அற்புதருக்கு நாய்க்குட்டிகளைப் பிடிக்கும். அல்ல அல்ல.. அற்புதருக்கு நாய்க்குட்டிகளையும் பிடிக்கும். ஆனால் அவர் அற்புதராயிருப்பதன் முக்கியக் காரணங்களில் ஒன்று, நாய்க்குட்டிகளுக்கும் அவரைப் பிடிக்கும் என்பதே பலநேரங்களில் அற்புதரின் வாகனக் கதவுகளை திறக்கும்போதெல்லாம் வெண்பந்துபோல் ஒரு…

எல்லோரின் மனவெளிகளிலும் விரிக்கப்பட்டிருந்த மானசீகக் கம்பளங்கள், அற்புதரின் பாதங்கள் பதியும் பொற்கணத்திற்காகக் காத்திருந்தன.பாதங்கள் பதியும் அந்தக் கணத்திலேயே அற்புதங்கள் நிகழுமென்ற எதிர்பார்ப்பும் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.வந்து சேர்ந்த அற்புதரின் பாதங்கள் பூமியின் ஸ்பரிசத்திற்குப் பழகியவை. உலகுக்குத் தர வேண்டிய வரங்கலையெல்லாம்…

எனக்கேது தடையென்று எல்லார்க்கும் சொல்வதுபோல் கணக்கேதும் இல்லாமல் கங்குகரை காணாமல் கைகால்கள் விரித்தபடி கங்கை வருகின்றாள்: நெய்து முடியாத நீள்துகிலாய் வருகின்றாள் நிசிகாட்டும் மையிருளின் நிறம்நீங்கி, செம்பழுப்பாய் அசிகாட்டில் இருந்தவளும் ஆர்ப்பரித்து வருகின்றாள்; புடவைக்குள்…

சத்குரு விட்ட பட்டம்”Oh! Its a long time since i flew a kite” என்று சத்குரு சொன்னபோது ஒளிப்பதிவுக்கருவிகளின் கோணங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள். கங்கைக்கு மேலே பறந்து கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்துக் …

மரபின் மைந்தன் முத்தையாவின்  50ஆவது படைப்பு திருக்கடவூர்  & மரபின் மைந்தனின்  “எழுத்து கருவூலம் (50 நூல்களின் முத்திரை பகுதிகள் ) வெளியீட்டு விழா அழைப்பிதழ் இத்துடன்….. அனைவரும் வருக …… தங்களை அன்புடன்…

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு, ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர். ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது  கவியரசு கண்ணதாசன்…

உன்சுவாசம் என்மூச்சில் இடம்மாறுமே உன் நேசம் என்வாழ்வின் நிறமாகுமே உன் பாஷை நான்கேட்கும் இசையாகுமே உன்வாசம் என்மீது உறவாடுமே வாசனைத் திரவியமே…வா வாலிப அதிசயமே…வா நான்போகும் வழியெங்கும் நிழலாகிறாய் நான்காணும் கனவெங்கும்  நீயாகிறாய் நான்மூடும் போர்வைக்குள் துணையா கிறாய் நான்பாடும் கவிதைக்குள் பொருளா கிறாய்…

வண்ண நிலவுக்கு வாசனை உண்டுன்னு பாடிடத் தோணுதே சின்னப்பொண்ணு -அது மின்னும் அழகினைப் பாக்குறப்போ நெஞ்சில் மின்னல் கிளம்புதே செல்லக்கண்ணு புத்தக அறிவைத் தொட்டுப்புட்டா -அது கண்ணில் தெரிகிற கோளு நித்தமும் வந்து போவதனால்-அது…

பொன்னைத் தேடிப் பொருந்தும் ஒளிபோல் உன்னைத் தேடி உன்குரு வருவார் தன்னைத் தேடித் தனக்குள் சென்றபின் இன்னும் தேட எதுவும் இல்லையே   நீண்ட கிளைகளின் நிழலுக் கடியில் மூண்ட கனல்போல் முனிவர்கள் பிள்ளை…

இந்து சமயத்தின் இணையிலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை குருபீடங்கள்.முப்பதாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான இந்துக்கள் தங்களை ஒரு குருபீடத்துடன் இணைந்திருந்தனர். குலமரபு வழியாகவோ தீட்சை பெற்ற முறையிலோஅத்தகைய தொடர்புகள் அமைந்திருந்தன. அந்தணர்கள் சிருங்கேரி பீடத்துடனோ காமகோடி பீடத்துடனோ…