Blog

/Blog

இப்படித்தான் ஆரம்பம் – 17

கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. “கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் மறைந்து விட்டாரே’  என்று ஆதங்கப்பட்டிருந்தார் அவர். தமிழ் இசைமரபுக்கு மிகவும் புதிதான அம்சங்களை திரைப்பாடலிலேயே செய்தவர் கண்ணதாசன் என்பதால் தான் அப்படிக்கேட்டுக் கொண்டதாக சொன்ன சுப்புடு, “விரக தாபம் என்கிற விஷயம் இசைப்பாடல்களில் எழுதப்பட்டு வந்த விதத்தையும்  கண்ணதாசன் கையாண்ட புதுமையையும் ...

இப்படித்தான் ஆரம்பம்-16

“எட்டாம் வகுப்புவரை எட்டத்தான் என்பெற்றோர் விட்டார் பின்னென்னை ஏழ்மையிலே விட்டார்” என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஆனாலும் இலக்கண அறிவில் அவர் யாருக்கும் சளைத்தவரில்லை. வெண்பா தவிர மற்ற வடிவங்களில் எல்லாம் விளையாடியிருக்கிறார். குறிப்பாக அறுசீர் விருத்தத்தில் மன்னன். சினிமாவிலும் இலக்கண அதிசயங்களை வலிக்காமல் புகுத்தியவர் அவர். அதற்கோர் உதாரணம், அந்தாதி….ஒரு வாசகத்தின் கடைசிச்சொல் அடுத்த வாசகத்தின் ஆரம்பமாக இருப்பதே அந்தாதி…. இலக்கியத்தில் பொன்வண்ணத்தந்தாதி, கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, அபிராமி அந்தாதி என்று பலவகைகள் உண்டு மூன்று முடிச்சு படத்தில் முக்கோணக் காதலில் மூன்று பேரும் பாடும் விதமாக அவர் எழுதிய அந்தாதிப் பாடல் வெகு பிரபலம். “வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்” என்கிற பாடல் நம்மில் பலரும் நன்கறிந்ததுதான்.இருவருக்கு வசந்தகால நதியாகத் தோன்றுவது ஒருவருக்கு ...

இப்படித்தான் ஆரம்பம்-15

கண்ணதாசனின் கவித்துவம் கனல்வதற்கு முக்கியக் காரணம், வார்த்தைகள் வந்து விழும் அனாயசம். இந்த அனாயசத்தையும் எளிமையையும் விளக்க முடியாமல் இன்று பலரும் திணறுகிறோம். கண்ணதாசன் பாடல்களில் எளிமையாக வந்து விழும் வார்த்தைகளுக்குள் நூல்பிடித்துக் கொண்டே போனால் அது நம்மை வைரச்சுரங்கங்களிலே கொண்டுபோய் சேர்த்து விடுகிறது. நீண்ட நாட்களுக்குப்பின் “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுவாக காதல் பாடல்களில் வரும் வர்ணனைகள் பெண்ணை ஆதர்சப் பெண்மையாகவும், தாய்மையின் தழலாகவும் சித்தரிப்பது ரொம்ப அபூர்வம். சீதைக்கு, வனவாசத்தில் ...

இப்படித்தான் ஆரம்பம்-14

கண்ணதாசனின் தைப்பாவை பல விதங்களிலும் வித்தியாசமான முயற்சி. திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் பேசப்படும் பாவை நோன்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தைமாதத்தையே ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி “தையாகிய பாவையே” என்று ஒவ்வொரு பாடலிலும் அழைக்கும் விதமாகத்தான்  தைப்பாவை அமைந்திருக்கிறது.   திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் கவிஞர் இருந்தபோது எழுதப்பட்டது தைப்பாவை. ‘எந்தமிழர் கோட்டத்திருப்பார் உயிர்வளர எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர எந்தமிழர் கைவேல் இடு வெங்களம் சிவக்க எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ்செழிக்க’ தைமகளை வரவேற்றுத் தொடங்குகிறது தைப்பாவை. அனாயசமான ஓசையழகுடன் அவர் எழுதியுள்ள இப்பாடல்களில் ஒரு காட்சி ஒழுங்கும் தானாகவே அமைந்துவிடுவதுதான் ஆச்சரியம். ...

அப்பாடா சாமி இது எப்போது முடியும்

திருப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன் ,சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் தேர்தல் அறிக்கைகள் அடங்கிய பிரசுரம் வெளியிடப்பட்டது. அதிலிருந்த வாக்குறுதிகளில் ஒன்றிரண்டு…. 1.ஏற்றுமதிக்கு வசதியாக திருப்பூருக்குக் கடலைக் கொண்டு வருவது 2.எங்கள் ஆட்சியில் தேனும் பாலும் ஓடுமென்பதால் மொண்டு குடிக்க ஆளுக்கொரு டம்ளர் இலவசமாய்த் தருவது என்று நீண்ட அந்தப் பட்டியலைக்கண்டு திகைத்த பொதுமக்கள் வேட்பாளரின் பெயரைப் பார்த்ததும்  . அவர்,சிற்பி இரகுநாதன். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தலில் போட்டியிட்டார்.தேர்தல் ஆணையத்திடம் போராடி அவர் ...

இப்படித்தான் ஆரம்பம்-13

கண்ணதாசனின் எழுத்துக்களில் இருக்கும் எளிமை,ஆபத்தான எளிமை.மேலோட்டமாகப் பார்த்தால், ஒன்றுமில்லாததுபோல் தோன்றிவிடும். ஆனால் ஆழமான விஷயங்கள்அனாயசமாய் சொல்லப்பட்டிருக்கும்.  வைணவத்தின் முக்கியமான தத்துவக்கூறு ஒன்றுண்டு. இறைவனை, ஐந்து நிலைகளில் வைத்துப் பார்க்கிறது வைணவம். பரம்பொருளாக செயல் கடந்த நிலையில் இருப்பது, பரநிலை. இருபுறமும் தேவியர் சூழ்ந்திருக்க, பள்ளி கொந்திருக்கும் நிலை, வியூக நிலை. பத்து அவதாரங்களாக பூமிக்கு வந்தது, அவதாரநிலை. ஆலயங்களில் மூர்த்தமாக எழுந்தருளியுள்ள நிலை, அர்ச்சை நிலை.காற்று, ஒளி, ஒலி, வெளிச்சம் என்று எங்கும் வியாபித்துள்ள நிலை, அந்தர்யாமி நிலை. தனிக்கவிதையொன்றில்,போகிற போக்கில் கண்ணதாசன் ...
More...More...More...More...