Blog

/Blog

இறைவனோடு பொருந்துதல் யோகம்

யோக நெறி, பரந்துபட்ட அளவில் நால்வகைப் பகுப்புகளாக உள்ளன. கர்மயோகம், க்ரியா யோகம், ஞானயோகம், பக்தி யோகம், பக்தி யோகம் ஆகியன அவை. இவை தனித்தனியே பகுக்கப்பட்டாலும் இவற்றின் கலவையே மிக உன்னதமான யோகியை உருவாக்குகிறது. யோக மரபில் ஒரு கதை சொல்வார்கள். குறுகலான அறை ஒன்றில் முதலில் ஒருவர் மழைக்கு ஒதுங்கினார். அவர், ஞானயோகி. சற்று நேரத்தில் இன்னொருவர் வந்தார், அவர் பக்தியோகி. அந்த அறை இருவரை மட்டுமே கொள்ளும். இந்நிலையில் மூன்றாவதாக ஒருவர் வந்தார். ...

யோகியர் அருளிய கருவிகள்

இதிகாசங்களில் தலைமைப் பாத்திரங்களும் சரி, எதிர்நிலைப் பாத்திரங்களும் சரி, யோகியரிடமும், இறைவனிடமும், தேவர்களிடமும் சில கருவிகளைப் பெற்றார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆயுதம் என்னும் சொல்லை நான் பயன்படுத்தாமைக்குக் காரணம், ஆயுதங்கள் மட்டுமே கருவிகள் அல்ல. மந்திர உபதேசங்களும் கருவிகள்தாம்; வரங்களும் கருவிகள்தாம். யோகத் திருக்கோயிலாகிய தியானலிங்கத்தில் அனைத்து சமயத்தினரும் வருகை தருவதுண்டு. அங்கே திருநீறு வைக்கப்பட்டிருக்கும். பிற நாட்டிலிருந்து அங்கே வரும் மற்ற சமயத்தினருக்கு அது குறித்துக் கேள்விகள் எழுவதில்லை. ஆனால் இந்து சமயத்தினர் சிலர், “எல்லோருக்குமான ...

யார் யோகி? – 2

இனி, கம்பனில் மிகவும் புகழ்பெற்ற ஓர் உவமையை இங்கே ஆராய்வது பொருத்தமாக இருக்கும். திருமண மேடையில் இராமனும் சீதையும் தோன்றிய காட்சியை “ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்” என்கிறார் கம்பர். வாழ்வியல் இன்பங்களுக்கும் போகம் என்று பெயர். பேரின்பத்தில் பொருந்துதலாகிய இறையின்பத்திற்கும் போகம் என்று பெயர் “சிவபோகம்” என்பது ஓர் உதாரணம். சிவ போகத்துக்கான பாதை சிவயோகம் ஆகும். உலகியல் ஆனாலும், அருளியல் ஆனாலும், எய்த விரும்பிய இன்பத்தை அடைவதற்கான வழியில் செயல்பட்டு, அந்த இன்பத்தை அடைதல் ...

யார் யோகி? – 1

யோகம் என்னும் சொல்லின் இயல்பை மீண்டும் ஒருமுறை ஆராய்வோம். யோகம் என்றால், ஒருமை, பொருந்துதல் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பதஞ்சலி முனிவரைக் கேட்போம். யோகப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த இயல்பை அடைகிறார்கள் என்கிறார் பதஞ்சலி. “ததா த்ராஷ்டு ஸ்வரூபேஸ வஸ்தானம்” என்பது பதஞ்சலி சூத்திரம். உடல், மனம் என்னும் அடையாளங்களைக் கடந்து தன் சுயசொரூபத்தில் பொருந்தியிருத்தலே யோகம் எனப்படும். அதனால்தான், இராம இலக்குவரை தாடகை வதத்துக்காக அங்க நாட்டிற்கு அழைத்துச் செல்லும் விசுவாமித்திரர், அந்த ...

எது யோகம்?

யோகம் என்றால், பொருந்துதல். ஒன்றுடன் ஒன்று ஒத்திசைதல். தன்னில் தான் பொருத்தி, அதாவது, ஊனும், உயிரும், உணர்வும், சக்தி நிலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில், ஒருமையுள் திளைப்பவர் யோகியர். நொடிகள் ஒவ்வொன்றிலும் முழுவதும் பொருந்தி நிகழ்கணத்தின் சாரம் பருகி வாழும் எவரும் யோகியரே! பாம்பணைப் படுக்கையில் முழுதுணர் அறிதுயிலில், நிகழ்கணத்தின் நிலைபேறாய் விளங்கும் இறைவனின் அவதாரம் நிகழுங்காலை, யோகியர் அவரவர் நெறிநின்று, அவதார நோக்கம் நிறைவேறத் துணை புரிந்தார் என்பதை இராமகாதை காட்டுகிறது. இன்னொரு புறம், ...

யோகியர் தரிசன வாயில்

“எழுத்தும் தோன்றிடும் முன்னே – என்றோ இருந்த கவி மனத்துள்ளே விழித்து எழுந்தது பாடல்” என்பார் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம். எழுத்து பிறக்கும் முன்னே கவிதை பிறந்தது. இந்த வரிகளை எழுதியவர் இறை நம்பிக்கையாளர் இல்லை எனினும், தெரியாத பகுதிக்கு திசைகாட்டும் பலகையென இந்த வரிகள் விரல்நீட்டும் திசை வேறாகத் தெரிகிறது. படைப்பின் மூலசக்தி தோன்றியதன் பின் பிரபஞ்சம் தோன்றிற்று. பின்னர் தொழிற்பட்ட ஒவ்வொன்றிலும் அந்த மூலசக்தியின் துளிகள் துலங்கின. பொதுவுடைமைச் சிந்தனையாளர் ஒருவர் புறவயமாய் எழுதிய வரியன்றிலேயே, வேறு ...
More...More...More...More...