எப்படியோ?
பொன்னில் வடித்த சிலைக்குள்ளே – சில பூக்கள் மலர்ந்தது எப்படியோ? என்னை நனைத்த தேனலையே – கரை ஏறிப் போவதும் எப்படியோ? அபிநயக் கண்களின் ஆழத்திலே – நான் அசுர வேகத்தில் மூழ்கிவிட்டேன் சலங்கை ஒலி தந்த தாளத்திலே – என் இதயத் துடிப்பினை மீட்டு வந்தேன்! மின்னல்கள் ஓடிய புன்னகையில் – என் மனதைக் குருடாய்ப் போக்கிவிட்டேன் உன்னைத் தீண்டிய மறுகணமே – சில உலகக் கவிதைகள் ஆக்கிவிட்டேன்! உயிரில் சுரந்த அமுதமெல்லாம் – உன் ...
திருப்தியா உனக்கு?
பெருகும் தவிப்பைப் பரிசாய் எனக்குத் தந்து போனதில் திருப்தியா உனக்கு? அருகில் இருந்த வரையில் அடங்கி, நீ இறங்கிப் போனதும் எழுந்தது மிருகம்; நாகரீகம் போர்த்த வார்த்தைகள் மோக வெள்ளத்தில் மூழ்குது சகியே; வரும் புயலுக்கு வேலிகள் தெரியுமா; மனதின் பாஷைக்கு மரபுகள் புரியுமா; நெருங்கியிருந்தும் தூர இருப்பதில் நெருஞ்சிப் புதர்கள் நெருடும் தெரியுமா; உள்ளங்கை வழி இறங்கிய வெப்பம் கன்னம் படர்ந்து கழுத்தில் இறங்கி தேகம் முழுதும் தீயாய் அலைகையில் வேகமெடுத்து வெறிகொளும் நரம்பும்; விரக ...
என்ன செய்ய?
வீரம் ததும்பும் வேட்டை நாயாய்க் குரைப்பது எனக்குச் சுலபம் ஆனபோதும் என்ன செய்ய? ரொட்டித் துண்டில் சபலம்! எனக்கே எனக்கென எழுதும் கவிதைகள் எல்லோருக்கும் பிடித்திருக்கின்றன எல்லோருக்குமாய் எழுதும் கவிதைகள் எனக்கு மட்டுமே பிடித்திருக்கின்றன சொல்ல நினைத்தேன் – சொல்லவில்லை! செய்ய நினைத்தேன் – செய்யவில்லை! வெல்ல நினைத்தேன் – வெல்லவில்லை! வீழ்த்த நினைத்தேன் – வீழ்த்தவில்லை! கொல்ல நினைத்தேன் – கொல்லவில்லை! கொடுக்க நினைத்தேன் – கொடுக்கவில்லை! நிறைய நினைத்தேன் – நிறையவில்லை! ஒன்று நினைத்தேன்… ...
மௌன யுத்தங்கள்
நீ…விட்டுச் சென்ற கவிதை நோட்டின் வெள்ளைப் பக்கங்கள் – என் வாழ்க்கைக்குள்ளே அடிக்கடி நேரும் மௌன யுத்தங்கள் நீ…தொட்டுத் தந்த காகிதத்தில் என்னென்ன வாசங்கள் – அன்று தோன்றும் போதே கனவாய் புகையாய்த் தொலைந்த நேசங்கள் சிப்பிக்குள்ளரு முத்தைப் போல சிநேகம் கொண்டோமே – காலம் தப்பிய பின்னால் திறந்து பார்த்துத் தள்ளிச் சென்றோமே! ஒப்புக்காக விடைபெற்றோமே உள்ளம் கேட்கிறதா – அடி! சிற்பம் போன்ற நினைவுகளை மனம் காவல் காக்கிறதா! எழுதப்படாத பக்கங்கள் இதிலே ஏகம் ...
கடந்து போன காற்று
அத்தனை காலம் வளர்ந்த நம் காதல் ‘சட்’டெனக் கலைந்த அதிர்ச்சியில் போனவன் வருடங்கள் கடந்துன் வீடு வந்திருந்தேன்! வீட்டு வாசலில் இருந்த திண்ணை என்னைப் போலவே இடிந்து போயிருந்தது; முகப்பிலிருந்த ஓடுகள், நமது கனவுகள் போலக் கருகிக் கிடந்தன; முற்றத்தின் மேல் இரும்புக் கம்பிகள், என் உற்சாகம் போல் துருப்பிடித்திருந்தன பின் வாசலின் பீர்க்கங் கொடி மட்டும் உன் நினைவுகள் போல் பசுமையாயிருந்தன அடிக்கடி மனதில் வந்து போகிறது ‘சரசர’வென்று நீ வரைகிற கோலம்; நினைவில் அடிக்கடி ...
பறந்தா போனாய்
கேட்ட நொடியில் கவிதை தரும் கற்பக விருட்சமாய் உன் நினைவு; மீட்டும் யாழின் வடிவினிலே – என் மடியில் கிடப்பதாய் ஒரு கனவு; பௌர்ணமிப் பாடல்கள் பெய்தவளே – எனைப் பாவலனாகச் செய்தவளே! கைநழுவிச் சென்ற காவியமாய் – எனைக் கண்கலங்கச் செய்யும் பொன்மகளே! பாதச் சுவடும் காணவில்லை – நீ பறந்தா போனாய் அஞ்சுகமே? கீதக் கவிதைகள் புனைகையிலே – எங்கோ கானல் நீராய் உன்முகமே! கண்கள் களைக்கத் தேடுகிறேன் – உன்னைக் காணவில்லை உள்ளம் ...