Blog

/Blog

நாளையின் அனுபவம்

  நாளைக்கொரு நந்தவனம் போயிருந்தேன் வந்து சேராத நேற்றுகளுக்காக அங்கேதான் நான் காத்திருந்தேன். நாளையின் நந்தவனம் மிக அழகானது நிறம் நிறமாய்க் கற்பனைகள் கண்பறிக்கும் இடமது. நேற்றுகள் கொண்ட மரண தாக்கத்தைத் தணிக்கிற ஊற்று அங்குதான் உள்ளது. “கணகண”வென்ற கனவின் சூட்டுடன் நாளையின் உணவு மேஜையின் விருந்துகள் ஆறிப்போகாத உணவுகளின் வரிசை வந்து சேராத நேற்றுகளுக்காக. நாளையின் நந்தவனம் மர்மங்கள் நிறைந்தது. இன்றென் முகத்தில் துப்பிய காலம் என்னை முத்தமிடப் போவதும் அங்குதான். அடடா! சொல்ல மறந்து ...

சகவாகம்

  பழைய காலத்துப் போர்வாள் ஒன்றை மலர்க் கூடைக்குள் மறைந்திருந்தார்கள். வீரன் ஒருவன் வெறி கொண்டு சுழற்ற குருதிப்புனலில் குளித்து வந்திருக்கும். தேக்கு தேகங்கள் கிழித்த வாளுக்குப் பூக்களின் ஸ்பரிசம் புதிதாயிருக்கும். வாள்முனையிருந்து வருகிற நெடியோ தேனீக்களுக்குத் திகைப்பைக் கொடுக்கும். கூரிய முனையில் வண்டுகள் அமர்ந்தால் கழுவேற்றங்கள் கண்முன் நடக்கும். மலர்க்கூடைக்குள் போர்வாள் போன மர்மமெனக்கு விளங்கவேயில்லை. பூக்களுக்குப் பாதுகாப்பாகவா? களைத்த போர்வாள் கண்ணுறங்கவா? கொடிகளிடம் போய்க் கேட்டுப் பார்த்தேன் வருபவர், செல்பவர், விரலால் தீண்ட… வதங்குகின்றவாம் ...

ஈஷாவின் அருள்மழையே

.                                                                                                  வானமழை சிலுசிலுத்து வழியெங்கும் பூத்தூவ கானமொன்று தென்றலிலே ...

அட்டவணை மனிதர்கள்

  சிறு சிறு டீஸ்பூன் அளவுகளிலேயே பருக வேண்டியதாய்ப் போனது வாழ்க்கை கரைதொடும் பிரவாகம் கண்களில் பட்டால் மிரண்டுபோகிற மனத்துடன் மனிதர்கள். கைகூப்பல்களில் தொடங்கும் அறிமுகம் தோள்தொடும் நட்பாய்த் தொடருவது அபூர்வம். தொலைதூரம் வரை தொடர்புகள் உண்டு. தொடும் தூரத்தில் உறவுகளில்லை. பயன்கருதாத பரிவின் அளவுகள் கால்குலேட்டரின் கணக்கினில் வராது! இதயம் தொலைத்த மனிதர்களெல்லாம் எதைத் தேடுகின்றனர் இன்டர்நெட்டில்? அறிமுக அட்டை பரிமாற்றம்போல் சடங்காய் மாறும் சந்திப்புகள். யாதும் ஊரென்ற பேதையின் ஊரில் கேள்வரும்கூட அந்நியராயினர். தொடவும் ...

தினமொரு தகவல்

ஒவ்வொரு நாளும் உன்னிடம் சொல்ல ஏதேனும் தகவல்கள் என்னிடமிருக்கும். வைகறைப் பூக்களின் வெண்பளித் துளிகளாய்ச் சில்லிடும் தகவல்கள் சேகரித்திருப்பேன். மலர்களைப் பற்றி, குழந்தைகள் பற்றி, கனவுகள் பற்றி, கவிதைகள் பற்றி, தலையணைக்குப் பஞ்சு தேடும் தவிப்புடன் தினமும் தகவல்கள் சேர்ப்பேன். காம்பு களைந்த வார்த்தைகளாகத் தேர்ந்து நேர்ந்து வாக்கியம் செய்வேன். எனக்கு நானே பலமுறை சொல்லி உச்சரிப்பை ஒழுங்குபடுத்துவேன். கிளைச்சொல் எதுவும் நடுவில் முளைத்துன்னைக் காயம் செய்யாமல் கவனமாயிருப்பேன். வண்ணத்துப் பூச்சியாய்ப் படபடக்கிற உன் கண்களைப் பார்த்தே ...

முடியிறக்கம்

  “சர் சர் சர்” என உச்சந் தலையில் சவரக் கத்தியின் சடுகுடு ஆட்டம்; காய்ச்சல் காலத்து நேர்த்திக் கடன்தான் முடியிறக்கத்தின் மூல காரணம்; கொத்துக் கொத்தாய் மடியில் விழுந்த கற்றை மயிர்களைக் கைகளில் அள்ளினேன். அக்கம் பக்கம் அனேகம் பேர்கள் தத்தம் சிகையினைத் தத்தம் செய்தனர். இத்தனை குவியலும் இறைவனுக்கெதற்கு? பக்கத்துவீட்டுப் பையனின் கேள்விக்கு முன்னர் ஒரு முறை சொன்ன பதில்தான் மனதுக்குள்ளே மறுபடி வந்தது; “சாமி இதையெல்லாம் சொர்க்கத்தில் சேர்த்து பூமியில் புதுசாப் பொறக்கப் ...
More...More...More...More...