Blog

/Blog

கடைசியில் இப்படித்தான்

  பிரிவு நேர்வதை உறுதி செய்கிற விருந்து நமக்கும் ஒருநாள் நிகழலாம். சிற்றுண்டித் தட்டை ஸ்பூனால் கிளறி வெற்றுப் பார்வையில் விநாடிகள் போகலாம். மௌனப் பாறைகள் மனதில் சுமந்து கண்ணீர் மறைத்துக் கதைகள் பேசலாம். மேசை தள்ளி மெள்ள எழுகையில் பேசும் வார்த்தைகள் பாதியில் நிற்கையில் அடர்ந்த பிரியம் கவிழ்ந்த கணங்களின் உக்கிரம் நமது உயிரைப் பிழியலாம். நிபந்தனையில்லாத நட்பின் அடர்த்தியை நினைவுகளாக்கி நாம் விடைபெற நேரலாம். அன்பைத் தொலைத்த அகதியாய், மறுபடி தளர்ந்த நடையிலென் பயணம் ...

சிலை கர்ப்பம்

கல்லைப் புரட்டி நிமிர்த்திய நொடியில் கூரிய முனைகள் குத்தியிருக்கும். சில்லுகள் பட்டு விரல் கிழிந்திருக்கும் சிற்றுளி அழுத்தியே கை சிவந்திருக்கும்; கண்களில் கூடக் கல் தெறித்திருக்ம் கால்களில் பொடித்துகள் நரநரத்திருக்கும். இரவுநேரக் கனவுகள் முழுவதும் அசுரக் கற்கள் ஆக்ரமித்திருக்கும். உணர்விலும், புணர்விலும், ஒவ்வொரு நொடியிலும் சிலையின் கருப்பையாய், மனமிருந்திருக்கும். சிற்பந்தொட்டு வருடிப் பார்த்ததில்… சிற்பியின் அவஸ்தைகள் உறுத்தின எனக்கு. (இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து) ...

வலிமிகும்

கெண்டைக் கால்கள் குறக்களி இழுக்கையில் எந்தக் கடவுளும் என்னுடன் இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு கால்களிலும் பரவிய வேதனை… பெரிய கொடுமை. பகல்நேரத்து ரயில் பயணத்தில் காலிப் பலகையில் கால்கள் நீட்டிய சயன எத்தனத்தில் & அது சட்டென நேர்ந்தது. “கடவுளே கடவுளே” கதறிய படியே நிலைகொள்ளாமல் நெளிந்து தவித்தேன். கால்களிரண்டையும் மெதுவாய் நீவி சாய்ந்துகொள்ளச் செய்தார் ஒருவர். “செத்த நேரந்தான் சரியாய் போயிடும்; பல்லைக் கடிச்சுப் பொறுத்துக் கிடுங்க” ஆதரவாக ஒலித்தது ஒரு குரல். வேதனை ...

நிர்மலம்

வெள்ளைக் காகிதம் வைத்திருக்கிறேன் நான். ஆயிரமாயிரம் எழுத்துக்கள் எழுதியும் இன்னும் வெள்ளையாய் இருக்குதக் காகிதம். உயில்கள், கவிதைகள், ரகசியக் குறிப்புகள், மிரட்டல் கடிதங்கள்கூட எழுதினேன். இறந்து போனவர்கள் எதிர்ப்பட்டபோது எடுத்த பேட்டிகள் அதில்தானிருந்தன. எத்தனை முறை நான் எழுதினாலும் அத்தனை முறையும் அழிந்து போகிறது. படித்துப் பார்த்த “பலான” விமர்சகர் அமரத்துவம் மிக்க படைப்பென்று சொல்லிய பாராட்டுச் சொல் தீரும் முன்பே அமரத்தன்மை அடைந்தவ்வெழுத்து. காலத்தால் அழியாத வரிகளைக் காகிதம் அழிக்கும் கூத்தை என் சொல? காகிதக் ...

பசுக்கள்

என்றைக்கேனும் பசுக்களின் தாய்மை கன்றுகளோடு நின்றதுண்டா? கன்றுகளை வெறும் காரணமாக்கி அன்பைப் பொதுவாய் அளிப்பவை பசுக்கள்; வைக்கோல் கன்றின் வக்கிரம் பொறுத்து மடி சுரக்கின்ற மகத்துவம் போதுமே! உயிர்கள் எதனையும் உதறிவிடுகிற பயங்கர மூர்க்கம் பசுக்களுக்கில்லை: புழுதியில் மலத்தில் புரள்கிற ஈக்கள் முதுகில் அமர்ந்தால் மறுப்பதேயில்லை! அன்பின் மௌனமாய் அமைதியின் கவிதையாய், மண்ணின் முகில்களாய் மலர்ந்தவை பசுக்கள்; மலர்களுக்கிருக்கும் முட்களைப் போலவே பசுக்களின் கொம்புகள் பொருத்தமாயில்லை! (பொருந்தா உறுப்புகள் படைத்த கடவுளை மலர்களும் பசுக்களும் மன்னித்தருளின) தெய்வம் ...

வாழ்க்கை விளையாட்டில்…

என்னுடைய பந்தயம் எவரோடுமில்லை. சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன். மோது களங்களில் மலர்ச்செடி நடுகிறேன். நீதி மொழிகளின் போதனை மேடையாய் சூது களங்களை மாற்றி விடுகிறேன். நடுவர்களேயில்லாத விளையாட்டில் இறங்குகிறேன். உதைபடும் பந்தை ஓடியெடுத்து அரவணைக்கத்தான் ஆசை கொள்கிறேன். வெற்றிக் கோப்பை வேட்டையிலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்க்கிறேன். ஆட்டம் முடிகையில், கூட்டம் கலைகையில், கோப்பைக ளெல்லாம் காலியாய்ப் போகையில்… என்னிடம் மட்டும் எத்தனை இதயங்கள்! (இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து) ...
More...More...More...More...