Blog

/Blog
2016 நவராத்திரி – 7

2016 நவராத்திரி – 7

அரணானாள் அன்னை காலம் எனும் பகடை கையில் உருட்டுகிற மூல விடுகதை மோகினி நீ – நீலம் படர்ந்த விழியாலே பராம்மா என்னைத் தொடர்ந்த வினையகலத் தான் வெய்யில் விழிபார்த்தே வேதக் குயில்கூவும்’ கையில் கிளிவைத்த காமினி-வையகம் வாழப் பதம்வைத்து வந்தவளே நின்முன்னே தாழத் தலைதந்த னை. மூசென்னும் வண்டு முரலும் குரல்கேட்டே ஆசு கவிபாட ஆக்கினாய்- ஓசையைப் பொற்றாளம் தன்னில் பொதிந்தளிந்த மாதரசி மற்றாரை நாடும் மனம்? ஒன்பான் இரவுகளில் உன்கோயில் முன்றிலில் நின்றாரைக் காக்கும் ...
2016 நவராத்திரி – 6

2016 நவராத்திரி – 6

                  ஆட்டிப் படைக்கிறவள் அகல்களில் ஒளிர்பவளோ -அவள் ஆனந்த பைரவியோ பகலெனும் பார்வையினால் -என் பவவினை எரிப்பவளோ கொலுமுகம் காண்பவளோ-அவள் குமரியை ஆள்பவளோ நிலவென எழுபவளோ-என் நிழலெனத் தொடர்பவளோ சலங்கையில் அதிர்பவளோ -அவள் சாமுண்டி மலையினளோ கலங்கிடும் பொழுதினிலே-என் கவலைகள் துடைப்பவளோ ஶ்ரீபுரம் ஆள்பவளோ -அவள் சிந்துர நிறத்தினளோ ஶ்ரீசக்ர ரூபிணியோ-என் சிறுமைகள் பொறுப்பவளோ ஏதென்று சொல்லுவதோ-அவள் எங்கெங்கும் நிறைந்தவளோ மாதங்கி மாரியென்றே-இந்த மாநிலம் காப்பவளோ ...
2016 நவராத்திரி – 5

2016 நவராத்திரி – 5

 திருமகள் பெருங்கருணை ஒரு தடவை…ஒரே தடவை உன்விழி என்மேல் படவேண்டும் வரும் தினங்கள் ..வளர்பிறையாய் வாழ்வில் வெளிச்சம் தரவேண்டும் திருமகளே,,,திசைமுழுதும் தனங்கள் வளங்கள் மிகவேண்டும் பெருநிலனில் பயிர்களெல்லாம் பசுமை பொங்கி வரவேண்டும் ஆமொருநாள் பாற்கடலில் அவதரித் தாய்நீ அழகாக பூமியெனும் தாய்மடியில் பிறந்தாய் சீதை வடிவாக பாமாநீ ராதைநீ பாடும் ஆண்டாள் நீதானே நாமசுகம் மீட்டிவந்த நங்கை மீரா நீதானே பாமகளாம் நாமகளும் பாவை உனக்கு மருமகளாம் ஆமையென வந்தவனே அழகில் சிறந்த நாயகனாம் சேமமெலாம் தருபவள்நீ ...
2016 நவராத்திரி – 4

2016 நவராத்திரி – 4

வாழவைப்பாள் என்னை வெண்முகிலில் ஊஞ்சலிடும் வெண்ணிலவின் தோற்றம் வீணையடு வாணிதரும் வாஞ்சையே‘முன்’ னேற்றம் பண்ணழகில் பரதமெனும் பேரழகில் நாட்டும் பாரதியாள் பேரருளைப் பாடும்தமிழ் காட்டும் பூங்கரத்தில் ஜெபமாலை, புத்தெழுத்துச் சுவடி பொற்கரங்கள் வீணையினை பேரருளாய் வருடி ஓங்காரப் பேருருவாய் ஒய்யார அழகி ஓடோடி! வருவாள்என் உயிரோடு பழகி பூசையிடும் வேளையிலே புன்னகைப்பாள் தேவி பூங்குயிலின் குரல்வழியே புதுமொழியில் கூவி ஆசையில் நடனத்திலும் அவளிருப்பாள் மேவி ஆயகலை அத்தனையும் அவள்குளிக்கும் வாவி அண்டமெல்லாம் படைப்பவனே அவளுடைய கணவன் ஆக்கங்கள் ...
2016 நவராத்திரி – 3

2016 நவராத்திரி – 3

  ஆளுவாய் ஆல வாயே!   பூடகப் பொய்கள் பார்த்து புன்னகை செய்து கொள்வாய்; நாடகத் திரைகள் எல்லாம் நாயகீ! நீக்கி வைப்பாய்; ஏடகத்து இருப்பாய்; எங்கள் எழுத்தெலாம் அபகரிப்பாய்; ஆடகப் பொன்னே & நீயே ஆளுவாய் ஆல வாயே! செங்கயல் துள்ளும் வையை செந்தமிழ் அரசீ! நின்றன் பங்கயப் பதம்பணிந்தே பலவினை கரைந்து போகும்; மங்கல வதனம் மின்னும் மௌனத்தின் உரையே வேதம்; அங்கயற் கண்ணி நீயே ஆளுவாய் ஆல வாயே; வேணிக்குள கங்கை கொண்ட ...
2016 நவராத்திரி – 2

2016 நவராத்திரி – 2

பாதங்கள் பற்றினால் பாரங்கள் நீக்கிடும் பைரவி சந்நிதானம் பெருநிலம் காப்பவள் திரிசூலம் மின்னிடப் பொலிவோடு நின்ற கோலம் கீதங்கள் ஒலித்திடும் கோயிலின் வாயிலில் கால்வைக்கும் அந்தநேரம் காருண்யரூபிணி காதோரம் “வா” என்று கூப்பிட்ட வாஞ்சை தோன்றும் “ஈதெங்கள் தாயெ”ன்று ஈஷாவின் அன்பர்கள் இதயத்தில் உன்னை வைத்தோம் ஈரங்கள் விழியோடு நீயெங்கள் மொழியோடு என்றேதான் வாழுகின்றோம் நாதனின் இடபாகம் நிற்கின்ற பைரவி நல்லருள் தர வேண்டுமே நவராத்ரி நாயகி! நின்பதம் போற்றினோம்! நீங்காத துணை வேண்டுமே! ...
More...More...More...More...