இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-25
எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன என்றும் எண்ணங்களே சக்தி மிகுந்தவை என்றும் மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் இன்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் தரமான மருந்து என்று தண்ணீரைக் கொடுத்தாலும் தீராத நோய் தீர்கிறது. ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு அவன் நோயாளி என்ற எண்ணத்தைக் கொடுத்து விட்டால் அந்த நோய்க் கூறுகள் அவன் உடம்பில் தென்படுகின்றன என்றெல்லாம் எத்தனையோ பரிசோதனைகள் எடுத்துரைக்கின்றன. மனிதனின் மனம் எழுப்புகிற எண்ணங்கள் இரும்புக் கோட்டையைவிட வலிமையானவை. இதனை ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-24
தொண்டு என்கிற போர்வையில் சுயநலமான போக்குகள் அரங்கேறிக் கொண்டு இருக்கிற சூழல் எந்தக் காலத்திற்கும் தேவையான அர்ப்பணிப்பு உணர்வை அழகாக பேசுகிற திருத்தொண்டர் புராணம் தன்னலம் இல்லாத தொண்டர்களை வளர்த்தெடுப்பதற்கான வழிகாட்டி நூல். அடிப்படையில் திருத்தொண்டர் புராணம் ஆன்மீக நூலாக இருந்தாலும் அது பேசப்படுகிற நாயன்மார்கள் இறைவனின் பெயரால் சமூகத் தொண்டை மேற்கொண்டவர்கள். ஆடைகள் வழங்குதல், திருவோடு வழங்குதல், அன்னமிடுதல் போன்றவற்றை தங்கள் லட்சியங்களாக வகுத்துக் கொண்டு அன்றாடம் செய்து வந்தனர். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்பஞ்சம் ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-23
திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞானசம்பந்தருடைய திருப்பதிகங்களை யாழில் இட்டு இசைப்பதை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார். அவர் தம் துணைவியார் மதங்கசூளாமணியார் அந்தப் பதிகங்களை இசைப்பதில் கணவருக்குத் துணை நிற்கிறார். சோழ மன்னரிடத்தில் பணிபுரிந்து வந்த பரஞ்சோதியார், சிறுத்தொண்டர் என்ற பெயர் கொண்ட நாயனாராகிறார். தினமும் ஓர் அடியாரை அமுது சேவித்து அதன் பின்னரே தான் உண்பது என்னும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார். இறைவன் ஒருமுறை பைரவத் திருக்கோலம் கொண்டு சிறுத்தொண்டர் வீடு வந்தார். அன்று சிவனடியார் யாரும் கிட்டாததால் ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-22
இவற்றை தாண்டி தொண்டர்களுடைய அரிய இலக்கணம் ஒன்றையும் சேக்கிழார் சொல்கிறார். ஒருவன் இறைவன் இடத்திலே பக்தி செலுத்துவதுகூட பயன் கருதி அமையக் கூடும். எல்லா பற்றுகளையும் துறந்து நான் இறைவனை வேண்டினால் எனக்கு வீடுபேறு தருவான் என்கிற அடிப்படை எதிர்பார்ப்பாவது ஒரு பக்தனிடத்தில் இருப்பது இயற்கை. ஆனால் இந்த திருத்தொண்டர்கள் எத்தகையவர்கள் என்றால் இறைவனிடத்து கொண்ட அளப்பரிய அன்பு காரணமாய் இறைவனை வணங்குவதே முக்கியம் என்று கருதுவார்கள் தவிர, இறைவனை வணங்குவதால் தனக்குக் கிடைக்கிற வீடுபேற்றைக்கூட அவர்கள் ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-21
‘ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்’ என்கிறார் சேக்கிழார். அது எப்படி ஓட்டையும் செம்பொன்னையும் ஒன்றாகவே பார்ப்பது என்றால், அதற்கு திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் ஓர் ஆதாரம் இருக்கிறது. நாவுக்கரசரின் பற்றற்ற மனப்பான்மையை வெளிப்படுத்த விரும்பிய இறைவன் ஒரு காரியம் செய்தான். ஆலயங்கள் தோறும் கல்லை அகற்றி புல்லை அகற்றி தன் கையில் இருக்கின்ற உழவாரப் படை கொண்டு உழவாரப் பணிசெய்பவர் திருநாவுக்கரசர். அப்படி மண்ணில் இருக்கிற புல்லையும் கல்லையும் சீர்படுத்திக் கொண்டிருக்க அவர் மண்ணை தோண்டத் தோண்ட ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-20
சேவை மனப்பான்மை மனிதனுடன் ஒட்டிப் பிறந்த ஒரு குணம். அடுத்த உயிர் நலம் பெறும்படி, மகிழ்ச்சி பெறும்படி செய்ய வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்குமே உண்டு. பிறந்து வளர்ந்த சூழ்நிலை, வாழ்கிற சூழல் போன்றவற்றின் அடிப்படையில் அவற்றின் விகிதாச்சாரங்கள் வேறுபடலாமே தவிர உலகின் பெரும்பான்மையான மனிதர்களுக்கு தொண்டு என்கிற உந்துதல் உயிரிலேயே உள்ளது. ஒரு நல்ல தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் இருக்கிறது திருத்தொண்டர் புராணம். இன்று பொதுத்தொண்டு என்ற பெயரால் பலரும் சுயநலப்போக்கில் ...