33. நேர்காணலுக்குப் போகிறீர்களா?
வேலை கேட்டுவரும் விண்ணப்பங்களுடன் தன்விவரக் குறிப்புகள் இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு வருபவரின் பழக்க வழக்கங்களுக்கும் பேச்சு முறைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பிம்பம் அதில் இருக்கும். எவ்வளவு படித்திருந்தாலும், என்னென்ன தகுதிகள் பெற்றிருந்தாலும், நேர்முகத் தேர்வில் தன்னை சரியாக வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள் வெற்றிபெறுவது கடினம்தான். நேர்முகத் தேர்வு நடைபெறும்போது உரையாடலின் தொனி இப்படித்தான் இருக்கும் என்று நீங்களாக முடிவுசெய்வது நல்லதல்ல. கேள்வி கேட்பவர் சம்பிரதாய ரீதியில் ஒரு நேர்காணலை நடத்தும் மனநிலையில் இருப்பாரேயானால் அதனை கலகலப்பான ஒன்றாக ...
கோபியில் கோவில் கொண்ட லிங்கபைரவி
குளிர் கொஞ்சும் கோபியிலே கொடிவேரி அணையருகே குடிகொள்ள அன்னை வந்தாள்; ஒளிர்கின்ற கருமை நிறம் உலகாளும் கருணை குணம் ஓங்கிடவே அன்னை வந்தாள்; களி கொஞ்சும் சிறுமூர்த்தி கடலளவு பெருங்கீர்த்தி கண்நிறையும் தேவி வந்தாள்; பளிங்கனைய விழிமூன்றும் பரிவெல்லாம் சிந்திடவே பைரவியாள் கோவில் கொண்டாள்; வாட்டமெல்லாம் தீர்ப்பதற்கே வழிபார்த்து நிற்பதுபோல் விளங்குகின்ற கோவில் நாடு; கேட்டதற்கும் மேலாக கோடிவரம் தருகிற காலடிகள் தலையில் சூடு; பாட்டினிலே இசையாகும் பைரவியாள் சந்நிதியில் போயமர்ந்து கண்கள் மூடு; ஆட்டுவிக்கும் ஓங்காரி ...
32. மன நிறைவே முதல் சம்பளம்!
பல நிறுவனங்களில் ஊழியர்களுக்குக் கை நிறைய சம்பளம் கொடுப்பார்கள். சம்பளத்திற்கேற்ப வேலையும் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் வேலையில் நிலைப்பதில்லை. அதே நேரம், சில நிறுவனங்களில் குறைவான சம்பளம்தான் கொடுப்பார்கள். ஆனால், அங்கே வேலையில் இருப்பவர்கள் பல்லாண்டு காலமாய் அங்கே நீடிப்பார்கள். அதற்கென்ன காரணம்? பல சர்வதேச நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்து வருபவரான பாப்பிராக்டர் ஒரு சுவாரசியமான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். சர்க்கிள் கே கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்தில், சிந்தியா என்றொரு பெண், இடைநிலை ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். இந்த ...
31. சிறகு முளைக்கும் ஒருநாள்…
தன் பதிமூன்று வயது மகளுக்க மிதிவண்டி ஓட்டப் பழக்கிவிட்டுக் கொண்டிருந்தார் அவர். வயதுக்கு மிஞ்சிய உயரம். கால்களுக்குப் பெடல் எஞ்சியும் எட்டாமலும் இருந்ததில் அவ்வவ்போது தடுமாற்றம். சைக்கள் சற்றே சாய்கிற போதெல்லாம், “அப்பா, விட்டுடாதீங்கப்பா” என்று அலறுவாள் மகள். “விட மாட்டேன்! தைரியமா ஓட்டு” சைக்கிளைப் பிடித்துக்கொண்டே, கூட ஓடுவார் அவர். தினமும் காலையில் இந்தப் பயிற்சி நடக்கும். நாட்கள் நகர்ந்தன. “அப்பா! விட்டுடாதீங்கப்பா!” என்று அலறுவது குறைந்தது. அவ்வவ்போது மெல்லிய குரலில் சொல்வதோடு சரி. தன் ...
30. சிறுதொழில் செய்பவரா நீங்கள்?
“ஆமாம். என்ன சொல்லப் போறீங்க? என் தொழிலில் நான்தான் ராஜா” என்கிற எண்ணம், இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே தலை தூக்குகிறதா? சந்தேகமேயில்லை. நீங்கள் சிறுதொழில் செய்பவர்தான். யாரெல்லாம் சிறுதொழில் செய்கிறார்கள்? ஏன் சிறுதொழிலுக்கு வருகிறார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும், நிர்வாகவியல் நிபுணர் ஒருவர் தந்த பதில்கள் முக்கியமானவை. “தன் மீதுள்ள நம்பிக்கை, முழுமையான சுதந்திரம், இந்த இரண்டும்தான் ஒருவர் சுய தொழில் தொடங்கக் காரணம். இந்த இரண்டின் அளவும் அதிகமாவதுதான் அவர் தனது தொழிலைக் கைவிடவும் ...
29. வெற்றி இரண்டு விதம்
வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம். பாறைகள் குவிந்த கிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்ப கலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிடம், சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குரிய இடமாகத் தெரிகிறது. மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில் என்னவாக இருக்கிறது ...