Blog

/Blog

அழுதுவிடேன்!

உடைந்து போன உன் கனவுகளெல்லாம் சில்லுகளாக சிதறிக் கிடக்கும் தகவல் தெரிந்துதான் வந்திருக்கிறேன். ரணமாய் உறுத்தும் ரகசிய வலிகளைக் காட்டிவிடுகிற கண்கள் உனக்கு. பத்திய உணவு பிடிக்காத குழந்தையாய் அழுகையை அழுத்தும் உதடுகள் மீது இருத்தி வைக்கிற புன்னகை கூட வருத்தத்தைத்தான் வெளிச் சொல்கிறது. பளபளக்கின்ற கண்ணீர்த் திவலையை படபடக்கின்ற இமைகள் மறைக்க, சிலந்தி வலையில் சிக்கிய ஈசலாய் துயரக் குளிரில் துடிக்குமுன் நாசிகள். சரிந்து விழுகிற மணல் வீடென்பது சமுத்திரக் கரையில் சகஜமென்றாலும் சிரமப்பட்டுக் கட்டிய ...

வழியனுப்புதல்

சாயங்கால வெய்யிலாய் உன் முகம் தூங்கச் செல்லும் சூரியன்போல. அஸ்தமன நேரத்து அலுப்பிலும்கூட இதமான வெளிச்சம் இருக்கவே செய்யும். எனினும்… அடடா ஏதுனக்கு ஓய்வு? இன்னொரு பயணம் தொடங்கி விட்டாய் நீ. இன்னோ ருலகின் சூரியனாக. மேற்கு நோக்கிப் போகிற உனக்கு நின்று பேசவும் நேரமிராது. என்கிறபோதும் ஒரேயரு வார்த்தை உனது வானமும் உனது கிழக்கும் வழிபார்த்திருக்கும்… நீ வருகிறவரைக்கும். (இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)   ...

நான் கடிகாரமான போது…

ஒன்று தொடங்கிப் பன்னிரண்டு வரையென் எண்ணங்களையே எண்களாக்கினேன். வட்டம் ஒன்றினுள் வரிசையாய்ப் பொருத்தினேன். ராகு காலங்களை ரத்து செய்து நல்ல நேரங்களை நிலை நிறுத்தினேன். கூரிய முனையில் பூக்கள் மலர்த்திய பார்வையின் கனிவை முட்களாக்கினேன். இதயத்துடிப்பின் எதிரொலி போல “டிக் டிக் டிக்”கெனும் தாள லயத்துடன் “எல்லாக் கணங்களும் இனியவை” என்கிற பாடலை மட்டும் பாடிக் கொண்டு… உன்னுடைய மணிக்கட்டில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.   (இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து) ...

மரங்கள் – சில குறிப்புகள்

எழுதப் படாத என் கவிதையை ரசித்து தூரத்து மரங்கள் தலையசைத்தன. தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக் கட்டுப்படுகிற குழந்தைகள் போல ஒரே சீராகக் கிளைகள் அசைந்தன. பசிய மரங்களின் பேச்சுக் குரலாய் சலசலத்தன தளிர்களும் இலைகளும். நொடிக்கொரு தடவை நிமிர்வதும் வளைவதும் அடிமண்ணுக்குள் ஆழப்பதிவதும் செடியாய் இருக்கும் வரைக்கும் மட்டுமே. வேர்கள் பரப்பிய மரங்களுக்கிங்கே வேலைகள் பெரியதாய் எதுவுமில்லை. நிழலுக்கொதுங்கி நிற்பவர் மீது அக்கறை அலட்சியம் இரண்டுமில்லை. போதி மரங்களை, புளிய மரங்களை, வேப்ப மரங்களை, அரச மரங்களை, ...

மழைமனசு

  அருவிகள் நடந்த வழித்டமிருக்கும் மலையின் மீது தழும்புகள் போல. கரும்பாறைகளின் கசிவின் தடயங்கள் இராணுவ வீரனின் கண்ணீர்போல. மெல்லிய கீற்றாய்ப் பறவையின் பாடல் நேற்றைய கனவின் நிழலைப் போல. மௌனப் பூக்கள் மலர்கிற உச்சியில் கனல்கிற அமைதி கடவுளைப் போல. வெளிப்படாத சௌந்தர்யம் இன்னும் கருவிலிருக்கும் குழந்தையைப் போல. துளையிடப்படாத புல்லாங்குழலில் தூங்குகின்ற இசையைப் போல. இத்தனை அழகிலும் இழையுதென் இதயம் மலைமேல் பெய்கிற மழையைப் போல.   (இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து) ...

கடைசியில் இப்படித்தான்

  பிரிவு நேர்வதை உறுதி செய்கிற விருந்து நமக்கும் ஒருநாள் நிகழலாம். சிற்றுண்டித் தட்டை ஸ்பூனால் கிளறி வெற்றுப் பார்வையில் விநாடிகள் போகலாம். மௌனப் பாறைகள் மனதில் சுமந்து கண்ணீர் மறைத்துக் கதைகள் பேசலாம். மேசை தள்ளி மெள்ள எழுகையில் பேசும் வார்த்தைகள் பாதியில் நிற்கையில் அடர்ந்த பிரியம் கவிழ்ந்த கணங்களின் உக்கிரம் நமது உயிரைப் பிழியலாம். நிபந்தனையில்லாத நட்பின் அடர்த்தியை நினைவுகளாக்கி நாம் விடைபெற நேரலாம். அன்பைத் தொலைத்த அகதியாய், மறுபடி தளர்ந்த நடையிலென் பயணம் ...
More...More...More...More...