எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-17
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… சூடு பறக்கும் கோடை நாட்களில் அமெரிக்க வெய்யில் அமிலமாய்த் தகிக்கிறது. ஆனாலும் கோடை விடுமுறையை உற்சாகமாகப் போக்குகின்றனர் அமெரிக்கர்கள். அப்படியோர் உல்லாசப் பயணமாய் என் நண்பர்கள் என்னை அழைத்துச் சென்றது, சனன்டோனியா என்னும் கடல் உலகத்திற்கு. டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள சனன்டோனியா நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் விந்தை உலகம். தீம் பார்க் என்கிற விஷயம் நமது நாட்டிலேயே பிரபலமாகிவிட்ட நிலையில், டால்ஃபின் ஷோ, ஸீ&லயன் எனப்படும் கடல் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-16
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… எதிரெதிர் திசைகளில் வருகிற வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று உரசாத வண்ணம், சாலையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும் நீளச்சுவர்கள், சாலையின் மத்தியிலும், இரு புறங்களிலும் படுத்துக் கொண்டே போக்குவரத்தைப் பார்வையிடும் புல்வெளிகள், நகர்ப் புறங்களைக் கடந்து நகரும்போது நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிற மரங்கள், சாலைப் பயணத்திற்கு சுகமான நாடு அமெரிக்கா. ஆயிரக்கணக்கான மைல்களைக் காரில் கடந்தாலும் அலுப்பு வராத வண்ணம் சாலைகள் சமச்சீராக இருக்கின்றன. காரில் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும். ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-15
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… ஜீலை-4 டல்லாஸ் மாநாட்டின் நிறைவு தினம். அன்றுதான் அமெரிக்காவின் சுதந்திரதினம். மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற கலந்துரையாடலின் கருப்பொருள், “ஊடகங்களில் தமிழ்” என்று முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் திரு.தேவ் ஒருங்கிணைத்த இந்தக் கலந்துரையாடலில் இதழியல், காட்சி ஊடகங்கள், இணையதளம் ஆகியவற்றில் தமிழின் நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இளையராஜாவின் “திருவாசகம்” இசைப்பணியை ஒருங்கிணைத்த அருட்திரு ஜெகத் கேஸ்பர், எடுத்த எடுப்பிலேயே “வணிக நோக்கில் செயல்படுவதால் காட்சி ஊடகங்கள் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-14
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… இரவு ஏழு மணி வெய்யிலில் களைத்துப் போய் காரில் ஏறினோம். ஜப்பானிய உணவகம் ஒன்றிற்குப் போகலாம் என்றார் சந்தானம். அங்கே முற்றிலும் புதியதோர் அனுபவம் எங்களுக்கு. உணவு மேசையை ஒட்டியே அடுப்பு அமைந்து இருக்கிறது. பணிப்பெண் ஒருவர் நமக்குத் தேவையான உணவு வகைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டு போனார். சில நிமிடங்கள் கழித்து “ஹாய்” என்ற கூச்சலுடன் ஒரு சிறுவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார் ஜப்பானியர் ஒருவர். வண்டியில் பச்சை மாமிசம், ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-13
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… அமெரிக்காவின் தொன்மையான மாநிலமாகிய டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ், பழமையின் சின்னங்களைக் காப்பாற்றி வைத்திருக்கும் கலையழகு நகரம். ஒற்றை நட்சத்திர அந்தஸ்து கொண்டது டெக்ஸாஸ் மாநிலம். புதிதாய் ஒரு தேசத்திற்குள் போகிறபோது அதன் புறத்தோற்றத்தின் பிரம்மிப்புகள் கொஞ்ச நேரத்தில் அடங்கும். புத்திக்குள் புலனாய்வு ஆர்வமொன்று தொடங்கும். அமெரிக்காவை அப்படி அறிந்து கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாய் டல்லாஸ் அமைந்தது. நாங்கள் தங்கியிருந்த ரெனாய்ஸன்ஸ் நட்சத்திர விடுதியின் வாசலிலேயே ரயில் நிலையமொன்று இருந்தது. உள்ளூர் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-12
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… சினிமா நடிகர்களுக்கு இருக்கும் செல்வாக்கு பற்றியும், அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்களுக்கும் தமிழிலக்கியத்திற்கும் உள்ள இடைவெளி பற்றியும் கவலையோடு பேசினார்கள். ஒருநாள் ஓய்வு. மறுநாள் தமிழகத்தின் மரபு சார்ந்த அம்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அரங்கில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாகிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் மாவட்டத்தில் நடத்திய “தமிழர் திருவிழா 2005”, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, குத்து விளக்கேற்றி, கண் கவரும் கலை நிகழ்ச்சிகளோடு ...