18. யாருக்காக…. பிரார்த்தனை யாருக்காக…–?
உங்கள் தேவைகளுக்காக மட்டும் பிரார்த்தனை செய்வது சுயநலத்தின் வெளிப்பாடு. உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும், மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த மற்றவர்கள் & யார் யார் என்கிறீர்களா? அது உங்கள் கையில்தான் இருக்கிறது. ஆமாம்! நீங்கள் யாருக்கெல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது உங்கள் கைகளில் இருக்கிறது. உங்கள் சமய மரபின் படி நீங்கள் பிரார்த்னை வேளையில் கைகளைக் குவித்திருந்தாலும் சரி, விரித்திருந்தாலும் சரி – விரல்களைக் கவனியுங்கள். அதில்தான் விஷயம் இருக்கிறது. இப்படியரு சுவாரசியமான விஷயத்தை ...
17. நம்பகமானவரா நீங்கள்?
“என்னை நம்புங்கள்! நான் நம்பத்தகுந்த ஆள்தான்!” என யாராவது சொன்னால், அவர்களை நம்மால் நம்ப முடியுமா என்ன? ஒருவரின் நம்பகத்தன்மை அவரது வார்த்தைகளில் மட்டுமில்லை. தந்த வார்த்தைகளைக் காப்பாற்றுவதில் இருக்கிறது. மனித உறவுகளைக் கட்டமைக்கும் பலமான அஸ்திவாரமே பரஸ்பர நம்பிக்கைதான். ஒரு மனிதன் எதை இழந்தாலும் நம்பகத்தன்மை மட்டும் இருந்தால், அதனைக் கொண்டு இழந்தவை அனைத்தையும் மீட்கலாம். ஆனால், நம்பகத் தன்மையை இழந்துவிட்டால் பின்னர் எதுவுமே இருக்காது. நீங்கள் அனைவருடைய உள்ளங்களிலும் நம்பகமானவராய் நிலைபெறவென்று சில வழிமுறைகள் ...
16. நேர்காணலில் நீங்கள்!
பணியில் சேர விண்ணப்பிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இரண்டுவிதமான தகுதிகளை நிர்வாகம் எதிர்பார்க்கும். ஒன்று, அந்தப் பணியை செய்வதற்கான தொழில் நூல் ரீதியான தகுதிகள். இன்னொன்று, மனித வள அடிப்படையில் ஒரு பணியாளராக – நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் தோள் கொடுப்பவராக – உங்கள் தகுதிகள். இந்த இரண்டில், முதலாவது அம்சம் நீங்கள் முயன்று பெற்ற தகுதிகள். இரண்டாவது அம்சம். நீங்கள் கூர்மைப்படுத்திக்கொண்டு இருக்கக்கூடிய தகுதிகள். உங்களைச் சந்தித்த நாள் முதல் நிமிடத்திலிருந்து, உங்களைப் பற்றிய முதல் ...
மாற்றங்களுக்கு ஈடு கொடுங்கள்!
சந்தைச் சூழலில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதற்குரிய வாசல்களைத் திறந்து கொள்ளும் வித்தையைக் கற்றுக்கொள்ளுங்கள். பெரிய பெரிய நிறுவனங்களுக்குக் கூடப் போக வேண்டாம். முதல் பூக்கடை எப்படி உருவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். முதலில் உதிரியாக பூக்களை விற்கத் தொடங்கியிருப்பார்கள். பிறகு, அவற்றைத் தலையில் சூடிக்கொள்ளவோ, கடவுளுக்குச் சூட்டவோ வசதியாக சரமாகத் தொடுத்திருப்பார்கள். அதையே பெரிய அளவில் கற்பனை செய்து மாலைகளாகக் கட்டியிருப்பார்கள். பூ என்றால் மங்கலச் சின்னம் மலர் மாலைகள் மட்டுமே தயார் செய்வோம் ...
15. புதுமை உங்கள் பிறப்புரிமை!
நீங்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும், எதற்கு முதலிடம் தருகிறீர்கள் என்பதை, கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள். 1. செய்யும் தொழிலிலோ, வேலையிலோ தக்க வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல வளரலாம் என்று பார்க்கிறீர்களா? 2. உங்களிடம் பணிபுரிபவர்கள், புதிய திறமைகளை வெளிப்படுத்தி, புதிய நுட்பங்களைக் கற்றறியாவிட்டாலும் பரவாயில்லை – சொல்கிற வேலையை சரியாகச் செய்தாலே போதும் என்று நினைக்கிறீர்களா? 3. மாறிவரும் சூழலுக்கேற்ப, முன்னேற்றம் நோக்கிய மாற்றங்களை முதலில் உங்களிடமும் – பிறகு உங்கள் பணியாளர்களிடமும் – உங்கள் ஒட்டுமொத்த ...
வெற்றியை அளந்தால் விபரம் புரியும்! – 2
வெற்றியின் இன்னோர் அளவுகோல் வெற்றிகளைத் தொடர்கதையாக்குதல். ஒரு வெற்றி வந்த மாத்திரத்திலேயே, தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிற வேகம் வரவேண்டும். முதல் வெற்றி வந்தபிறகு, அடுத்த கட்டமாக முயற்சிகள் செய்து, தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் ஏற்பட்டுவிடுமென்றால், சிலர் முயற்சிகளைத் தொடர மாட்டார்கள். வெற்றியை நிகழ்த்திக் காட்டிய யாருக்கும், அந்த வெற்றியை உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. தொடர்ந்து வெற்றிகளை நிகழ்த்திக் காட்டிக்கொண்டே இருக்கிறபோதுதான் ஒருவர் வெற்றியாளர் என்கிற அங்கீகாரத்தைப் பெறுகிறார். வெற்றிக்கு ...