Blog

/Blog

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-1

‘உலகெலாம்’ என்று தொடங்குகிறது பெரியபுராணம். தமிழின் பெரும்பாலான பேரிலக்கியங்கள், ‘உலகம்’ என்ற சொல்லிலேயே தொடங்குகின்றன. “உலகம் உவப்ப” என்று தொடங்கும் திருமுருகாற்றுப் படை, தமிழர்களின் சிந்தனை உலகளாவியதாகவே இருந்திருக்கிறது என்பதன் அடையாளம். “யாதும் ஊரே” என்பதும், “உலகம் உவப்ப” என்பதும், “உலகம் யாவையும்” என்பதும், “உலகெலாம்” என்பதும் வெறும் சொற்றொடர்களில்லை. விரிந்த சிந்தனையின் செறிந்த அடையாளங்கள். உலகம் முழுமைக்குமான சிந்தனைப் பாங்கைப் பொறுத்தவாறு சேக்கிழார் வலியுறுத்தும் சைவம் மேலே ஒரு படி போகிறது. “தென்னாடுடைய சிவனே போற்றி” ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

கண்ணனையே நினைத்து, கண்ணனில் கலந்த ஆண்டாள் இந்த உணர்வின் உச்சம் தொட்டவர். “உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனைக் கண்டக் கால் கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனே” என்கிறார் ஆண்டாள். ஆழ்வார்கள் கண்ணனை இப்படி வெவ்வேறு பாவங்களில் அனுபவித்தனர். அந்த அனுபவங்கள், கண்ணனுக்கும் அவர்களுக்குமான ஏகாந்த உறவை உணர்த்தின. இவர்களுடைய பார்வைக்கும் ஓஷோவின் பார்வைக்கும் என்ன வேறுபாடு? ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

தென்றல் வந்து தீ வீசும். கண்ணன், கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் ஜீவநதி. கண்ணனைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளும், பாகவதமும், மகாபாரதமும் ஏற்படுத்தி ஆழ்வார்களின் அமுத மொழிகள். திருமாலே பரம்பொருள் என்ற தங்களின் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு ஆழ்வார்களின் பாசுரங்கள் தோன்றின. திருமால் வழிபாட்டில் தங்களுக்கு நிகழ்ந்த இறையனுபவத்தின் பிழிவுகள் அந்தப் பனுவல்கள். பரநிலையிலும், வியூக நிலையிலும், திருமாலை உணர்ந்த ஆழ்வார்கள் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சை நிலைகளையும், அவதார நிலைகளையும் சேர்த்தே சிந்தித்தனர். இவற்றில் பூர்ணாவதாரம் என்று ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

டார்வினின் பரிணாமக் கொள்கையின்படி குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றால் அது உடலளவிலான பரிணாமத்தை மட்டுமே குறிக்குமென்றும், ஆன்மா என்று பார்க்கிற போது பசுவின் ஆன்மாவே அடுத்த பரிணாமத்தில் மனித ஆன்மாவாக மலர்கிறது என்றும், காரண காரியங்களோடு ஓஷோ இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார். இராமன் அவதாரம் நிகழும் முன்பே வான்மீகி இராமாயணத்தை எழுதி விட்டதாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. இது குறித்தும் மிக வித்தியாசமான கண்ணோட்டத்தில் ஓஷோ விளக்கம் சொல்கிறார். இராமன், மரபார்ந்த நெறிகளுக்குள் உட்பட்டு வாழ்ந்தவன். இந்த ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

ஓஷோ உணர்த்தும் கண்ணன்-இன்னும் சில குறிப்புகள் பாரதியும் ஓஷோவும் ஒத்துப் போகிற இடங்கள் என்கிற சிறிய பகுதி மட்டுமே இந்த நூலில் சிந்திக்கப்பட்டிருக்கிறது. அதைக் கடந்து முற்றிலும் அபூர்வமான கண்ணோட்டத்தில் பல தகவல்கள் கொண்டு திகழ்கிறது. “Krishna-the man and his pholosophy”. அதன் விஸ்தீரணம் பற்றி நாம் விளங்கிக் கொள்ளும் விதமாக சில தகவல்களைப் பார்க்கலாம். ராமன், கண்ணன் எல்லாம் விஷ்ணுவின் அவதாரம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்ற கேள்வி ஓஷோவிடம் கேட்கப்படுகிறது. ஓஷோவின் ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

பொய்மை-பழி-போன்றவற்றினைச் சொல்வதால் ஏற்படும் குற்ற உணர்வோ கூச்சமோ கண்ணனுக்குக் கிடையாது. அது மட்டுமா? “ஆளுக்கு இசைந்தபடி பேசி – தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாது அடிப்பான்” அத்வைதம்-துவைதம்-வசிஷ்டாத்வைதம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை வலியுறுத்துவார்கள். அந்த அளவுகோல்களுக்குக் கண்ணன் அகப்படத்தான் செய்கிறான். உடனே “என் கடவுளே கடவுள்” என்று ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆகாமல் போய்விடுகிறது. முற்றிலும் வேறொரு மனோநிலையிலிருந்து கண்ணனை பாரதி பார்த்திருப்பதைக் கண்ணன் பாட்டு நமக்குச் சொல்கிறது. ஆகவேதான் கண்ணன் பாட்டு முழுக்க “அர்ச்சுன ...
More...More...More...More...