Blog

/Blog

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-18

சிவகாமி ஆண்டார் பூக்குழலை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல அரசனுடைய பட்டத்து யானை மதம் கொண்டு அந்த பூக்குழலைப் பிடுங்கி காலாலே துவம்சம் செய்கிறது. இறைவனுக்குரிய மலர்கள் இப்படி தெருவில் இறைந்துபட்டனவே என்ற வருத்தத்தில் சிவகாமி ஆண்டார் ஓலக்குரல் எழுப்ப அந்தக் குரல் கேட்டு எறிபத்தநாயனார் அங்கே எழுந்தருள்கிறார். எங்கெல்லாம் சிவனடியாருக்குத் துன்பம் நேர்கிறதோ அங்கெல்லாம் அந்தத் துன்பத்தை நீக்கும் பொருட்டு கையில் மழுவோடு அங்கே சென்று சேருவார் எறிபத்தர். இன்று அவசரப் போலீஸ் என்று அழைக்கக் கூடிய ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-17

அடிப்படையில் சேக்கிழார் அமைச்சராக இருந்தவர். ஆட்சி பொறுப்பின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர். பெரிய புராணத்தில் புகழ்ச்சோழர் போன்ற அரசர்கள் காணப்படுகின்றனர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட நாயன்மார்கள் பெரிய புராணத்தில் பேசப்படுகின்றனர். காவியத்தை எழுதிச்செல்கிறபோதே ஆட்சிப்பொறுப்பின் நுட்பங்களை, நிர்வாகவியல் நுணுக்கங்களை இடம்பெறச் செய்வது சேக்கிழாரின் தனித்த சிறப்புகளில் ஒன்று. எறிபத்தநாயனார் புராணங்களில் அத்தகைய நுட்பங்களை நாம் காண முடியும். சிவகாமி ஆண்டார் என்ற முதிர்ந்த சிவனடியார் தினமும் இறைவனுக்குரிய மலர்களைக் கொய்து பூசனைக்குக் கொண்டு செல்லும் பழக்கம் உடையவர். ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-16

அடிப்படையில் அதற்கு உளவியல் ரீதியாக ஒரு காரணம் உள்ளது. திருவாமூர் என்ற திருத்தலத்தில் அவதரித்தவர் திருநாவுக்கரசர். அப்போது அவருடைய பெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கலிப்பகையார் போரில் இறந்து விடுகிறார். அந்த அதிர்ச்சியில் பெற்றோரும் இறந்து போகின்றனர். தமக்கையாரும் நெருப்பில் இறங்கி உயிர்விட நினைத்தார். தன் தம்பியாகிய மருள்நீக்கியார் அழுவது பொறாமல் அவர் வாழவேண்டும் என்பதற்காக தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்து திருமணம், இல்லறம் என்ற சிந்தை இல்லாமல் ஒரு துறவி ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-15

வழக்கமாக அப்பூதியடிகள் புராணங்களில் பேசப்படுகின்ற விஷயங்களைக் கடந்து அதில் ஒரு சம்பவத்தை நாம் ஆராய்வோமேயானால் சேக்கிழார் ஒரு மிகப் பெரிய உளவியல் அறிஞராக விளங்குவதை அறியலாம். திங்களூர் என்கிற ஊரில் வசித்து வருகிறார் அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் எதிர்பாராத விதமாக அந்த ஊருக்குள்ளே வருகிறார். காணும் இடங்களில் எல்லாம் தன்னுடைய பெயரால் அறப்பணிகள் நிகழ்வதைப் பார்த்து வியப்படைகிறார் திருநாவுக்கரசர். “சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் சந்தமுற வரைந்ததனை எம்மருங்கும் தாம்கண்டார்” என்பது சேக்கிழார் வாக்கு. அங்கிருந்த ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-14

இன்று பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எத்தனையோ உத்திகளைக் கையாளுகின்றனர். பேருந்து நிறுத்தங்கள், நிழற்குடைகள், பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று பார்க்குமிடமெல்லாம் அந்தப் பெயரை தெரியச் செய்வதில் நிறுவனங்கள் மிகுந்த அக்கறை காண்பிக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு இந்தப் பணியைச் செய்கின்றன. ஒரு பெயர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானால் அது அவர்கள் மனதை விட்டு நீங்காது என்பது தொழில் யுகத்தில் வணிகத்தில் ஓர் உத்தியாகக் கருதப்படுகின்றது. இதில் அரசியல் தொண்டர்கள் ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-13

நாயனாரின் பெயரை வைத்தே அவருடைய இயல்பை நாம் புரிந்து கொள்ளும்விதமாக சேக்கிழார் நம்மைத் தயார் செய்கிறார். ஆங்கிலத்தில் Reformist என்றொரு சொல் உண்டு. அதற்கு நேரான தமிழ்ச்சொல் சீர்திருத்தவாதி என்பதாகும். அதே போல Revolutionist என்ற சொல்லும் உண்டு. அதற்கான தமிழ்ச் சொற்கள் புரட்சியாளன், கலகவாதி என்பன. ஆங்கிலத்தில் இன்னும் தீவிரமான சொல் ஒன்று உண்டு Refel என்று. –Refel என்றால் அவன் கலகம் செய்வதுகூட இல்லை. அவனுடைய இயல்பே சமூகம் தனக்கென்று வகுத்திருக்கின்ற நியதிகளுக்கு முரணாக ...
More...More...More...More...