கவியரசு கண்ணதாசனின் ‘மலர்ந்தும் மலராத பாதிமலர்போல’’ எனும் பாடலை ஸ்லீப்வெல் படுக்கை விளம்பரத்திற்கு தவறான பொருளில் பயன்படுத்தியதைக் கண்டித்து கோவை கண்ணதாசன் கழகம் நடத்திய கண்ணதாசன் விழாவில் மரபின்மைந்தன் முத்தையா…

 மறையா மறைபொருளே; மாதவமே; என்றும் குறையா கருணைக் கடலே- நிறைந்தாயோ! பொன்மேனி தன்னை பழஞ்சட்டை போலுதறி நின்றாயோ எங்கும் நிலைத்து. ஒப்பில் உயர்ஞான உத்தமனே; உண்மைகள் செப்பவே வந்தனை செம்மலே-கப்பலாய் மூட்டைவினை யேற்றி மனிதர்…

ஒருசொல் ஒலித்திடும் சந்நிதியில்-அதை உண்மையில் அவள்தான் சொல்வாள் ஒருபூ உதிர்ந்திடும் பீடந்தனில்-அந்த உன்னதம் அவள்தான் செய்வாள் ஒருவில் தெரியும் செங்கரும்பில்-அதில் ஒருகணை அவள்தான் எய்வாள் ஒருகண் தெரியும் திருநுதலில்-அதில் உறுகனல் வினைமேல் பெய்வாள் குவியும்…

( இதுவும் முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் எழுதியதன் தொகுப்புதான்) ஏவிய அம்பை எதிர்கொள்ளும் போது பீஷ்மர் கொஞ்சம் பதறிப் போனார் உதறித் திரியும் துரியோதனர்க்காய் பதறும் விதுரன் பண்ணுவதென்ன.. வார்ப்படம் செய்தது தருமனைப் படைக்க…

+2 தேர்வு  முடிவுகள் வெளிவந்ததுமே பெற்றோர்களும் மணவர்களும் கூட்டணி அமைத்து உடனடியாக செய்ய வேண்டிய செயல்கள் சில உண்டு. 1) வருகிற தேர்வு முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.மிக மிக அரிதாக,மறு மதிப்பீட்டுக்கு தேவையான…

(முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் கண்ணனைப் பற்றி எழுதிக் கொண்டே வந்த வரிகள் கைகோர்த்து கவிதையாயின) வெண்ணெய் கனவில் கண்ணன் புரள கண்ணன் நினைவில் குழலும் உருள எழுந்த சங்கீதம் எவர்செய் ததுவோ கண்ணன் செவ்வாய்…

பெரிதாய் எதையும் சொல்வதற்கில்லை பெரிதென எதையும் சொல்வதுமில்லை சிறிதாய் எதுவும் தோன்றவுமில்லை சிறுமையும் பெருமையும் அவரவர் எல்லை பொதுவாய் எதையும் சொல்வதற்கில்லை பொதுவெனசொல்பவை பொதுவும் இல்லை நதிநிலம் கடலெதும்நமக்கென இல்லை நாமில்லாமலும் நதிநிலம் இல்லை…

“வீணைகள்” என்னும்சொல்லில் தொடங்கும் விடுகதைகள் எழுதிக் குவிக்கிறேன் ராவண குணத்தின் உருவகமாய் ராட்சச அதிர்வின் எதிரொலியாய் ஆணவத்தால் கயிலாயத்தை அசைத்தவன் சிக்கிய அழுகையாய் மாளிகை தன்னில் மண்டோதரியின் மஞ்சத்தில் எழுகிற விசும்பலாய் அபசுரம் கூட…

திரளும் முகில்கள் தயங்கி நடக்கும் உருளும் தேர்களாய் உயரே அசையும். எந்தப் பரப்பில் எந்த நொடியில் விழுவதென்றே வியூகம் அமைக்கும். சொந்த முடிவா?சந்தர்ப்ப வசமா? எந்த வகையிலோ இறங்கத் தவிக்கும். எம்மழை எவ்விடம்…என்பது எவர்வசம்…

குமுதம் வார இதழில் ‘வைரமுத்து சிறுகதைகள்’ எனும் நெடுந்தொடரைப் பாராட்டி ஜெயகாந்தன் அவர்களின் பெயரிலான கடிதம் வெளிவந்தது தொடர்பான சர்ச்சையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். நான் ஜெ.கே. மீது வழிபாட்டுணர்வு…