27. டி.வி. பார்க்காத கடவுள்
அமெரிக்கப் பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம், அவர்கள் புரிந்து கொண்ட கடவுளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எட்டு வயதான டேனி டட்டன் என்ற குழந்தை என்ன எழுதியது தெரியுமா? “கடவுளின் முக்கியமான வேலைகளில் ஒன்று, மனிதர்களைப் படைப்பது. கடவுள் பெரியவர்களைப் படைப்பதில்லை. குழந்தைகளைத்தான் படைக்கிறார். சின்னச் சின்ன அங்கங்களை உருவாக்குவது அவருக்கு எளிதாக இருக்குமில்லையா? அதற்காக! ஆனால் குழந்தைகளுக்கு நடக்கவும் பேசவும் கற்றுத்தர கடவுளுக்கு நேரமில்லை. அதனால் அம்மா அப்பாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டார். ஏசு, கடவுளின் ...
ஊரிசையில் நேரிசையும் கவிஞர் புவியரசு குறித்த சர்ச்சையும்
கவிஞர்கள் கவியன்பன் பாபு, மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இணைந்து வடித்த “ஊரிசையில் நேரிசை” நூலுக்கு கவிஞர் புவியரசு அவர்கள் வழங்கிய வாழ்த்து மடல் சார்ந்த விவாதங்கள் இன்று இரு முனைகளில் மையம் கொண்டுள்ளன. ஒன்று, புவியரசு அவர்களின் பாடல்கள் வெண்பா வடிவில் இருந்தாலும் தளை தட்டுகின்றன என்பதை மேற்குறித்த இரு கவிஞர்களும் தங்கள் எதிர்வினையில் சுட்டினர். அத்துடன் “தளைதட்டினாலென்? தலைதட்டினால் என்?” என்னும் வரி தங்கள் வெண்பாக்களில் தளைதட்டுவதாக சொல்கிறதோ என்றும் தாம் ஐயுறுவதாய் குறிப்பிட்டனர். இந்த விவாதத்தில் ...
26. மோதல்களை முடித்து வையுங்கள்!
தொழில் வாழ்க்கை என்று வந்தாலே அன்றாட வேலைகளில் கருத்துமோதல்கள் பிறப்பது இயற்கைதான். அந்த மோதல்களை ‘சட்’டென்று சமரசம் நோக்கி நகர்த்துவதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. பலரும், கருத்துமோதல்களைத் தனிப்பட்ட பகையாக வளர்த்துக்கொண்டு வாழ்க்கை முழுக்க சிரமப்படுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. நிறுவனத்துக்கு உள்ளேயோ வெளியிலோ ஏற்படும் மோதல்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து வைப்பதுதான் புத்திசாலித்தனமான நிர்வாக உத்தி. மற்றொரு கோணத்தில் பாருங்கள்: பொதுவாகவே ஒரு சிக்கலுக்கு இரண்டு கோணங்கள்தான் இருக்கமுடியும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ...
25. கொக்கு பற பற!
வெற்றியாளர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். “நாம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறோம். சராசரி நடைமுறைகள் சார்ந்தே வாழ்க்கையை அணுக வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால், வேளை வரும்போது, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தீருவோம்” என்பதுதான் அது. இந்த உலகம் போட்டிகள் நிறைந்ததுதான். ஆனால், நம்மை நாம் நிரூபிப்பதில் நிதானம் காட்ட வேண்டுமா, அவசரப்பட வேண்டுமா என்பது, நம்மோடு யார் மோதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. ஒரு ரயில் நிலையம் முன்பதிவு செய்யப்பட்ட சீட்டு உங்களிடம் இருக்கிறது. ரயில் ...
24. ரிஸ்க் எடுப்பவரா நீங்கள்?
“வயசுப் பெண்கள் இருக்கும் வீட்டில் திண்ணை வீடு ரிஸ்க் வீரப்பன் காட்டுப் பக்கம் பண்ணை வீடு ரிஸ்க்” என்று கவிஞர் வைரமுத்து, சில வருடங்களுக்கு முன் ஒரு படத்திற்கு பாடல் எழுதியிருந்தார். மனிதர்கள் இரண்டு விதம், “ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமே” எனறு இறங்குபவர்கள், “எதுக்குங்க ரிஸ்க்” என்று பதுங்குபவர்கள். இந்த இரண்டு வகையான மனப்பான்மையும் எல்லோரிடமுமே எடுக்க வேண்டிய “ரிஸ்க்”கிற்கேற்ப மாறிமாறி வரும். ஆனால், இந்த ரிஸ்க் எடுக்கக்கூடியது, எது எடுக்க வேண்டாதது என்று இரண்டு வகையாகப் ...
23. நாலு வித்தியாசங்கள்
தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்துக்குப் பிறகு சுதாரித்துக்கொண்டு வெற்றிபெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினர்க்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டுக்கிறார். அவை என்ன தெரியுமா? தோல்வியாளர்கள் இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள் உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது. சராசரி வாழ்க்கையையும் பயந்துகொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல்லை. அப்படி முயன்றாலும் எதிர்மறைக் காட்சிகளை ஏற்படுத்திக்கொண்டு மனச்சோர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் ...