Blog

/Blog

இப்படித்தான் ஆரம்பம் – 21

“சரஸ்வதியின் கையிலுள்ள வீணைபோல் இருக்கிறீர்களே! உங்களை கவனிக்க யாருமில்லையா?”  என்று கவிஞர் கண்ணதாசனிடம் கேட்டவள், அவரிடம் கொஞ்ச நேர உறவுக்காக வந்த பெண்ணொருத்தி. அந்தச் சொல்லே, வசந்தமாளிகை திரைப்படத்தில் “கலைமகள் கைப்பொருளே!உன்னை கவனிக்க ஆளில்லையோ!விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ” என்ற பல்லவியாய்ப் பூத்தது. கவிஞர் அத்தகைய பெண்களை அன்புடனும் புரிதலுடனுமே அணுகிவந்திருக்கிறார் என்பது அவருடைய படைப்புகள் வழியாகவும் பாடல்கள்வழியாகவும் நமக்குப் புலப்படுகின்றன. அவர்பால் இதய அன்பு வைத்து, இன்பம்கொடுத்த பெண்ணொருத்தி இளைய வயதிலேயே இறந்தது குறித்து ...

இப்படித்தான் ஆரம்பம் – 20

திருமண வரவேற்பு மேடையில் மாலையும் கழுத்துமாய் நின்ற அந்த இளம்பெண்ணுக்குக் கண்கள் அடிக்கடி கலங்கின. அடிக்கடி வாசலைப் பார்த்துக் கொண்டாள். காதல் கணவன் கைகளை மெல்ல அழுத்தும் போதெல்லாம் பளிச் புன்னகை ஒட்டிக் கொள்ளும். பெற்றோரின் சம்மதமில்லாமல் செய்து கொண்ட திருமணம். பெற்றோர் காலையில் கோயிலில் நடந்த திருமணத்திற்கும் வரவில்லை. வரவேற்புக்கும் வரவில்லை. வீட்டுக்குத் தெரியாமல் வந்த பெரியப்பா மகளைப் பார்த்ததும் அழுகை பீறிட்டு வந்தது மணப்பெண்ணுக்கு.. பரிசுப் பொருளுடன் வரிசையில் அடுத்தாற்போல் நின்றிருந்த எனக்கு, அவளுடைய பெரியப்பா பெண் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் காதில் விழுந்தன. ...

இப்படித்தான் ஆரம்பம் – 19

அழுத்தமாக ஒட்டிக் கொள்ளும் தரமான கோந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தன் பொதுப்பங்குகளை அறிவிக்க முற்பட்ட போது தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை மட்டுமின்றி பங்குகள் அறிவிப்பதையும் குறிக்கும் வி தமாக  விளம்பரம் வெளியிட விரும்பியது. நவீன ஓவியர் ஒருவரை அர்த்தநாரீசுவரர் ஓவியத்தை வரையச் சொல்லி அதன்கீழ் ஒரு வாசகம் எழுதினோம்….The Ultimate Bond என்று. ஒவ்வொன்றுக்கும் உச்சப் படிமம் ஒன்றுண்டு. ஒருங்கிணைப்பின் உச்சப் படிமம் அர்த்தநாரீசுவரர். Bond  என்கிற ஆங்கிலச் சொல்லின் இரண்டு அர்த்தங்கள் இங்கே கைகொடுத்தன. யானைகளின் உச்சம் ஐராவதம் என்பதாலும், பசுக்களின் உச்சம் காமதேனு என்பதாலும், “யானைகளில் நான் ஐராவதமாயிருக்கிறேன், ...

இப்படித்தான் ஆரம்பம் – 18

“அவள் ஒரு தொடர்கதை”திரைப்படத்தின் கதாசிரியர் திரு.எம்.எஸ்.பெருமாள். அமரர் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் புதல்வர்.திரு.சுகி.சிவம் அவர்களின் மூத்த சகோதரர். சென்னை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், வெவ்வேறு மாநிலங்களில் நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது “தெய்வம் தந்த வீடு” பாடல் பற்றி அபூர்வமான தகவல் ஒன்றைச் சொன்னார். தன் சம்பாத்தியத்தால் குடும்பத்தைத் தாங்குகிற இளம்பெண், ஊதாரியாகவும், ஊர்சுற்றியாகவும் குடிகாரனாகவும் இருக்கும் அண்ணனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள்.அண்ணன் கதாபாத்திரம் ஆர்ப்பாட்டமாக வெளியேறுவதுதான் கதை. அங்கே ஒரு பாடல்வைக்க வேண்டுமென ...

இப்படித்தான் ஆரம்பம் – 17

கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. “கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் மறைந்து விட்டாரே’  என்று ஆதங்கப்பட்டிருந்தார் அவர். தமிழ் இசைமரபுக்கு மிகவும் புதிதான அம்சங்களை திரைப்பாடலிலேயே செய்தவர் கண்ணதாசன் என்பதால் தான் அப்படிக்கேட்டுக் கொண்டதாக சொன்ன சுப்புடு, “விரக தாபம் என்கிற விஷயம் இசைப்பாடல்களில் எழுதப்பட்டு வந்த விதத்தையும்  கண்ணதாசன் கையாண்ட புதுமையையும் ...
More...More...More...More...