Blog

/Blog

13-வெற்றி வேண்டுமா? வழிகள் இதோ!!

எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயுத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம் செலுத்துகிற போது வெற்றிக்கான விதை விழுகிறது. நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது. அணுகுமுறை எதிலிருந்து ஆரம்பிக்கிறது? எண்ணங்களிலிருந்து ஆரம்பிக்கிறது? எந்தப் பின்புலமும் இல்லாமல் தொடங்கி சிலர் ...

12-நினைத்தது போலவே வெற்றி

எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு. மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி. இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும். விருப்பங்களை நீங்கள் பின் தொடர்கிறீர்களா என்பதை சின்னச் சின்ன விஷயங்களில் கூட சோதித்துப் பார்க்க முடியும். மாணவப் பருவத்தில், கல்லூரிக்குப் போகிற வழியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற கட்டிடத்தைப் பார்த்து, “இங்கே வேலைக்குப் போக வேண்டும்” என்கிற எண்ணம் முதலில் ஏற்படலாம். அது விருப்பமாக மட்டுமே ...

11. வட்டங்கள் எழுப்புகிறீர்களா?அலைகள் எழுப்புகிறீர்களா?

குளத்தைப் பார்க்கும்போதெல்லாம், குளிக்க முடியாவிட்டாலும்கூட, ஒரு கல்லையாவது வீசியெறிய வேண்டுமென்று கைகள் பரபரக்கும். இந்த உந்துதல் ஏற்படுவதற்கு, உளவியல் அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. எங்காவது ஏதாவதொரு சலனத்தை நாம் ஏற்படுத்த வேண்டும் என்கிற உணர்வில் பிறக்கும் செயல் இது. ஒரு விஷயத்தை யோசித்துப்பாருங்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பள்ளி மாணவராக இருந்தபோது, பாட்டுப்போட்டியில் அவருடன் எத்தனையோ மாணவர்கள் போட்டி போட்டிருப்பார்கள். ஒரு சில போட்டிகளில் ஒரு சிலர் ஜெயித்திருப்பார்கள். அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்? தங்களுக்குப் பிரியமான இசைத்துறைக்குள் முழுநேரமாக ...

10. சலிப்பாய் இருக்கிறதா?

செயல்திறனை சீர்குலைய வைப்பது சலிப்பு. செய்வதற்கு என்று வேலை நேரம் – செய்ய வேண்டிய தேவை எல்லாம் இருந்தும்கூட தள்ளிப்போடச் சொல்லும் உணர்வுக்கு சலிப்பு என்று பெயர். இந்தச் சலிப்பை வளரவிடுவதில் இரண்டுவிதமான சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று செய்ய வேண்டிய வேலை தள்ளிப்போகும். சலிப்பின் பெயரால் சோம்பலும் அதன் தொடர்ச்சியாய் மன அழுத்தமும் எதிர்விளைவுகளாய் ஏற்படும். ஆரம்பநிலையிலேயே சலிப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டு அவற்றை அடியோடு நீக்க வேண்டியது அவசியம். இதைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால் ஓரிரு ...

9. முழுதாய் மலரும் மொட்டுக்கள்!

“ஒரு மொட்டுக்கு மலர்கிற துணிச்சலில் ஏற்படும் வலியைவிட இறுக்கமாக மூடிக்கிடப்பது மிகவும் வலியைத் தருவது” – இது ஓர் அறிஞரின் வாசகம். “AS A MAN THANKETH”” என்ற நூலில் இடம் பெற்ற சிந்தனை இது. மூடிக்கிடக்கிற மொட்டின் இதழ்கள் உதிராது. காற்றிலோ மழையிலோ சேதமுறாது. ஆனால் ஒரு மொட்டின் முழுமையை மலர்ச்சில்தான் அடைகிறது. மலர்ந்தபிறகு ரோஜாவின் இதழ்கள் மீண்டும் மூடிக்கொள்ள முடியாதுதான். மனிதனின் இளமைப் பருவத்தை இது குறிக்கிறது. இளமைப் பருவம் எவ்வளவு இனியதாய் இருந்தாலும், ...

எப்போது முயற்சிக்கலாம்?

“கொஞ்சம் முயற்சி செய்தால் முன்னேறி விடலாம் என்பது உண்மைதான். அடுத்த வாரம் புதன்கிழமை அந்த முயற்சியைத் தொடங்குவது பற்றி முயற்சிக்கப்போகிறேன்” இப்படி ஒருவர் சொல்வாரேயானால், அந்த புதன்கிழமை வருமே தவிர அவரிடம் முயற்சி வராது. ஏனென்றால், முயற்சி என்பது விழிப்புணர்வு ஏற்பட்ட விநாடியிலிருந்தே தொடங்குவது. இது முதல் விஷயம். ஆனால் ஒன்றில் வெற்றிபெற முயற்சியைத் தொடங்குவது மட்டும் முக்கியமல்ல. தொடருவதும் முக்கியம். சமீபத்தில், ஈஷா யோகாவின் ஷாம்பவி மகாமுத்ரா பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சி சொல்லிக் கொடுத்த பிறகு, ...
More...More...More...More...