திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலையின் கலமறுத்தருளி வேங்கைநாடும் கங்கபாடியும் தடிகைபாடியும் நுளம்ப்பாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை யிலக்கமும் முந்நீர்ப்பழந்தீவு…
புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும் சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால் கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே! -நம்பியாண்டர் நம்பிகள் (திருத்தொண்டர் திருவந்தாதி) வீரட்டானத்து…
பாலனாம் மறையோன் பற்றப் பயங்கெடுத் தருளு மாற்றால் மாலுநான் முகனுங் காணா வடிவுகொண் டெதிரே வந்து காலனார் உயிர்செற் றார்க்குக் கமழ்ந்தகுங் குலியத் தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும்பணி தலைநின் றுள்ளார். -சேக்கிழார்…
பெரும்புலர்க் காலைமூழ்கி பித்தர்க்குப் பத்தராகி அரும்பொடு மலர்கள் கொய்து ஆங்குநல் ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத்தூபம் விதியினால் இடவல்லார்க்கு கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே! -திருநாவுக்கரசர் சதுரமறைகள் அரண்செய்யச் சூழ்ந்ததுபோல் சதுர…
“அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர் பணியன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் பிழையோய் போற்றி” -சிலப்பதிகாரம் (மாதவி…
” இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து விளங்கொளி மேனி விரிசடையாட்டி பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றித் தென்திசை பெயர்ந்தவித் தீவத் தெய்வதம் சாகைச் சம்பு தன்கீழ் நின்று மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு வெந்திறல்…
“சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை” – சிலப்பதிகாரம் கடற்காற்றின் குளுமை சதிராடிக் கொண்டிருந்த இளங்காலைப் பொழுதில் திருக்கடவூர் வீதிகளில் கோலமிடத் தொடங்கியது கதிரொளி.வீதிகளெங்கும் மாவிலைகளும் தோரணங்களும் ஒளிபட்டு மின்ன,…
ஆமடா குகையொன்று உள்ளே போகும் ஆயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார் வாமடா காலாங்கி ஐயர் நின்று வல்லவொரு கற்பமெல்லாம் அங்கே தின்றார் ஓமடா எந்தனுக்கும் கற்பம் ஈந்தார் உயர்ந்தவொரு தயிலமெல்லாம் அங்கே ஈந்தார்! -போகர் (போகர்…
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர் ஆழி அளிப்பர் அரிதனக்கன்று ஆனஞ்சு உகப்பர் அறமுரைப்பர் ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறுக்கையர் பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே! -சுந்தரர்…
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே -திருமூலர் மனக்கவலையின் உச்சத்திலிருந்த மிருகண்டு முனிவரின் உள்ளம், தன் பாட்டனாராகிய குச்சகரை…