நீராட வந்த நதி
காமக் கடலலைகள் காதல் முகிலாகி பூமி முழுவதுமே பூத்தூவும் – ஆம் நெஞ்சே! வேகும் தினவெல்லாம் வெந்து தணிந்திருக்கும் போகம் அலுத்துவிட்ட போது. வீட்டுச் சிறைக்குள் வெதும்பும் குருவிக்குக் காட்டுச் சிறகு கொடுத்ததுமே – பாட்டிசைத்து விண்ணில் பறந்தோடி வெண்ணிலவின் மீதேறி மின்னல் இரையெடுக்கு மோ. அழுக்கு மனதின் அணைக்கட்டு தாண்டி வழுக்கி நழுவி வெளியேறி – சழக்கருடன் போராடி, மேனி பழுதாகி, ஆழ்கடலில் நீராட வந்த நதி. நீர்குடித்து & வெய்யில் நலங்குடித்து – மெல்லவே ...
காலம்
காலம் என்கிற சித்திரக்காரனின் கைவசம் உள்ளது தூரிகை – அது காதல் என்கிற சித்திரம் தீட்டிடத் தேவையெல்லாம் ஒரு நாழிகை! அடிமனம் என்கிற திரைச்சீலை மேல் அந்தச் சித்திரம் தோன்றலாம் – ஒரு முடிவில்லாத வடிவத் தொடராய் மோகப் புனைவுகள் நீளலாம்! பருவங்கள் கடந்த பரவசம் காதல் பழைய இலக்கணம் மீறலாம் – அது வருவதும் போவதும் நம்வசம் இல்லை வயதுகள் கடந்தும் பூக்கலாம்! உனக்குள் பூத்த ஒற்றைப் பூவினை ஒளித்து வைக்கவா போகிறாய்-? – அது ...
நிழலின் முதுகில் வெய்யில்
வழிநடைப் பயணத்தின் நிழற்குடைகள் வாழ்க்கை முழுவதும் வருவதில்லை வழியில் பார்க்க நேர்ந்ததென்று விட்டுச் செல்லவும் முடிவதில்லை! தனித்து நிற்கும் குடைகளுக்கும் துணையின் தேவை இருக்கிறது! தயக்கம் தடுக்கும் காரணத்தால் தனிமையில் வாழ்க்கை கழிகிறது! பாதையும் பயணமும் முக்கியமா? பாதியில் பார்த்தவை சரிவருமா? ஏதும் புரியாக் குழப்பத்திலே ஏனோ உள்மனம் அலைகிறது! முடிந்த வரைக்கும் இருந்துவிட்டு மெதுவாய் நகர நினைக்கிறது: கடந்துபோகும் நேரத்திலே கண்கள் குடையை அளக்கிறது! குடையின் தலைமேல் வெய்யில்விழும் கடக்கும் பறவையின் எச்சம் விழும் ‘அடடா’ ...
கண்களில் ஆகாசம்
அத்தனை மென்மையும் சேர்த்து வைத்தாய் – ஓர் அழகி உன்போல் பிறந்ததில்லை! மொட்டுக்கள் திறந்த மலர்களெல்லாம் இத்தனை புதிதாய் இருந்ததில்லை! கொடுப்பதும் எடுப்பதும் யாரென்று கூடல் பொழுதில் தெரியாது இழப்பதும் பெறுவதும் ஏதென்று இரண்டு பேருக்கும் புரியாது! வெளிச்சம் மறைத்த திரைச்சீலை வெட்கத்தில் நடுங்கி அலைபாய அனிச்சப்பூ என் தோள்மீது ஆனந்த அவஸ்தையில் தலை சாய ஒரு நொடிக்குள்ளே அண்டமெல்லாம் ஒடுங்கிப் போனது நமக்குள்ளே ‘சரசர’வென்று ஒரு வேகம் சீறியெழுந்தது எனக்குள்ளே உரசிய உதடுகள் தீப்பிடிக்க உள்ளே ...
இனிமேல் தாங்காது
மூடியிருக்கும் மொட்டைப் போல மௌனம் கூடாது; ஊறியிருக்கும் ஆசை மதுவும் ஆறக் கூடாது; வாடியிருக்கும் மனசைப் பார்த்தும் விலகக் கூடாது – என் வாழ்வின் மழையே இறங்கி வா வா இனிமேல் தாங்காது! மூடமறுக்கும் இமைகள் இரண்டும் துளியும் தூங்காது; மோக போதை ஏறிய நெஞ்சில் தாகம் தீராது; பாடிய கவிதை வரிகளிலே என் பாரம் இறங்காது; பௌர்ணமிப் பெண்ணே வெற்றிக்கோப்பைகள் நீயில்லாமல் வாங்கும் போது ...
எப்படியோ?
பொன்னில் வடித்த சிலைக்குள்ளே – சில பூக்கள் மலர்ந்தது எப்படியோ? என்னை நனைத்த தேனலையே – கரை ஏறிப் போவதும் எப்படியோ? அபிநயக் கண்களின் ஆழத்திலே – நான் அசுர வேகத்தில் மூழ்கிவிட்டேன் சலங்கை ஒலி தந்த தாளத்திலே – என் இதயத் துடிப்பினை மீட்டு வந்தேன்! மின்னல்கள் ஓடிய புன்னகையில் – என் மனதைக் குருடாய்ப் போக்கிவிட்டேன் உன்னைத் தீண்டிய மறுகணமே – சில உலகக் கவிதைகள் ஆக்கிவிட்டேன்! உயிரில் சுரந்த அமுதமெல்லாம் – உன் ...