நெரூர்-சதாசிவ பிரம்மேந்திரர் சந்நிதியில்
முன்பொரு பிறவியில் முகம்பார்த்தேன் -உன் மோன நெருப்பிலென் வினை தீர்த்தேன் பின்னரும் பிறவிப் பிணிசேர்த்தேன் -உன் பொன்னிழல் சேர்ந்திடும் வழிகேட்டேன் கருவூர் குடிபுகும் உயிருக்கெல்லாம்- நல்ல கதிதர உனக்குத் திருவுளமோ நெரூரில் அமர்ந்த நல்லொளியே- உன் நெஞ்சினில் எனக்கும் ஓரிடமோ திக்குகள் அம்பரம் என்றிருந்தாய்-கொண்ட தேகத்தின் எல்லைகள் தாண்டிநின்றாய் பக்கபலமே சதாசிவமே-எங்கள் பிரம்மேந்திரனே அருள்தருவாய் மின்னல் தெறிக்கும் அருள்நாதம்-அன்று மணலில் எழுதிய உன்கீதம் நின்று நிலைக்கும் அவதூதம் -உன் நிசப்தம் தானே சதுர்வேதம் 2 ஞான சதாசிவமே ...
வரமா சாபமா வார்த்தைகள்??
சொல்லால் கனத்தமனம் சூனியத்தால் இன்பமுறும் நில்லா நினைவுகள் நின்றுவிடும்-பொல்லாக் குரங்கு மனமிதுவுங் குன்றேறி நிற்கும் விரல்பறிக்கும் ஞானக் கனி. சச்சரவுக் கிச்சையாய் சாடுகிற சாட்டையும் உச்சரிக்கும் சொல்லென் றுணர்வோமே-நச்சரிக்கும் வார்த்தைகளைச் சாடி வரிசையிலே வாவென்று சீர்த்தமதி சொன்னால் சுகம் பாலை சுடுமென்றல் பழையகதை: மௌனத்தின் சாலையிலே சூளையும் சோலைதான் – லீலையிதை ஆக்குபவள் யாரென் றறியாமல் ஆடினால் பாக்குவைக்க நேரும் பழிக்கு. நாவு புரள்கையிலே நாமும் புரள்கின்றோம் கோவில் புறாபோலக் கூச்சலிட்டு-ஆவலாய் சேர்த்துவைத்த சொந்தம் சுடுதணலாய் ஆவதும் ...
நவராத்திரி கவிதைகள் (14)
1.குமரித் தெய்வம் சின்னஞ் சிறுமியிவள்- நம் செல்வக் குமரியிவள் என்னில் நிறைந்திருக்கும்-ஓர் இன்பக் கவிதையிவள் தன்னந் தனிமையிவள்-உயர் தாய்மைக் கனிவு இவள் பொன்னில் எழுதிவைத்த -ஒரு புன்னகை ஜோதியிவள் வாலைக்குமரியிவள்- நம் வாழ்வின் பெருமையிவள் மூலக் கனலாகி- நிற்கும் மந்திர ரூபம் இவள் நீலக் கடலருகே-வாழும் நித்திய கன்னியிவள் காலம் உணராத -பெரும் காதல் கனவு இவள் மூன்று கடல்கள் தொழும்-ஒரு மோனத் தவமும் இவள் நான்கு மறைகளுக்கும்-நல்ல நாயகத் தெய்வம் இவள் தோன்றும் புலனைந்தும் -நின்று ...
அதே முகம்……அதேசுகம்…..
15.10.2009 திருக்கடையூர் அதே முகம்……அதேசுகம்…..அன்று தொலைந்ததே அதே இதம் நெஞ்சில் நிறைந்ததே அவள் பதம் பிறவி பலவாகப் பார்த்த முகம் -என்கனவில் பலநேரம் பூத்த முகம்மறந்து கிடந்தாலும் தேடும் முகம்-ஒருமறுமை இல்லாமல் சாடும் முகம் தீப ஒளியோடு தெரிந்த முகம் -என்திசைகள் எல்லாமே அறிந்தமுகம்நாபிக்கமலத்தில் எழுந்தமுகம் – என்நாடி நரம்பெங்கும் நிறைந்த முகம் அமிர்தலிங்கத்தில் லயித்த முகம்- அவன்அருந்தும் நஞ்சோடித் தடுத்த கரம்குமுத மலர்போலக் குளிர்ந்த முகம்-திருக்கடவூர் தலம்காக்கக் கனிந்த முகம் திறந்தும் திறவாத விழியழகும்-அருள்துலங்கும் இதழோடும் ...
உதிக்கின்ற செங்கதிர்…
2009 அக்டோபர் 15. திருக்கடையூரை நெருங்க நெருங்க அதிகாலை வேளையில் செந்நிலவாய் எழுந்தது சூரியன்.அங்கேயே நிகழ்ந்தது அபிராமி தரிசனம் புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை…. கதிரை நிலவாக்கினாள் அதிரும் மனம் ஓய அருளும் அபிராமி அகிலம் எனதாக்கினாள் பதங்கள் அசைந்தாட பட்டர் தமிழ்பாட இருளை ஒளியாக்கினாள் இதயம் அவள்கோயில் எதுவும் அவள்பூசை எனையும் களியாக்கினாள் அகலின் முனையோடு ஒளிரும் சுடரோடு அழகு நகைகூட்டினாள் இகமும் இனியேது பரமும் இனியேது எல்லை அவள்காட்டினாள் சுகங்கள் இவன்வாழ்வில்-சுமைகள் அவள்தாளில் நொடியில் ...
குற்றாலக் கதகதப்பில்
நீரலையின் சாட்டைகொண்டு ஆடுகிறாள் அன்னை நேரவரும் யாவரையும் சாடுகிறாள் அன்னை பேரொலியின் தாளமிட்டுப் பாடுகிறாள் அன்னை பாய்ந்துவந்து எனையணைக்கத் தேடுகிறாள் அன்னை ஆடுகிறாள் அன்னை-அவள் -தேடுகிறாள் என்னை வான்கருணை அருவியாக வந்து இறங்கும்-அதில் ஊன்நனைந்து உயிர்நனைந்து உள்ளம் மயங்கும் நான்தொலைந்து போக அங்கே நேரம் அரும்பும் தேன்பொழிந்து தேன்பொழிந்து தேங்கி நிரம்பும் நேரம் அரும்பும்-தேன் -தேங்கி நிரம்பும் வினைகரைக்கும் கருவியைத்தான் மேனியென்கிறோம் விரைந்துவிழும் அருவியைத்தான் ஞானியென்கிறோம் கனவினிலே காணும் இன்பம் கானலென்கிறோம் கண்னெதிரே விழும் அருவி காளியென்கிறோம் ...