எட்டயபுரமும் ஓஷோபுரமும்
“குரு எனப்படுபவர் ஒரு கிரியா ஊக்கிதான். அவர்களுடைய இருப்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த அனுபவமே உள்நிலை வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே ஞானக் கண்ணை கண்ணன் கொடுத்தான் என்று அர்ச்சுனன் கருதுவது இயற்கை. ஒரு குருவின் முன்னிலையில் உங்கள் விழிப்பு நிலை உச்சத்தை அடைகிறபோது விசுவரூப தரிசனம் சித்திக்கிறது (279) என்கிறார் ஓஷோ. There are no masters in the world. They are all ctalysts. In the presence of someone, your ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
ஒரு பொருளையோ, ஒரு மனிதரையோ, ஒரு குருவையோ நாம் முழுமையாக ஏற்று, நம்மையே அர்ப்பணிக்கும்போது, ஓர் உள்வெளிப் பயணத்தைத் தொடங்குகிறோம். நம்மிடம் புதைந்து கிடக்கும் அன்பின் முழுமையை வெளிக்கொணர அந்தக் கருவி துணையாகிறது. கண்ணன் என்கிற கருவியை அர்ச்சுனனும் யசோதையும் கைக்கொண்டார்கள். அந்தக் கருவியும் கடவுட் தன்மையின் உச்சமாக விளங்கியதால் அவர்களுக்கு அந்த தரிசனம் கிடைத்தது. அர்ச்சனுக்கும் யசோதைக்கும் மட்டுமல்ல! கண்ணனுக்கு எதிரணியிலேயே காலமெல்லாம் நின்ற கர்ணனுக்கும் விசுவரூப தரிசனம் கிடைத்ததே, இது எப்படி என்று சிந்திக்க ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
கண்ணனை குருவாக அடைகிறவர்களுக்கு நிலையாமை பற்றிய உபதேசம் அல்லவா கிடைக்கும். வானத்திலிருக்கிற வெண்ணிலவைக் காட்டி, இது பொய்யல்ல! இது நிரந்தரமானது! இப்படித்தான் வாழ்க்கையும். இதைப் பொய்யென்று சொல்கிற சாத்திரங்கள்தான் பொய் என்று உபதேசிக்கிறான் கண்ணன். சந்திரன் சோதி உடையதாம் – அது சத்திய நித்திய வஸ்துவாம் – அதைச் சிந்திக்கும் போதினில் வந்துதான் – நின்னைச் சேர்ந்து தழுவி அருள் செய்யும் – அதன் மந்திரத்தால் இவ்வுலகெல்லாம் – வந்த மாயக் களிப்பெரும் கூத்துதான் – இதைச் ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
பொழுது போக்குக்கென்று எத்தனையோ வழிகளை மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். ஆனால் வாழ்வின் ஒவ்வொரு விநாடியுமே கொண்டாட்டமும் ஆனந்தமும் கொப்பளிக்கும் ஜீவஊற்றாகத் திகழுமென்றால் பொழுதுபோக்கு எதற்காக? உண்மையில், எந்தப் பொழுதுமே போக்குவதற்கல்ல. ஆக்குவதற்கான். பணி நிமித்தம், சில இயந்திரத்தனமான கடமைகளில் தொடர்ந்து சில மணிநேரங்கள் இயங்கி விட்டு மாறுதலுக்காக சில நிமிடங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் எந்தப் பயனும் கிடையாது என்கிற பொருளில்தான் ஓஷோ இவ்வாறு சொல்கிறார். We had to find a substitute for celebration and ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
-அவன் காமனைப் போன்ற வடிவமும் – இளம் காளையர் நட்பும் பழக்கமும் – கெட்ட பூமியைக் காக்-கும் தொழிலிலே – எந்தப் போதும் செலுத்திடும் சிந்தையும் ஆடலும் பாடலும் கண்டு நான் – முன்னர் ஆற்றங்கரைதனில் கண்டதோர் – முனி வேடம் தரித்த கிழவரைக் – கொல்ல வேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன்!” ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டால், தன்னோடு தானே மனம் எப்படியெல்லாம் முரண்படும் என்பதை மகாகவி பாரதி இந்தப்பாடலில் வெகு அழகாகச் சித்தரிக்கிறான். ஓர் ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
உண்மையான குருமார்களைக் கோட்டைவிட்டு, வேடதாரிகளிடம் வீழ்ந்து போகிறோம். இதுகுறித்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலரும் எச்சரித்திருக்கிறார். “குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார், குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர், குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழி விழுமாறே” என்கிறார் அவர். பாரதி, கண்ணன் என்கிற குருவைப் பார்த்த மாத்திரத்தில் மனித மனதுக்குள் ஏற்படக் கூடிய எதிர்ப்புணர்ச்சியை அழகானதொரு கவிதைச் சித்திரம் ஆக்குகிறான். சாத்திரங்களையெல்லாம் தேடிபார்த்து, சலித்துப்போய், ஒரு குருவைக் கண்டுபிடிக்கும் ஆசையில் நாடெங்கும் சுற்றி ...




