பூக்கும் வரையில் அரும்பின் நறுமணம் பூமிக்குத் தெரியாது! ஊக்கம்கொண்டவன் உன்மனக் கனவுகள் ஊருக்குப் புரியாது! கருவறைக்குள்ளே குழந்தை வளர்வது கடவுளின் ரகசியம்தான்! தருணம் வரும்வரை பொறுமை காப்பது கனவுக்கும் அவசியம்தான்! எத்தனை காலம் பிடிக்கும்…

வானவெளியில் பறவைக்கு வேலை எதுவும் கிடையாது! ஆன பொழுதும் பறக்கிறதே அது போல் நமக்கேன் முடியாது? கூடு இருப்பது மரக்கிளையில் கொள்ளும் தானியம் சமவெளியில் பாடித் திரிந்து பறப்பதெல்லாம் பரந்து கிடக்கிற வான்வெளியில்! வாழ்க்கை…

மூளை தலைமைச் செயலகம் என்றால் மனம்தான் கருவூலம்! நாளைய வரவும் நாளைய செலவும் இன்றே முடிவாகும்! கண்கள் உளவுத் துறையாய் ஆனால் மனம்தான் காவல்துறை! எண்ணங்கள் நடுவே தீமைகள் புகுந்தால் எழட்டும் அடக்குமுறை! தோள்கள்…

உலகம் என்கிற வெற்றிக் கோப்பை உள்ளது உனக்காக! சிலசில தோல்விகள் வருகையில் உள்ளம் சிதறுவது எதற்காக? வாழ்க்கை வீசும் வேகப்பந்துகள்; வெறிகொண்டு நொறுக்கிவிடு! பாறை போன்றது வாழ்க்கை & அதனை உளிகொண்டு செதுக்கிவிடு! ஆடும்…

பொறுப்பில்லாத மனிதர்க்கு வாழ்க்கை பொம்மலாட்டம் போலிருக்கும் இறுக்கிய கயிறுகள் இழுக்கிற இழுப்பில் கைகால் அசையும் நிலையிருக்கும்! நெருப்பில்லாத மனதுக்கு வாழ்க்கை நாடகம் நடப்பது போலிருக்கும் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாய் நிலை புரியாத வலியிருக்கும்…

சிறுத்தைகள் திரிகிற காடென்று சிறுமான் மேயாதிருப்பதில்லை; குறுகிய கவலையில் வாழ்பவர்கள் குறிக்கோள் என்றும் தொடுவதில்லை. பூமி பரந்தது அதிலுனக்குப் பாதை இருப்பது நிச்சயமே! ஆமை வேகம் உதறிவிட்டு நீயாய் எட்டிடு இலட்சியமே! காலம் எதையும்…

குப்பைகள் உரமாய் ஆகிறபோது கற்பனை நிஜமாய் ஆகாதோ – ஒரு கைப்பிடி தானியம் எறும்புகள் சேர்க்கும் நம்மால் சேமிக்க முடியாதோ? சொந்த முயற்சியில் சிலந்திதன் வலையை செய்துகொள்வதைப் பார்த்தாயோ – நீ சிந்தும் வியர்வையில்…

பூமிப்பந்துடன் கொண்டாடு வயல்களில் முளைவிடும் பயிர்களுக்கு வான்தரும் மழைத்துளி விருதாகும்! வியர்வை விதைக்கும் உழவருக்கு விளைச்சல் முழுவதும் விருதாகும்! முயற்சியை நம்பி உழைப்பவர்க்கு முன்னேற்றங்கள் விருதாகும்! துயரங்கள் துடைத்து எழுபவர்க்கு தொடரும் இன்பங்கள் விருதாகும்!…

வாழ்க்கை என்பது நெடுஞ்சாலை வேகத்தடைகளும் இருக்கலாம் போக்குவரத்து நெரிசலை பார்த்துப் போனால் ஜெயிக்கலாம்! பச்சைவிளக்கு தெரிகையில் பயணம் தொடர்ந்தால் நல்லது லட்சியவிளக்கு தொடும்வரை எரிபொருள் மனதில் உள்ளது! எத்தனை பயணிகள் சாலையில்! எல்லோருக்கும் அவசரம்!…

தீக்குச்சி சிறிது தீட்சண்யம் பெரிது திசைகளில் வெளிச்சமிடும்! நோக்கங்கள் சரியாய் உரசிடும் பொழுது நிச்சயம் வெற்றி வரும்! ஆக்கிடப் போகும் ஆயிரம் பணிகளின் பட்டியல் எழுதிவிடு! போக்கிய பொழுதுகள் போனால் போகட்டும் புதிதாய்ப் பிறந்துவிடு!…