பரஞானத்துக்கும் அபரஞானத்துக்கும் அடையளமானவை அம்பிகையின் திருமுலைகள். அவை ஓன்றுக்கொன்று இணையாக இறுகியும் இளகியும் முத்துவடம் சூடிய மலைகள் போல் தோன்றி வல்லமை பொருந்திய சிவபெருமானின் திருவுள்ளத்தை ஆட்டுவிக்கும் கொள்கை கொண்டன. இந்த இயல்பு கொண்ட நாயகியின் இடை பாம்பின் படம்போல் இருக்கிறது. குளிர்ந்த மொழிகளைப் பேசுகின்ற அபிராமியின் திருவடிகளில் வேதங்களே சிலம்புகளாகத் தவழ்கின்றன.

இந்தப் பாடலும் அம்பிகையின் திருவுருவை மனதில் பிரதிஷ்டை செய்யக் கூடியதாகும்.

இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கைமலைகொண்டு இறைவர்வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே.

Comments

  1. படைப்பவர் மட்டுமல்ல அறிஞர்.
    படிக்க வைப்பவரும்.நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *