புல்லாங் குழலில் உள்ளது வெற்றிடம் புதிய ஸ்வரங்கள் பிறந்துவிடும் கல்விக்குப் போகும் குழந்தையின் மனதில் காண்பவை எல்லாம் பதிந்துவிடும்! எழுதாப் பலகை ஆகாயம் என எல்லா விடியலும் சொல்கிறது அழகிய நிலவு விண்மீன் கோள்கள்…
காகிதம் போன்றது நம் மனம் காவியம் கூட எழுதலாம் ஓவியத் தூரிகை நம் மனம் உயிரோவியமே வரையலாம் வெற்றுக் கரியைப் பூசவும் வாய்ப்புகள் உண்டு தோழனே சற்றே கவனம் சிதறினால் செயலின் அடிப்படை மாறுமே!…
எல்லாம் புதிதாய்த் தொடங்கவென இன்னொரு வாய்ப்பைத் தேடுகிறோம்; என்றோ செய்த தவறுகளை இன்று திருத்த எண்ணுகிறோம். புதிதாய் முயற்சி தொடங்கிவிட புத்தம் புது நாள் எதற்காக? இதயத்தின் ஆழத்திலும் முழுவிருப்பம் இருந்தால் போதும் நமக்காக!…
நகரும் நிமிடங்கள் முதலீடு -இதில் நஷ்டக் கணக்குகள் கூடாது சிகரம் தொடுவது நம் இலக்கு -இதில் சுணக்கம் என்பதே ஆகாது! முகமில்லாத தினங்களுக்கும் -ஒரு முகவரி கொடுப்பது நம் உழைப்பு பகலும் இரவும் நம்…
மின்னல் வந்து இருள்தின்னும் ஒரு மழைநாள் இரவினிலே ஜன்னல் வழியே பன்னீரைமுகில் சிந்திய வேளையிலே என்ன பண்டிகை வானிலென்றே -நான் எட்டிப் பார்த்தேனா -அட உன்னைத் தானெதிர் பார்த்தேன் என்கிற என்றிடி ஒங்கிச் சிரித்ததடா!…
உனக்கென உள்ளது ஒருலகம் – அதை உருவாக்குவதே உன் கடமை தனக்கெனத் தடைகள் வந்தாலும் -மனம் தளராதிருப்பதே தனிப்பெருமை மனக்கதவுகளைத் திறந்துவிடும் -புது மலர்ச்சியை உள்ளம் உணர்ந்துவிடும் தினம் தினம் முயற்சி தொடர்ந்துவிடும் -உன்…
நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது -அதில் தேவ மூலிகை மணக்கிறது தானாய் ஒருதுளி பருகிவிட்டால் – பின்னர் தேவரும் மூவரும் வரந்தருவார் ஆனால் கைதான்…
பாதைகள் இல்லாப் பாறைகள் வழியே பாய்ந்து வருகிற நதியொன்று! மோதி நடந்து தரையில் விழுந்து மெல்ல வகுக்கும் வழியொன்று! “ஆதரவில்லை எனக்”கெனும் சொல்லை அழித்து நடக்கும் பேராறு! ஏதுமில்லாமல் தொடங்கி ஜெயித்தால் எழுதுமுன் பெயரை…
பல்லவி உலகம் எங்கும் தினம் அழகுபொங்கும் அட எங்கள் தலைமுறையினாலெ மழலை பேசிவரும் மலர்கள் வீசும்மணம் அன்பு நிறைவதனாலே பூமி எங்கள் தாய்மடி வாழச்சொல்லும் வான்வெளி நாடு நகரம் எங்கும் பாடும் பறவைகளாம் நாங்கள்…
நேற்றின் கிழிசல்கள் தைப்பந்து நாளொன்று மலர்ந்தது இன்றைக்கு காற்றில் எழுதிய கனவுகளைக் கைப்பற்றும் காலம் இன்றைக்கு தள்ளிப் போட்டது போதாதே தயங்கி நின்றதும் போதாதே துள்ளி எழுந்துன் இலக்குகளைத் தொட்டிட முனைந்தால் ஆகாதோ? செந்தளிர்ப்…