17. உனக்கும் கீழே உள்ளவர் கோடி!
“சோர்வு” என்பது பெரிய விஷயம் என்றுதான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால்போதும். “தீர்வு” பிறந்துவிடும். “மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில் உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மலைப்பாம்பு மாதிரி சுற்றிக்கொள்கிறதாம் மனச்சோர்வு! ஒரே அறைக்குள் அடைந்துகிடக்கும்போது இருதயத் துடிப்பு குறைகிறது. மூளைக்கும் பிராண வாயுவின் ஓட்டம் குறைகிறது. நுரையீரலுக்கு நல்ல காற்று வந்து சேர்வதும் தடைப்படுகிறது. கொஞ்சம் சோர்வு ...
16. மனசே, மனசே மயக்கமென்ன!
இலாப, நஷ்டக் கணக்குப் பார்க்கும்போது நிறுவனத்தின் நிஜமான நிலை என்னவென்று தெளிவாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால், மனதை அப்படியெல்லாம் துல்லியமாகக் கணிக்க முடிகிறதா என்ன? மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள். உற்சாகக் கணத்தில் சில நேரம் உச்சகட்ட லாபத்தைக் காட்டுகிறது. இன்னொரு சமயம் நஷ்டக் கணக்கில் போகிறது. நம்முடைய மனம் பேசும் பாஷைகள் பல நேரங்களில் நமக்கே புரிவதில்லை. மனதின் தேவை இன்னதென்று தெரிவதில்லை. ஏனெனில் உள்மனதில் எதிர்பார்ப்புகள் பல நேரம் நமக்கே புரியாத ரகசியமாய்த்தான் இருக்கிறது. ...
15. உங்கள் விசுவரூபம் எப்போது?
உங்கள் குழந்தை, பேப்பரில் எதையோ ஆர்வமாக வரைந்து கொண்டிருக்கிறது. சில விநாடிகள் உங்களையும் மறந்து ரசிக்கிறீர்கள். உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, “சரி, சரி! வரைஞ்சது போதும்! பரிட்சை வருது! படிக்கற வழியைப் பாரு” என்று சிடுசிடுக்கிறீர்கள். ஏனெனில், உங்கள் மனதில் பதிவாயிருக்கிற முதல் விஷயம், உங்கள் குழந்தை மாணவ நிலையில் இருப்பது மட்டும்தான். அதைக் கடந்து அந்தக் குழந்தைக்குள் ஒளிந்திருக்கிற திறமைகள், அதன் தேர்வுத் தாள்களைத் தின்றுவிடுமோ என்று கருதுகிறீர்கள். நண்பருடன் ஓர் இசை நிகழ்ச்சிக்குப் ...
14. அணுகுமுறை சரியாயிருந்தால் வெற்றி நிச்சயம்
“அரைக் கிணறு தாண்டியவர்கள்” மீதியுள்ள தூரத்தைத் தாண்டும் முன் எதனால் விழுகிறார்கள்? முழுக்கிணற்றையும் தாண்ட முடியாது என்று தாங்களாகவே முடிவுசெய்து கொள்வதால்தான் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். மனித மூளைக்குள் பல விஷயங்கள் காட்சி வடிவில் பதிவாகியிருப்பதாக, டாக்டர் காரி பிரிப்ரம் என்கிற புகழ்பெற்ற நரம்பியல் சார்ந்த உளவியல் நிபுணர் சொல்கிறார். அதாவது, ஒரு விஷயத்தை உங்கள் கற்பனையில் காட்சிபூர்வமாக அமைத்து, மூளையில் பதிவு செய்துகொண்டால், சாதிக்க முடியும் என்கிற நேர்மறையான அணுகுமுறை மூளையில் ஆழப் பதிந்துவிடுகிறது. அந்த ...
13. அம்பைத் தொடுக்க அரை நிமிஷம்!
சில சாதனைகளைப் பார்க்கிறபோது எல்லாம் வெகுசீக்கிரமாக நடப்பதுபோல் தெரிகிறது. குறி பார்த்து அம்பை விடுகிற மனிதன், அனாயசமாகச் செய்துமுடிப்பதுபோல் படுகிறது. ஆனால், அந்த அரை நிமிட அரங்கேற்றத்தின் பின்னணியில் ஆறு வருட அவஸ்தையும் அயராத பயிற்சியும் இருந்திருக்கும். சொல்லப்போனால், நம் திறமை மீது நமக்கு முழு ஆளுமையும் நம்பிக்கையும் இருப்பதன் அடையாளமே, அந்தச் செயலை அனாயசமாகச் செய்துமுடிப்பதுதான். நம்மால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கும்போதுதான் செய்கிற தொழிலை ரசிக்க முடியும். சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் அது ...
12. இடைவேளை இல்லாத வாழ்க்கை!
நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பானவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நேரத்தில், எதையும் செய்யாமல் “சிறிது நேரம் சும்மா இருக்கலாம்” என்று தோன்றும். அதுபோன்ற நேரங்களில் என்ன செய்யலாம் என்பது பற்றி உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து, வித்தியாசமான வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள். அந்த இடைவேளை அவசியமானதா-? அனாவசியமானதா? கண்டுபிடிக்கலாம், வாருங்கள்! உங்களை ஒருமுறை கேளுங்கள்! இந்த இடைவேளை இப்போது தேவையா என்று உங்களை நீங்களே கேளுங்கள். சில நேரங்களில், கடுமையாக வேலை செய்து களைத்திருந்தால், ஓர் இடைவேளை ...




