Blog

/Blog

காசிக்காற்று

காசிநகரில் கங்கை வீசும் நதியலைகள் பேசும் மொழிநமசி வாயம் கீசுகீசெனவே பூசலிடுங்கிளிகள் பாஷை அதுநமசி வாயம் ஆசைவிடும்தருணம் ஆகிவரும் மரணம் வாசல் வரும்நமசி வாயம் பாசம் விடும்மனதும் பாரம் சுடும்நொடியில் ஈசன் குரல்நமசி வாயம் இமைகள் கதவடைய இதயம் மடையுடைய அமைதி அதுநமசி வாயம் சுமைகள் சிறகசைய சுடலை விறகெரிய சுடரும் ஒளிநமசி வாயம் இமயம் மனவெளியில் எழும்பும் ஒருநொடியில் நிரம்பும் பனிநமசி வாயம் சமயம் அமைந்துவர சுயங்கல் உணர்ந்தவுடன் கனியும் கனிநமசி வாயம் கடலில் புயலசைய ...

சோடா தமிழர் பானமா ?

நண்பர் சுகா எழுதிய கட்டுரை ஒன்றைக் குழுமத்தில் படித்த நண்பர் துகாராம், சோடா தமிழர் பானமா என்ற கேள்வியை எழுப்பினார்.அது தமிழர் பானமே, கோலி சோடாவில் அடைபட்டிருப்பது தமிழர் மானமே என்று நிறுவி நான் எழுதிய ஆய்வுக் கட்டுரை(?). இது தொடர்பாக வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டங்கள் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது ஓடா நீர்நிலை உலர்மரக் கோடை பாடாப் புள்ளினம் பயிலாப் புல்வெளி நீடார் வெம்மை நீங்கிடத் தமிழர் சோடா பருகிச் சுகம் பெறுவாரே” என்னும் பழம்பாடல் ...

கங்கைக் கரையினிலே

என் வீட்டுக்காரி தீவிரமான மாரியம்மன் பக்தை சார்!” என்னைப்பார்க்காமல், டைமண்ட் ஹோட்டல் அறையிலிருந்த நிலைக்கண்ணாடியைப் பார்த்தபடியே மெல்லிய குரலில் சொன்னார் நண்பர். நிலைக்கண்ணாடி மேசையில் வைக்கப்பட்டிருந்த பையில்தான் அவருடைய மனைவியின் அஸ்தி இருந்தது.காசி டைமண்ட் ஹோட்டலுக்கு அன்று மதிய விமானத்தில் தான் வந்து இறங்கியிருந்தோம்.மறுநாள் காலை அஸ்தி கரைக்க ஏற்பாடாகியிருந்தது காசிக்கு இவ்வளவு விரைவில் மீண்டும் போகக்கூடிய வாய்ப்பு நேருமென்று எதிர்பார்க்கவில்லை.ஆனால் வருத்தம் கலந்த வாய்ப்பு.நண்பருக்கும் எனக்கும் ஒரே நாளில் திருமணம் நடப்பதாக இருந்தது.அவருக்குக் கோவையில்-எனக்கு மதுரையில்.இரு ...

இப்படித்தான் ஆரம்பம்-5

எத்தனையோ குளறுபடிகளுக்கு நடுவிலும் கவியரசு கண்ணதாசன் நினைவு மன்றம் முறையாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது.கவியரங்கிற்குக் கோமகனை அழைத்து வந்தவரும், கண்ணதாசன் விழாக்களுக்கு தாராளமாக செலவுசெய்தவரும்/செய்பவருமான அந்த குறுந்தாடிக்காரர் கிருஷ்ணகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வலம்புரி ஜான் அவர்களை மன்றத்தின் சிறப்புத் தலைவராக விளங்கக் கோரி ஒப்புதலும் பெற்றிருந்தார். நான் ஒரு பிரபலத்தை சிறப்பாலோசகராகத் திகழ ஒப்புதல் பெற்றுத் தருவதாக சொன்னதோடு ஒப்புதலும் வாங்கிவிட்டேன்.அந்தப் பிரபலம்தான் சுகிசிவம் அவர்கள். கோவையில் இராமநாதபுரம் என்றொரு பகுதி.அங்குள்ள வேல்முருகன் கோவிலில் கந்தர் சஷ்டி விழாவில் ...

இப்படித்தான் ஆரம்பம்-4

கண்ணதாசன் மறைவுக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில்,”கண்ணதாசனின் வரிகளுக்கு இதுவரை காணாத பொருள்களையெல்லாம் அவருடைய ரசிகர்கள் காண்பார்கள் “என்று பேசினாராம் ஜெயகாந்தன்.உண்மைதான்.கவிஞரின் வரிகளுக்கு புதிய நயங்களையும் விளக்கங்களையும் தேடித் தேடிச் சொல்லத்தஒடங்கியவர்கள் பலர்.அவர்களில் நானும் ஒருவன். “கூடிவரும் மேகமெனக் கூந்தலைத் தொட்டார்-குவளை போல மலர்ந்ததென்று கண்களைத் தொட்டார்-தொட்டால்ஒடியுமென்று இடையைமட்டும் தொடாமலே விட்டார்”என்ற பாடலை சொல்லிவிட்டு,”இதில் கவிஞர் எவ்வளவு நயமாக ஒரு விஷயம் வைத்திருக்கிறார் தெரியுமா?’என்று நிறுத்துவேன். “மேகத்தை கூந்தலுக்கு உவமை சொன்னார் .கண்களுக்கு குவளை மலர்களை உவமைசொன்னார்.ஆனால் .இடை ...

இப்படித்தான் ஆரம்பம்-3

ரொட்டிக்கடை வீதி கலகலத்துக் கொண்டிருந்தது.அன்று கண்ணதாசன் விழா. ரொட்டிக்கடை வீதி தெருமுனையிலேயே மாலைநிகழ்ச்சி. தெருவெங்கும் டியூப்லைட் கட்டி,சீரியல் பல்ப் போட்டு காலையிலிருந்தே ஏற்பாடுகள் களைகட்டிக் கொண்டிருந்தன. காலை பத்து மணிக்கு முதல் நிகழ்ச்சியாக மைக்செட்காரருடன் தகராறு.ஒலிபெருக்கிகளைக் கட்டியதுமே,ஒலிப்பரிசோதனைக்காக முதல் கேசட்டைப்போட்டார்.”தொட்டால் பூ மலரும்’ என்று பாடல் ஒலித்ததும்,வீதியின் வெவ்வேறு இடங்களில் தோரனம் கட்டிக்கொண்டிருந்த பேரவை நண்பர்கள் சொல்லி வைத்தாற்போல மைக்செட்காரரிடம் ஓடினோம்.”யோவ்! யோவ்! அது கண்ணதாசன் பாட்டு இல்லேய்யா”என்று நாங்கல் கத்த,”டெஸ்டிங்குக்காக தாங்க போட்டேன்” என்று சமாதானம் ...
More...More...More...More...