Blog

/Blog

நவராத்திரி – 2

வித்தில் முளையாகும் வித்தகி இல்லையேல் பத்தில் பதினொன்றாய் போயிருப்பேன் – தத்துவம் ஏதும் அறியாமல் ஏங்குகையில் வாழ்வளிக்க மாதரசி கொண்டாள் மனம். கற்கும் மொழியானாள்; கட்டும் கவியானாள் நிற்கும் சொல் சொல்கின்ற நாவானாள் – கற்பகத்தாள்; எல்லாம் அவளாகி யார்க்குந் தெரியாத பொல்லாத பெண்ணானாள் போ. நட்ட நடுநிசியில் நீலவான் கம்பளத்தில் பட்டுமலர்ப் பாதம் பதிப்பாளே – சிட்டுகளின் கூடுகளில் கண்மலரும் குஞ்சுகளைத் தாலாட்டி பாடுவாள் வைகறைப் பாட்டு. ஒன்பான் இரவுகளில் ஓங்காரி ஆளவந்து தன்பால் உயிர்களைத் ...

நவராத்திரி -1

மழைமுகில் வண்ணம் அவள்வண்ணம் மழைதரும் கருணை அவள்வண்ணம் பிழைகள் பொறுப்பாள் பரிந்திடுவாள் பற்பல அற்புதம் புரிந்திடுவாள் குழையணி காதர் காதலிலே குதூகலம் காணும் மஹேஸ்வரியாள் விழைவுகள் யாவும் அருளிடுவாள் வித்தகி திருப்பதம் பரவிடுவோம்! மின்னலை மென்னகை ஆக்கியவள் மீட்டிடும் இசையினில் மிளிர்கிறவள் என்னிலை நன்னிலை ஆக்குபவள் எங்கும் எதிர்ப்படும் கீர்த்தியினாள் கன்னல் கவியாய் சித்திரமாய் கலைகள் பெருக்கும் காளியவள் தென்றலில் புயலில் திரிகின்ற திரிபுரை திருப்பதம் பணிந்திடுவோம்! காலம் அவளது பந்தாகும் கால்களில் உருட்டும் கைகாரி ஓலம் ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-28

விருந்தினர்களை முகமலர்ந்து வரவேற்பதற்கு குழந்தைகளை நாம் பழக்குவோமேயானால் அவர்கள் சமூக உணர்வு மிக்கவர்களாக வாழ்வார்கள் என்பதை நம் சமூகம் காலம் காலமாகக் கண்டிருக்கிறது. வீட்டிற்குள் வருபவர்களைப் பார்த்துக் கூச்சமின்றி உரையாட குழந்தைகள் பழகிவிட்டால் வெளியிடங்களுக்குச் செல்லும்போது, வேலைவாய்ப்பு தேடி நேர்காணலுக்குச் செல்கிறபோது மனத்தடையில்லாமல் மகிழ்ச்சியுடன் அவர்களால் கலந்துரையாட முடியும். இன்று சின்னத்திரைக்கும் கைபேசியில் இருக்கிற விளையாட்டுகளுக்கும் குழந்தைகள் அடிமைகளாகிக் கொண்டிருக்கும்போது மனித உறவுகளுடைய மகத்துவம் அவர்களுக்குப் புரிவதில்லை. அப்பூதியடிகள் இல்லத்திற்கு திருநாவுக்கரசர் எழுந்தருளிய பொழுது இலையறுக்கப் போன ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-27

இன்றைய நவீன குடும்பங்கள் எதிர் நோக்குகின்ற மிகப்பெரிய சவால்களில் ஒன்று இணக்கமில்லாத குடும்பங்கள். ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பேசுவதோ கூடி உண்பதோ அருகிப் போய்விட்ட காலச்சூழலில் நாம் வாழ்கிறோம். உணவு நேரத்தில் ஒன்று கூடாத குடும்பங்களுக்கிடையே இடைவெளி பெருகுவது இயல்பு, ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக வசிக்கக்கூடிய சூழலை உருவாக்கும். இந்நிலையை, பிற தேவைகளும் நிறைந்த வாழ்க்கை முறை காரணமாக பலரும் கண்டு வருகின்றார்கள். ஒரு குடும்பம் அதன் உறுப்பினர்கள் மத்தியில் இருக்கிற இடைவெளியை ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-26

இறைவனே விரும்பி எழுந்தருளுகின்ற ஒரு திருக்கோயிலை அமைத்த அடியாரை கண்டு வணங்க வேண்டும் என்ற பேரன்போடு படைசூழ அரசன் புறப்பட்டு நின்றவூருக்கு வந்து சேர்கிறார். அறிவிப்பே இன்றி அரசன் வந்ததைக் கண்டு அந்த ஊர் மக்களெல்லாம் அவனை வணங்கி வரவேற்கின்றனர். இன்று குடமுழுக்கு காணுகிற கோயில் எந்த இடத்திலே இருக்கிறது என்று அரசன் கேட்க அவர்கள் மருள்கிறார்கள். அப்படி ஓர் ஆலயமே இங்கு எழவில்லையே என்கிறார்கள். அப்படியானால் பூசலார் என்று ஒருவர் கோயில் கட்டினாராமே அவர் எங்கே ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-25

எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன என்றும் எண்ணங்களே சக்தி மிகுந்தவை என்றும் மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் இன்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் தரமான மருந்து என்று தண்ணீரைக் கொடுத்தாலும் தீராத நோய் தீர்கிறது. ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு அவன் நோயாளி என்ற எண்ணத்தைக் கொடுத்து விட்டால் அந்த நோய்க் கூறுகள் அவன் உடம்பில் தென்படுகின்றன என்றெல்லாம் எத்தனையோ பரிசோதனைகள் எடுத்துரைக்கின்றன. மனிதனின் மனம் எழுப்புகிற எண்ணங்கள் இரும்புக் கோட்டையைவிட வலிமையானவை. இதனை ...
More...More...More...More...