கவிஞர் இளந்தேவன் – கவியரங்குகளின் களிறு
கவிஞர் இளந்தேவன் தன் 71ஆவது வயதில் காலமானார் என்னும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.கவியரங்குகளைக் கட்டியாண்ட களிறனைய கவிஞர் அவர். இயற்பெயர் முத்துராமலிங்கம்.கணித ஆசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். எம்ஜி.ஆர்.பற்றி அவர் எழுதிய கவிதைகளைக் கண்டு மகிழ்ந்த அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் அருளாளர் ஆர்.எம்.வீரப்பன், அவருக்கு மக்கள் தொடர்பு அலுவலர் பதவி வழங்கினார். பின்னர் தமிழரசு இதழின் ஆசிரியர் உட்பட பல பொறுப்புகள் வகித்தார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆசிக்காலத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் சிறப்பு அலுவலராய் அவர் பணிபுரிந்த கதைகளை ...
எனது கவிதைகள்!
அகமனதுக்குள் ஆழப்புதைந்த விதையிடமிருந்து வெளிவரும் துளிர்களாய் நடந்து கொண்டிருக்கும் நாடகக் காட்சியில் புரிந்தும் புரியாதிருக்கும் புதிர்களாய் திரைகள் விலகிய தரிசனத் தெளிவில் தெறித்துக் கிளம்பிய ஞானப் பரல்களாய் பிரபஞ்ச ரகசியம் தேடிக் கிளம்பிய பாதையில் ஒலிக்கும் புதிய குரல்களாய்… ...
எனது கவிதைகள்!
எனது கவிதைகள்! கரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில் நடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய் குமுறும் அன்பை, கமண்டலத்துக்குள் அடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய், அலைகள் தினமும் அறைந்து போனதில் கரைந்து கிடக்கிற கடற்கரை மணலாய் கல்லடிபட்ட குளத்திடமிருந்து கிளம்பிவருகிற கண்ணீர் வளையமாய்… ...
எனது கவிதைகள்
எனது கவிதைகள் நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய் வேற்றுமுகமின்றி… எதிர்ப்படும் எவரையும் பற்றிக் கொள்கிற பிஞ்சுவிரல்களாய் உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம் உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய் பரிவு வறண்ட பாலைவனத்திடைப் பயணம் மேற்கொள்ளும் பிள்ளையின் தாகமாய்… ...
தரிசனம்
இதற்கு முன்னால் நான் இறைவனாயிருந்தேன். படைத்துக் குவிப்பதும், பராமரிப்பதும் துடைத்து முடிப்பதும் தொழில்களாயிருந்தன. நதிகள், கடல்கள், நிறையத் துப்பினேன். மண், கல் பிசைந்து மலைகள் படைத்தேன், புலர்வதும் மறைவதும் பொழுதுகளென்பதும், மலர்வதும் உதிர்வதும் மலர்களென்பதும் வாய்ப்பாடுகள் போல் வழக்கில் வந்தன. மோதல்கள், காதல்கள், மகிழ்ச்சி, வருத்தம் யாவையும் சுழற்சியின் ஒழுங்கில் இயங்கின. நியதிகளுக்குள்ளே நின்ற உலகத்தில் மெதுமெதுவாய் என்னை மறக்கலாயினர். கோவிலில் என்னைக் கொண்டு போய் வைத்தனர். மீட்க வந்தவரைத் தீயி லெரித்தனர். சடங்குகள் நிறைந்த ...
பின்வழிப் பயணம்
எத்தனை இரவுகள் விடிந்தாலென்ன? எனது கனவுகள் கலைவதாயில்லை. இடைவெளியின்றி இந்த நீளத்தில் எவருக்கும் கனவுகள் வந்திருக்காது. பூமியில் முதன்முதல் புலர்ந்த விடியலைக் கண்கொண்டு பார்த்ததாய்த் தொடங்கிய கனவு யுகங்கள் கடந்த பின்வழிப் பயணமாய் இன்னும் இன்னும் தொடருகின்றது. புத்தர் காலத்தில் தாவரமாக ஏசு காலத்தில் பசுங்கிளியாக எண்ணரும் பிறவிகள் இங்கே இருந்ததாய் மனத்திரைக்குள்ளே சத்திய சாட்சிகள். இரக்கமில்லாத மரணங்கள் முடிந்தும் இறக்க மறுக்கும் என்னுயிருக்கு கைப்பிள்ளைக்குக் காட்டும் பொம்மைபோல் கனவுத் தொடரைக் காட்டி வருகிறேன். இப்போதெழும்பும் ...