காளி வளைக்கரம் தூங்க விடாதொரு நேரம்-அவள் ஆளும் இரவினில் ஆடும் சதங்கைகள் ஆயிரம்- செவிகளின் ஓரம் நாளில் படர்ந்திடும் மூல இருளெங்கள் நாயகி அவளது கோலம்-மலர்த் தாள்கள் அசைவினில் தாவி யெழுந்திடும் தந்திமி தோம்திமி தாளம் தாயவள் அள்ளித் தோள்களில் இடுவாள் தணலும் குளிரும் தழுவும் சேயெனக் கொஞ்சிச் சிறுமுத்தம் இடுவாள் செய்வினை எல்லாம் நழுவும் பேயென சினந்து பூமியில் எறிவாள் பதட்டத்தில் உயிரும் உலரும் மாயையின் கருவில் மறுபடி இடுவாள் மறுநொடி பவவினை தொடரும் பிள்ளையின் கைகளில் பொம்மைகள் தந்தால் பேசாதிருக்குமே பாவம் பிள்ளைகள் தமையே பொம்மையாய் ...
இப்படித்தான் ஆரம்பம் – 22
நிறம் மாறாத பூக்கள் படம். பாடலுக்கான சூழலை, கவிஞர் கண்ணதாசனிடம் விளக்கினார் இயக்குநர் பாரதிராஜா. “யார் ஹீரோ?” வினவினார் கவிஞர். ‘புதுப்பையன்தாண்ணே! ஒண்ணு ரெண்டு படங்களிலே நடிச்சிருக்கான். “என்றார் பாரதிராஜா. “ஹீரோயின்?” அதுவும் புதுசுதாண்ணே! நம்ம ராதா அண்ணன் பொண்ணு..நான்தான் அறிமுகப்படுத்தினேன். இந்தப்படத்திலே வில்லன் கூட புதுசுதாண்ணே” என்றார். கவிஞர் முகம் மலர்ந்தது. “அடேடே! எல்லாருமே புதுசா! வரட்டும் வரட்டும்! நல்லா வரட்டும்.!” மனங்கனிந்த அவருடைய வாழ்த்து மங்கலமான பல்லவியாகவும் மலர்ந்தது.. “ஆயிரம் மலர்களே மலருங்கள்!அமுத கீதம் பாடுங்கள்!ஆடுங்கள்!காதல் தேவன் காவியம்- நீங்களோ..நாங்களோ..நெருங்கி வந்து சொல்லுங்கள்!சொல்லுங்கள்!” கவிஞரின் வாழ்த்தோ வசையோ பலிக்கும் என்கிற நம்பிக்கை, அவர் காலத்தில் பரவலாக இருந்தது. அவருக்கு வாடகைக்குக் கொடுப்பதாக வாக்களித்த ஸ்டூடியோ ...