Blog

/Blog

10. உங்களுக்கு சாதகமான ஜாதகமா?

நம்பிக்கையூட்டும் விஷயங்களை விடுத்து, ‘ஜாதகம்’ என்ற மூடநம்பிக்கைக்குள் பாதை செல்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஜாதகத்தை வைத்து ஒருவரது வாழ்க்கையின் மகிழ்ச்சி, வெற்றி தோல்விகளை கணித்துவிடமுடியும் என்று சோதிடம் கூறுகிறது. 9 கிரகங்களின் நிலையை வைத்தே பலன்கள் கூறப்படும். அதேபோன்று, 9 முக்கிய அம்சங்களை மனோதிடத்துடன் வாழ்க்கையில் பின்பற்றினால் வெற்றி நிச்சயம். 1.நேரம்: வியாபாரத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்கள் என்பதைவிட எவ்வளவு நேரத்தை அதற்கென முதலீடு செய்கிறீர்கள் என்று கவனிக்க வேண்டும். வியாபாரம் தொடர்பாக செயல்பட சிந்திக்க ...

9. பெரிய பெரிய ஆசை

கமர்கட்டுக்கும், லாலி பாப்பிற்கும் ஆசைப்படும் குழந்தைகளே இப்பொழுது கம்ப்யூட்டருக்கும், ஒலிம்பிக்ஸிற்கும் ஆசைப்படுகிறார்கள். தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே அவர்களுக்கு இவ்வளவு பெரிய ஆசை இருக்கிறது. தகுதிகளை, படிப்பு, அனுபவம், பொது அறிவு எனப் பல பிரிவுகளில் வளர்த்துக் கொண்டுள்ள நாம் இன்னும் எவ்வளவு பெரிய இலக்குகளுக்கு ஆசைப்பட வேண்டும். வாழ்வது ஒருமுறை. அதில் மன திருப்தியுடன் சாதித்தோம், சம்பாதித்தோம்.. ஏழை எளியவர் நான்கு பேருக்கு உதவினோம் என்ற சந்தோஷத்தை எல்லாம் ருசி பார்க்க வேண்டாமா? எப்படிப்பட்ட லட்சியம்: இளங்கலை, ...

8. எது உங்கள் பலவீனம்?

ஒருவருடைய பலம்தான் அவருடைய சாதனைகளுக்கு முழுமையான காரணமாக இருந்தது என்று கூறமுடியாது. பலவீனமும் பல சாதனைகளுக்குக் காரணமாக அமையும். எப்படி என்றால், அவர்கள் தங்களின் பலவீனங்களிலிருந்து கற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்களிலிருந்து பல உண்மைகளைப் புரிந்துகொள்கிறார்கள். பிறகு பலவீனத்தை களைந்துவிட்டு, அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை அஸ்திவாரமாக மாற்றும்போது வெற்றிபெறுவது சாத்தியமாகிறது. பலவீனத்தைக் கண்டுபிடியுங்கள்: “நான் சொன்னால் சரியாக இருக்கும். நான் செய்வதில் தவறே இருக்காது. நான் 100% சரியாக நடந்துகொள்கிறேன்” என்றுதான் அநேகம் பேர் நினைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் ...

7. உள நடுக்கம் உயர்வைத் தடுக்கும்!

நில நடுக்கம் நேரும்போதெல்லாம் வெட்டவெளிக்கு வந்துவிடுமாறு நிலவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். பூமி பிளந்து இறந்தவர்களைவிடவும் வீடு இடிந்து முடிந்தவர்களே அதிகம். அடைந்து கிடக்கும் வீட்டைத் துறந்து, விரிந்து பரந்த வெட்டவெளிக்கு வரும்போது வாழ்க்கை பாதுகாப்பாகிறது. இது நிலநடுக்கத்திற்கு மட்டுமல்ல. உள நடுக்கத்திற்கும் உள்ளபடி பொருந்தும். தானே எழுப்பிக் கொண்ட சந்தேகச் சுவர்கள், தலைக்கு மேல் எழுப்பிக் கொண்ட தன்னலக்கூரை, ஆகாயத்தின் அறிமுகம் தடுத்து அடைத்து வைத்திருக்கும் சிந்தனை ஜன்னல்… இவையெல்லாம் உள நடுக்கம் வரும்போது உயிர்குடிக்கும் அபாயங்கள். ...

6. உலகம் திறந்தது; உள்ளம் திறந்ததா?

        பணிவாய்ப்புக்கான பரிந்துரைகள் என்பதை இந்தத் தலைமுறை அறிந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை. தகுதி, முன்னுரை எழுத, ஆற்றல், அணிந்துரை எழுத, நேர்முகத்தேர்வு நிறைவுரை எழுதி, திறமையாளர்களின் காத்திருப்பை நிறைவு செய்கிறது. தங்கள் நிறுவனத்திற்குத் திறமையாளர்களே தேவை என்பதை முழுமையாக நம்பும் நிறுவனங்கள், சர்வதேச எடைக்கற்களை சந்திக்க வைக்கிறார்கள். அதன்பிறகே தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே தகுதியின் உச்சத்தில் தலையெடுக்கும் இளைஞர்கள்தான் உயரிய இடங்களில் உட்கார முடிகிறது-. கல்வி, ஆற்றல், களப்பணி அனுபவம், முடிவெடுக்கும் திறமை, ...

5. உள்ளே ஒரு குழந்தை!

ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் உறங்கிக்கிடக்கிறது ஒரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கிய பிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை. தனக்குள் இருக்கும் குழந்தையை விழிப்பு நிலையிலும் வைத்திருப்பவர்கள் ஞானிகளும் கவிஞர்களும். அதனால்தான் ஞானிகளை “சேய்போல் இருப்பர் கண்டீர்” என்று பழம்பாடல் ஒன்று பேசுகிறது. கவிஞர்களின் குழந்தை மனதுக்கு நடைமுறை உதாரணங்கள் நிறைய உண்டு. குழந்தைத்தனம் என்பது வாழ்வின் பெரிய வரம் என்பதை ...
More...More...More...More...