23. உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்! – 2
சின்னக் குழந்தைகளை மட்டுமின்றி பதின் பருவத்துக்கு முன்னும் பின்னும் இருக்கும். குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதில் தங்களை பெரியவர்கள் எப்படி எடைபோடுகிறார்கள் என்பது வெளிப்படுகிறது. குழந்தைகளிடம் இயல்பாக, இனிமையாக நீங்கள் விருந்தினர்கள் முன்னிலையில் நடந்து கொண்டால் விருந்தினர்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். வீட்டுக்கு வருபவர்கள் பலரும், ஏதோ விசாரணைக் கமிஷன் நீதிபதிகள் போல் குழந்தைகளிடம் பரீட்சை பற்றியும் மதிப்பெண் பற்றியும் மட்டுமே கேட்பார்கள். இவை தவிர குழந்தைகளின் உலகத்தில் எத்தனையோ, விஷயங்கள் இருக்கின்றன. எனவே குழந்தைகளை ...
23. உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்! – 1
ஒரு குழந்தைக்கு, தன்னைப்பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அட மக்குப் பயலே!” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது. அக்கறையாலும் அன்பாலும், குழந்தை திருந்த வேண்டும் என்ற தவிப்பிலும்தான் எல்லாப் பெற்றோரும் கண்டிக்கிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் என்ன பதிவை விடுகிறோம் என்பதுதான் முக்கியம். உங்கள் குழந்தை சராசரியாகப் படிக்கிறதா? இன்னும் படுக்கையை நனைக்கிறதா? ...
22. உழைக்கத் தெரிந்த உள்ளம்!
உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் உயர்வுக்குப் பின்னால் இடைவிடாத உழைப்பே காரணமாய் இருக்கிறது. இதை அடிமனதில் அடிக்கோடிட வேண்டும் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏன் தெரியுமா? அடுத்தவர்களின் உழைப்பை அண்ணாந்து பார்த்து “ஆஹா” என்று பாராட்டும் பலரும், அவரவர் உழைப்பு என்று வரும்போது அலட்சியம் காட்டுகிறார்கள். கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர், கோவையில் சில உறவினர்கள் மூலம் தன் மகனை நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்த்தார். முதல் நாள் அலுவலகத்தில் விட்டு விட்டு அவர் சொன்ன அறிவுரையைக் கேட்க ...
21. உங்கள் விதிகளை உருவாக்குங்கள்!
வாழ்க்கைக்கென்று முன்னோர் வகுத்த விதிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான – நிறைவான – நிம்மதியான வாழ்க்கைக்கு என்னென்ன வேண்டும் என்கிற முடிவை நீங்கள் முதலில் எடுங்கள். உங்கள் வாழ்வுக்கான விதிகளை மற்றவர்களுக்கு இடையூறில்லாமல் நீங்கள் உருவாக்குங்கள். உங்கள் கட்டுக்குள் உங்கள் வாழ்க்கை இருக்கும்போது இன்னும் தெளிவான முடிவுகளை எடுக்க உங்களால் முடியும். சில பேருக்கு அவர்களைப் பற்றிய செய்திகளை மற்றவர்களிடமிருந்து கேட்கும்போது வியப்பாய் இருக்கும். சுயமதிப்பீடு இல்லாத போது இத்தகைய சிரமங்கள் ஏற்படக் கூடும், உங்களை நீங்களே ...
20. வெற்றியாளர்களின் அசத்தல் கருவூலம்!
வெற்றியாளர்களிடம் இந்தச் சமூகம் அறிய விரும்புவது என்ன? அவர்கள் வரவேற்பறையில் அடுக்கப்பட்டிருக்கும் விருதுகளின் எண்ணிக்கையா? இல்லை! அவர்களின் கையிருப்பில் உள்ள தொகை எவ்வளவு என்கிற கணக்கையா? இல்லை அவர்களை வெற்றியாளர்களாய் வளர்த்தெடுத்த உந்துசக்தியையும், சரிவுகளை சந்தித்தபோது அவர்களை நிமிரவைத்த நெஞ்சுரத்தின் அடித்தளத்தையும் சந்தித்த சவால்களையும்தான் இந்த சமூகம் அறிய விரும்புகிறது. அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் பட்டம் பெற்ற 25 பட்டதாரிகளின் வாழ்க்கைக்குள் நுழைந்து விதம் விதமாய்த் தொழில் புரிந்து வெற்றி பெற்றவரலாற்றை விளக்குகிற புத்தகம்,“STAY HUNGRY STAY ...
19.உங்கள் நிறுவனம் சிறிதா? பெரிதா?
“உங்கள் பள்ளிப்பருவத்தில் நீங்கள் வேகப் பந்து வீச்சாளராக வாகை சூடிய கிரிக்கெட் அணிக்கும், இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் என்ன வித்தியாசம்?” இந்தக் கேள்விக்கு பதில், “எல்லாவற்றிலுமே வித்தியாசம்” என்பதாகத்தான் இருக்கும். பள்ளி அளவிலான கிரிக்கெட் அணி என்று வரும்போது, அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் அசகாய சூரர்கள் என்று சொல்ல முடியாது. எழுத்தாளர் சுஜாதா, பள்ளி மாணவராக இருந்தபோது, ஸ்ரீரங்கம் சிறுவர் கிரிக்கெட் அணியில் ஒரு குழந்தையும் இருந்ததாக எழுதுகிறார் “இவனை சேத்துண்டே ஆகணும்! இவங்க வீட்டிலேதான் ...




