Blog

/Blog

ஓசை எழுப்பும் உள்மனமே

வீசிய பந்தின் விசைபோலே வெய்யில் நாளின் திசைபோலே ஏசிய வார்த்தையின் வலிபோலே எழுதி முடியாக் கவிபோலே பேசிட முடியாத் தீவிரமாய் பேறுகாலத்தின் ஆத்திரமாய் ஓசை எழுப்பும் உள்மனமே உண்மைகள் தூங்கட்டும் உன்னுடனே எல்லாச் சொல்லையும் சொல்வதெங்கே எல்லாக் கனவையும் காண்பதெங்கே நில்லாப் பொழுதுகள் மீள்வதெங்கே நினைவுகள் அனைத்தையும் வாழ்வதெங்கே கல்லால் எறிந்த காயங்களே கண்ணைக் கட்டிய மாயங்களே பொல்லா விடுகதைப் பொழுதுகளே போதிக்க என்னென்ன பாடங்களே உலகை வெல்வதும் ஒருபொழுது உவகை மிகுவதும் ஒருபொழுது நிலைகள் குலைவதும் ...

இராமனிடம் சில கேள்விகள்

சித்திர மாடத்தின் மேலிருந்து-அந்தச்சீதைதன் தாய்மடி பார்த்திருந்தாள்எத்தனை நெஞ்சுரம் காகுத்தனே-உன்அத்தை மடியினில் நடந்துவந்தாய் கல்லாய்க் கிடந்த அகலிகையும்-உன்கால்துகள் பட்டதும் பெண்ணானாள்முள்ளாய் முளைத்த தாடகையும்-உன்மோதுகணை பட்டேன் மண்ணானாள்? நாத மொழிகேட்ட சபரியுமே-உனைநேர்கொண்டு பார்த்ததில் வீடுபெற்றாள்காதல் மொழிசொன்ன சூர்ப்பநகை-உன்கண்களில் பட்டென்ன பாடுபட்டாள் காதல் நெருப்பில் சிலகாலம்-கொடுங்காட்டு நெருப்பினில் சிலகாலம்ஆதரவில்லாமல் தென்னிலங்கை- மண்ணில்அச்ச நெருப்பினில் சிலகாலம் கற்பின் பெருங்கனல் சானகியும்-அய்யோகண்ட துயரங்கள் பார்த்துவிட்டாய்அற்புதப் பெண்ணவள் வாடும்படி-நீஅக்கினி யில்இட்டு வாட்டிவிட்டாய் வாலியை மட்டுமா?யாரையும்நீவாழ்வினில் நேர்படக் கொல்வதில்லைகால்ன் எனுமம்பை ஏவுகிறாய்-எவர்கண்களின் முன்னும்நீ செல்வதில்லை எல்லாம் மறைபொருள் ...

ஜீவநதியொன்று….

திருவடித் தாமரை மலர்ந்தது தேன்துளி என்னுள் நிறைந்தது குருவடிவாக அருளுருவாக குளிர்மழை இங்கு பொழிந்தது-என் கொடும்வினை எல்லாம் கரைந்தது   சுடுமணல் வழியினில் தினம்நடந்தேன்-ஒரு தருநிழல் தேடியே தினம்நடந்தேன் திருமுகம் அறிந்ததும் மனம் குளிர்ந்தேன்-உன் அருளெனும் சுனையினில் உயிர்நனைந்தேன் தாவரம் ஒன்றின் தவிப்படங்க ஜீவநதியொன்று தரையிறங்க அடடா…இதுஎன்ன அதிசயமோ அதுதான் அதுதான் ரகசியமோ வினைகளின் வலையினில் நேற்றின்சுகம் புதிரென்று விரட்டிடும் பார்த்த சுகம் கதவுகள் திறந்ததும் காற்றின்சுகம் குழலினில் மிதந்திடும் பாட்டின் சுகம் ஏங்கிடும் வாழ்வினில் ஏதுசுகம் ...

ஆடலில் பேசிடுவான்

கீற்று நிலாவினில் பாலினை ஊற்றிக் கிறுக்கன் தலைசுமந்தான் ஊற்றி விடுமென்ற அக்கறை இன்றி ஊர்த்துவம் ஆடுகிறான் ஈற்றினை அறியா வான்வெளியெங்கும் ஈசன் ஆடுகிறான் போற்றி யிசைக்கிற விண்மீன் திரள்களின் பாட்டினுக் காடுகிறான் நாதம் இவனது நாபியில் பிறந்தது நாளும் புதிய ஸ்வரம் பாதம் அசைந்திட பூமி சுழலுது பொழுதுகள் இவனின் வரம் வேதம் இவனது வார்த்தையில் மலர்ந்தது வானம் இவனின் தவம் மோதி அலைகிற பேரலை யோசிவன் மூச்சினில் உருண்டு வரும் சாத்திரம் கிரியைகள் சார்புகள் அனைத்தையும் ...

லிங்க பைரவி

பைரவி வந்தாள் பைரவி வந்தாள் பத்துத் திசையதிர ஷங்கரி வந்தாள் ஷாமளை வந்தாள் எங்கள் உளம் குளிர கண்ணொரு மூன்றிலும் மின்னும் நெருப்புடன் அன்னை உருவெடுத்தாள் எண்ணிய காரியம் யாவும் நடத்திட இங்கு குடிபுகுந்தாள் யோகத் தலமல்லவா-இது தியானத் தலமல்லவா மோகத்திருவுருவாய்- எங்கள் பைரவி வந்தமர்ந்தாள் லிங்க வளாகத்திலே-ஒரு ரௌத்திரக் கோலத்திலே பொங்கும் ஒளியாக-அன்னை பேரருள் செய்ய வந்தாள் கேட்ட வரம் கொடுப்பாள் -அன்னை கேடுகள் நீக்கிடுவாள் ஆட்டங்கள் ஆடிடுவாள் -அன்னை அச்சந் தொலைத்திடுவாள் ஊட்டங் கொடுத்திடுவாள்-அன்னை ...

சத்குரு பிறந்தநாள்-செப்டம்பர் 3

நீவந்த நாளின்றுதானோ-இதை நீசொல்லி நான்நம்புவேனோ வான்வந்த நாள்தானே நீவந்தநாள்-மலரில் தேன்வந்த நாள்தானே உன் பிறந்தநாள் ஆதார சுருதிக்கு ஆண்டேது நாளேது அய்யாநீ அதுபோன்ற சங்கீதமே பேதங்கள் ஏதொன்றும் பாராத திருவேநீ பிரபஞ்சங்கள் முழுமைக்கும் பூபாளமே முடிவேதும் இல்லாத ஆகாயமே-உன் மடிமீது நான்கூடப் பூமேகமே படியாத என்னெஞ்சம் படிகின்ற இடமாகும் மலராக அசைகின்ற உன்பாதமே- உன்பார்வைஒளியாக என்னெஞ்சம் அகலாக என்னுள்ளே ஒருஜோதி உருவானதே என்மோகப் புயல்வீச என்தேகம் அலைபாய நீதந்த ஒளிமட்டும் நிலையானதே நீதந்த பாதைதான் நான்செல்வது-அதில் நான்வீழும் ...
More...More...More...More...