Blog

/Blog

கனவில் வருகிற கனவுகள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நிறைவேற்றவேண்டுமென்று நினைக்கின்ற கனவுகளை எல்லா நேரங்களிலும் மனதில் பதித்துக் கொள்வது, முயற்சியின் முக்கிய அம்சம். உங்கள் கனவுகள் மேல் நீங்கள் கொண்டிருக்கும் கரை காணாத காதலின் அடையாளம் இது. தன் இலட்சியம் நோக்கி முழு முனைப்போடும் கவனக் குவிப்போடும் இருக்கிறமனிதன், என்ன கனவு காணுவான்? தன் இலட்சியத்தைத்தான் கனவு காணுவான்? தன் இலட்சியத்தைத்தான் கனவு காணுவான். சில சமயம், பாதியிலேயே இது கனவு என்று புரிந்துவிடுமல்லவா, அப்போதுகூட தன் கனவைக் ...

வயது நடுத்தரம்… வாழ்க்கை?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ‘நடுத்தரம்’ என்பது வயதிலோ வாழ்க்கையிலோ இல்லை. மனதில்தான் இருக்கிறது. சுய முயற்சியால் கையூன்றி மேலே வருகிறமனிதர் வாழ்நாள் முழுவதும் பொருளாதார வெற்றிகளைப் பெற்றுக் கொண்டே இருப்பாரென்று சொல்ல முடியாது. ஆனால் தன் பொருளாதார நிலை பற்றியோ சமூக அந்தஸ்து பற்றியோ தயக்கம் & தாழ்வு மனப்பான்மை & தடுமாற்றம் & தடை ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதே அந்த மனிதரின மனச்செழுமைக்கு மகத்தான அடையாளம். யார் ஒருவருக்கு தன்னுடைய மதிப்பு தெரிகிறதோ அவர் ...

நீங்கள் புதிரா? பதிலா?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சின்ன வயதில் விடுகதைகளைக் கற்றுக் கொடுத்ததன் நோக்கமே, ஒரு புதிர் போடப்பட்ட விநாடியிலிருந்து பதிலைநோக்கி நகர வேண்டும் என்பதற்காகத் தான். கேள்விக்குள்ளேயே வட்டமடித்துக் கொண்டு வாடி நிற்பது ஒருவகை. கேள்வியிலிருந்து பதிலை நோக்கி நகர்வது இன்னொரு வகை. வாழ்க்கை புதிர்போடும் நேரங்களில் எல்லாம் பதிலாக வருகிறீர்களா என்று பாருங்கள். எத்தனை கோணங்களில் முடியுமோ அத்தனை கோணங்களிலும் தேடுங்கள். உங்களை நீங்களே ஒரு கேள்வி கேளுங்கள். தீர்க்க முடியாத பிரச்சினை என ...

வலை விரிக்கும் கவலை

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விரைந்து போகிற வாகனத்தின் ஓட்டத்துக்குத் தடையாய் ஒரு சின்னக் குறையோ அடைப்போ இருக்கலாம். பழுது பார்ப்பவர் அந்தக் குறையை நீக்குவதில் முக்கியத்துவம் காட்டுவார். வாழ்க்கை முயற்சிகளில் ஏதேனும் ஒரு தடை ஏற்படுமேயானால் அந்தத் தடையைத் தாண்டி வருவதற்கான வழியைக் கண்டறிவதே முதல் தீர்வு; முழு தீர்வும் கூட. ஆனால் பெரும்பாலானவர்கள், அப்படியரு தடை ஏற்பட்டுவிட்டதே என்கிறகவலையிலேயே கன்னத்தில் கை வைத்து அமர்ந்துவிடுவார்கள். கன்னத்தில் வைத்த கையை எடுத்தால்தான் தடை நீங்கும் ...

கழித்தால் கூட்டும் புதுக்கணக்கு

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கழிப்பதன் மூலம் கூட்டுவதற்குக் கற்றுக் கொள்வதுதான் உங்கள் தனித்தன்மையை உயர்த்தும். வேண்டாத பழக்கங்களையும் கூடாத உணவு வகைகளையும் கழித்தால், ஆரோக்கியம் கூடும். வேண்டாத குணங்கள் கொண்ட மனிதர்களை தொடர்பிலிருந்து கழித்தால் நிம்மதி கூடும். வேண்டாத அரட்டைகளையும் வீணான கேலிகளையும் கழித்தால் சொந்தங்கள் கூடும். வேண்டாத சந்தேகத்தையும் முகம் சுருக்கும் முன்கோபத்தையும் கழித்தால் சொந்தங்கள் கூடும். கூடுதல் உடல் சுமையை உடற் பயிற்சியாலும் கூடுதல் மனச்சுமையை தியானத்தாலும் கழித்தால் ஆயுள் கூடும். ...

விசால மனது விசாரிக்காது

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… புதிதாய் சந்திப்பவர்களிடம் விசாரிக்கக் கூடாத விஷயங்கள் இரண்டு & சாதி, வியாதி. பொது இடத்தில் வைத்து சராசரி மாணவர்களிடம் விசாரிக்கக் கூடாதது & மதிப்பெண். அதிகம் அறிமுகமாகாத ஆண்களிடம் விசாரிக்கக் கூடாதது & சம்பளம். அதிகம் அறிமுகமில்லாத பெண்களிடம் விசாரிக்கக் கூடாதது & வயது. பெரியவர்களிடம் கேட்கக்கூடாத கேள்வி & பிள்ளைகள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களா? இவையெல்லாம் நாகரீகம் சார்ந்த அம்சங்கள். அதேபோல, வாழ்வில் உயர்ந்த ஒருவர், குறுக்கு வழியில்தான் ...
More...More...More...More...