எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-5
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… என் படப்பிடிப்பு அனுபவங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வதில் சக நடிகர் ஒருவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். யார் அந்த நடிகர் என்கிறீர்களா? மதுரைப் பேராசிரியர் டாக்டர்.கு.ஞானசம்பந்தன் தான் அவர்! நான் கஸ்தூரிமான் படத்தில் நடிக்கிறபோது அவர் ‘இதயத்திருடன்’ படத்தில் நடிக்கத் தொடங்கி இருந்தார். இது அவருக்கு இரண்டாவது படம். இதற்குமுன் ‘விருமாண்டி’ படத்தில், ஜல்லிக்கட்டுக்கு நேர்முக வர்ணணையாளராக வந்து “மாட்டுக்கு உடம்பு சரியிலையாம்யா” என்று பேசுவதைப் பார்த்திருப்பீர்கள். தொலைக்காட்சி, வானொலிகளுக்காக டாக்டர் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-4
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… மதியம் இரண்டுமணி. உதவி இயக்குநர் உதயன் என்னைத் தேடி வந்து “பட்சணம் கழிச்சோ” என்று அக்கறையுடன் விசாரித்தார். அவரது விருந்தோம்பலில் நெகிழ்ந்து போய் “கழிச்சு” என்று சொன்னதுமே கழுத்தில் கை வைக்காத குறையாய். “சாருக்கு மேக்கப் இடாம்” என்று தள்ளிக் கொண்டு போய்விட்டார். பத்தே நிமிடங்கள்தான். முத்தையாவைக் காணோம். ஃபாதர் டிக்ரூஸ் நின்று கொண்டிருந்தார். பொதுவாக நடிகர்களென்றால் நரையை மறைக்கக் கறுப்புச் சாயம் பூசுவார்கள். எனக்கோ நரை தடவி நடுத்தர ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-3
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… படப்பிடிப்புக்கு நான் போக வேண்டிய தேதிக்கு ஒருநாள் முன்னதாக மறுபடியும் ஓர் அலைபேசி அழைப்பு. இணை இயக்குனர் மோகன் பையானூர் பேசினார். “சார் மறக்காம மீசையை எடுத்துட்டு வரணும்”. இந்த விஷயத்தை அவர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பாதிரியார் வேடத்திற்காக மீசையை எடுக்க வேண்டும் என்று அவர்கள் முன்பே சொல்லியிருந்தார்கள். முளைத்த நாள் தொடங்கி மழித்திராத மீசையை இழக்க விருப்பமில்லை எனக்கு. ஏதேதோ பழமொழி எல்லாம் நினைவுக்கு வந்தது. பலநாட்கள் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-2
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… ஜூன் மாதம் 2ம்தேதி, நான் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலில் பங்கேற்பது என்றும், ஜூன் மாதம் 4ம் தேதி, படப்பிடிப்பில் கலந்துகொள்வது என்றும், முப்பத்து முக்கோடி தேவர்களும், கின்னரர், கிம்புருடர் உள்ளிட்ட வானுலகத்தின் வேலையில்லாப் பட்டதாரிகளும் நமட்டுச் சிரிப்போடு நிர்ணயித்து இருந்தனர். சூதுவாது தெரியாத கிராமத்துப் பெண்ணை முதலிரவு அறைக்குத் தயார் செய்து அனுப்பும் முஸ்தீபுகளோடு என்னை விசா நேர்காணலுக்கு அனுப்ப ஏகப்பட்ட பேர் தயார் செய்து கொண்டு இருந்தனர். என்னிடம் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-1
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… “காபி சாப்பிடுகிறீர்களா?” இப்படிக் கேட்பது போல சாதாரணமாகத்தான் ஜெயமோகன் என்னிடம் கேட்டார், “சினிமாவில் நடிக்கிறீர்களா?” என்று. “ஓ! சாப்பிடலாமே!” என்பது போலத்தான் நானும் “ஓ! நடிக்கிறேன்!” என்று சொல்லிவிட்டேன். சென்னையில் ஆண்டு தவறாமல் நடக்கிற புத்தகக் கண்காட்சியால் பதிப்பாளர்கள் – படைப்பாளர்கள் – படிப்பாளர்கள் என்று முத்தரப்பினருக்கும் ஏக காலத்தில் பல நன்மைகள் அரங்கேறும். 2005ம் ஆண்டு புத்தக கண்காட்சியில் திரைப்பட உலகத்திற்கும் நடந்த பெரிய நன்மை(!) என்று மேற்கண்ட ...
இணையதளம்
இணையதளம் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் வழியாகவும், உணர்ச்சிமிக்க வசனங்கள் வழியாகவும், அதிரடியான பாடல்கள் வழியாகவும் சமூகத்திற்கு சில முக்கியமான செய்திகள் சொல்லப்படுகின்றன. 1. யாராக இருந்தாலும், என்ன வேலை செய்தாலும் செய்கிற வேலையை மதிக்க வேண்டும். இல்லையென்றால் நமக்கு எது வாழ்க்கை கொடுக்குமோ அதுவே வாழ்க்கையைக் கெடுக்கும். 2. சமூக ஊடகங்களில் எல்லை மீறிய ஈடுபாடு காட்டும் போது அது நம்மை இயக்கத் தொடங்குகிறது. வயது பேதம் அந்தஸ்து பேதமின்றி இந்த போதை ஆட்கொள்ளும். ஆளையும் கொல்லும். ...