வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

குறட்டைவிடும் பழக்கம் உள்ளவர்களில் அவர், திடீரென்று திடுக்கிட்டு வழிப்பார்கள். வேறொன்றுமில்லை. அவர்களின் குறட்டையே அவர்களை எழுப்பியிருக்கும். அதன்பின் மறுபடி அயர்ந்து தூங்குவார்கள், மறுபடியும் குறட்டை எழுப்பும்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு உட்கார்ந்து யோசிப்பார்கள். எப்போதுமே, நமக்கு, நம்முடைய தவறுகள், அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யும்போது தெரிவதில்லை. நமக்கே தொந்தரவாய் இருக்கும்போதுதான் தீர்வு குறித்து யோசிப்போம்.

குறட்டை மட்டுமல்ல, அசட்டையாய் இருந்து வாழ்வில் பல நல்ல தருணங்களைக் கோட்டை விடுவது கூட அப்படித்தான்.

நம் பலவீனங்கள் நம்மை விதம் விதமாய் அலைக்கழிக்கும் போது, அதிலிருந்து வெளிவர அத்தகைய அனுபவங்களே துணை. அவையே நமக்குத் தூண்டுகோல்.

எனவே, நம் பலவீனங்கள் எச்சரிக்கை மணி எழுப்பும்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

தன்னுடைய தவறை உணர்வது எவ்விதத்திலும் அவமானகரமானதல்ல. அந்தத் தவறை திருத்திக் கொள்ள மறுப்பதுதான் அவமானம். நமது பலவீனங்கள் புரியட்டும். வெளிவரும்பாதை தெரியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *