Blog

/Blog

வெளியே உலவுங்கள்! வாழ்க்கை எதிர்ப்படலாம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… படிப்பறிவு என்பது அடுத்தவர்கள் எழுதி வைத்த அனுபவங்களை எடைபோட உதவும். பட்டறிவு என்பதோ உங்கள் சொந்த அனுபவங்களைப் புடம்போட உதவும். பழைய காலங்களில் ஒருவருக்கு சந்நியாசம் தரும் முன் காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை தீர்த்த யாத்திரை போகச் சொன்னதன் நோக்கமே வாழ்க்கை அனுபவங்களை விரிவாக்கிக் கொள்ளத்தான். ஓரளவு சாதித்த பிறகு பெரும்பாலானவர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து துண்டித்துக் கொள்கிறார்கள். கால்கள் முளைத்த தீவாக நடமாடுவதன் மூலம் ஒரு மனிதன் தன் உலகத்தைத்தானே ...

நீங்கள் எறிந்த வீணைகள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கைக்குக் கிட்டிய இரும்பு மரத்துண்டு, கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு இசைக்கருவி செய்த இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை ஒன்றுண்டு. குப்பைகளில் கிடந்தவற்றை வைத்து இசைக்கருவி செய்தான் அந்த இளைஞன் என்பதுதான் செய்தியின் சாரம். ஆனால் சுகமான இசை தரும் நல்ல நல்ல வீணைகளை நலங்கெடப் புழுதியில் எறிவதுபோல் பல நல்ல விஷயங்களை நாம் தொலைத்திருப்போம். உடல் நலம், சிறந்த உறவுகள், நல்லவர் நட்பு, என்று பலவற்றை அஜாக்கிரதையால் தொலைந்திருந்தால், விழித்துக் ...

ஓய்வை இழப்பவர்கள் உலகை இழப்பார்கள்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஓய்வு என்றால் உறங்குவது மட்டுமல்ல புலன்கள் இளைப்பாறி புத்துணர்வு கொள்வது. ஊருக்கு வெளியே இயற்கையின் மடியிலோ பரந்து விரிந்த புல்வெளியிலோ கொஞ்ச நேரம் நல்ல இசை கேட்பதோ கூட ஓய்வுதான். வாழ்க்கை பல நேரங்களில் பரபரப்பான ஓட்டத்தை மேற்கொள்ளச் செய்து உங்களை உந்தித்தள்ளுகிறது. அப்போதே நீங்கள் காட்டுகிற நிதானம் உங்களுக்கு நிறைந்த புத்துணர்வை பரிசாகத் தருகிறது. நீங்கள் சக்தியை சேமிக்கும் விதமாய் எதை விரும்பிச் செய்தாலும் ஓய்வுதான். புத்தகம் படிப்பது ...

தபால்போட்டு வருவதல்ல தூக்கம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உடம்புக்குள் ஓடுகிற கடிகாரத்தின் ஓட்டத்தை சரிபார்க்க, சரியான வழி, தூக்கம். மாத்திரை போட்டு, தபால் போட்டு, தூக்கத்தை வரவழைத்தால் உடம்பு நம் வசம் இல்லை என்று பொருள். சரியான உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றுடன் பதட்டமில்லாத, பக்குவமான வாழ்க்கை வேண்டிய அளவு தூக்கத்தை பெற்றுத்தரும். சில நிமிட மதியம் உறக்கம். மகத்தான சுறுசுறுப்பை பெற்றுத் தரும் என்கிறார்கள். உண்மைதான். இரவு குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கமேனும் இருப்பது ஆரோக்கியத்தின் ...

உடம்பே எஜமானன்! உடம்பே அடிமை!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு வயதில் உடம்பு உங்களுக்கு எஜமானன். இன்னொரு வயதில் அதுவே உங்களுக்கு அடிமை. இளமையின் விளிம்பில் இருக்கும் வரை எஜமானராய் உடம்பு இருந்தால் உங்கள் பிடி நழுவுவதாக அர்த்தம். இளமையிலேயே உடம்பை உங்கள் பிடிக்குக் கொண்டு வந்துவிட்டால் நீங்கள் போடும் ஆணைக்கு உடம்பு கட்டுப்படும். இளமையிலேயே யோகப் பயிற்சி உடற்பயிற்சி தியானப் பயிற்சி உணவுக் கட்டுப்பாடு, வேண்டாத பழக்கங்களிலிருந்து விலகி நிற்பது என்பன போன்றகுணங்கள் உங்களை எப்போதும் எஜமானனாகவே வைத்திருக்கும். ...

எத்தனை பழங்கள் திருடினீர்கள்?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… இருக்க இருக்க இறுக்கம் கூடுவதுதான் வாழ்க்கை என்பது சிலருடைய விசித்திரமான கணக்கு. தங்கள் குழந்தைப் பருவத்தில் விடலை வயதில் நடந்த விஷயங்களைக் கூட விகல்ப்பமில்லாமல் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள். பள்ளிக்கு புத்தனாகவே போய் கல்லூரியில் காந்தியாகவே வாழ்ந்தது போல் காட்ட நினைப்பதுண்டு. ஆனால், சின்ன வயதுக்கு குறும்புகளையும் சேட்டைகளையும் இதயத்தில் வைத்திருப்பவர்களே இளமையாய் இருப்பார்கள். அறியாத வயதின் அசகாயக் குறும்புகளுக்கு பெற்ற தண்டனைகள் கூட முன்னே கசக்கும், பின்னே இனிக்கும். ...
More...More...More...More...