நீங்கள் நல்லவரா..? கெட்டவரா..?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. இது, கண்ணாடியில் பார்க்கிற போதெல்லாம் நம்முடைய பிம்பம் நம்மைக் கேட்கிற கேள்வி. நம்மைப் பற்றி அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் அவரவர் அபிப்பிராயங்கள். நண்பர்கள் போற்றுவதும் பகைவர்கள் தூற்றுவதும் அவரவர் அபிப்பிராயங்களே தவிர, நாம் யார் என்கிறகேள்விக்கான விடை நமக்கு மட்டுமே தெரியும். தன் பலங்களை மறந்து தன்னைத் தாழ்த்திக் கொண்டவர்கள் ஒருவகை. அவர்கள் அடியவர்களாய் நினைக்கப்படுகிறார்கள். அடக்கத்துக்காகவே மதிக்கப்படுகிறார்கள். தங்கள் பலவீனங்களை உணர மறுப்பவர்கள் இன்னொரு வகை. அவர்கள் அன்றும் இன்றும் ...
பதவிகள் உதறுங்கள்! பொறுப்பில் மலருங்கள்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. எதையும் செய்யாமல் இருக்க வைக்கும் பதவிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று சிவலோக பதவி. இன்னொன்று வைகுந்த பதவி. அதுவரை வகிக்கும் பதவிகள் அனைத்துமே பொறுப்புகள். பொறுப்புகள் என்பவை கடமைகளைக் கட்டமைப்பவை. கடமைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரமும் அங்கீகாரமும் இருப்பதை உணர்த்தவே பொறுப்புகள். அரசியல் தலைவர்களாகட்டும் அதிகாரிகளாகட்டும், பொறுப்புணர்ந்து செயல்படுபவர்களையே காலம் கனிவோடு நினைவு கூர்கிறது. சுகங்களுக்காகவும், சுயநலங்களுக்காகவும் பதவிகளைப் பயன்படுத்துபவர்கள் இனம்காணப்படுகிறார்கள் மறக்கப்படுகிறார்கள். எந்தப் பதவிக்கு வந்தாலும் பதவியில் இருக்கிறோம் என்கிற ...
சுவரைத் தட்டுங்கள்! கதவு திறக்கும்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. தலைநிமிர வேண்டுமென்று தாளாத கனவு துரத்தும் பொழுது தப்புத் தப்பாய் முயற்சி செய்தாவது முன்னேறத் துடிப்போம். இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத்தடுமாறி நண்பன் வீட்டுக்கு வந்த ஒருவன், வாசல் எங்கு என்று தெரியாமல் சுவரைத் தட்டினான். அது வாசலில்லை என்று தெரிந்ததும் சுவரைத் தட்டிக்கொண்டே நகர்ந்தான். ஒரு வழியாய் வாசல் வந்தது. தட்டியவுடன் கதவு திறந்தது. அடித்தளத்திலிருந்து முயலும்போது ஆரம்ப காலத் தடுமாற்றங்களை எவரேனும் ஏளனம் ...
குனிந்து பார்த்தால் குன்றுகள் தெரியும்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. ஒரு சிறுவன் நிலத்தின் மடிமீது நடைபோடும் போது, கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்தாலும் தீராத பிரமிப்பாய் திகழ்பவை குன்றுகள். இவற்றை ஏறிக் கடப்பது எப்படி என்கிற மலைப்பைத் தருவதாலோ என்னமோ மலைகள் என்றவற்றை சொல்கிறோம். அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனாகிறான் வாழ்வில் உயர்பவன் ஒரு நாள் விமானத்தில் செல்கிறான். ஜன்னல் வழியே குனிந்து பார்த்தால் குன்றுகள் தெரிகின்றன. ஒரு காலத்தில் அவன் கண்டு மிரண்ட குன்றுகள், இன்று கடுகுகள் போல் ...
சந்திரனை விலைபேச சூரியனில் இறங்குங்கள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. சூரியனின் ஒளியைப் பெறுவது சந்திரன். அதுபோல் ஒரு நிறுவனத்தின் உச்சநிலையில் இருப்பவர்களின் உத்தரவுகளைப் பெறுபவர்கள் இடைநிலை அதிகாரிகள். ஒரு காரியம் நிகழ வேண்டுமென்றால் சந்திரனை சரிக்கட்ட நேரம் செலவழிப்பீர்களா, அல்லது சூரியனிடம் சொல்லி விடுவீர்களா என்பதில்தான் உங்கள் தொடர்புகளின் வலிமை இருக்கிறது. உச்சத்தில் இருக்கும் மனிதர்களுடன் நீங்கள் எந்த நோக்கமும் இன்றி வளர்த்தெடுக்கும் நட்பு, காரியங்கள் ஆக வேண்டியிருக்கும் போது இயல்பாக கைகொடுக்கும். கீழிருந்து மேல் நோக்கிப் போவது, எப்போதுமே ...
வாசல் அருகே வெற்றியின் செருப்புகள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. முதல் வெற்றி பரவசம் கொடுக்கும் பதட்டமும் கொடுக்கும். பெற்ற வெற்றியால் பரவசமும், அதைத் தக்கவைக்க வேண்டுமே என்ற பதட்டமும் இயல்பு. அடுத்தடுத்து வருகிற வெற்றிகள் அங்குலம் அங்குலமாய் நம்பிக்கை வளர்க்கும். வருகிற வெற்றிகள் எப்படி வந்தன என்கிற சூட்சுமம் உங்களுக்குப் புரிபடுகிறபோது உங்கள் வாழ்க்கையே வெற்றிச் சூத்திரங்களின் விளக்கமாய் மாறிப் போகிறது. சிந்தனையின் சீர்மை, திட்டமிடும் கூர்மை, செயல்படுத்தும் உறுதி ஆகிய அம்சங்கள் அணிவகுக்கும் போது நீங்கள் வெற்றி பெற்றவர் ...




